June 11, 2012

டாபிக் இல்லாம ஒரு பதிவு......

எப்ப பாத்தாலும் நாம ப்ளாக் எழுதறதுக்கு டாபிக் கெடச்சுறுமா , எல்லாருக்கும் கிடைக்கலாம் பட் எனக்கு கிடைக்கல . சோ அதையே டாபிக்கா மாத்தி ஒரு ப்ளாக் எழுதலாம்னு முடிவு பண்ணியாச்சு .

சமர்ப்பணம் , நன்றி , கிரெடிட்ஸ் அண்டு இத்தியாதி :

நான் டாப்பிக் கிடைக்காம நொந்து போயிருந்தப்ப டாபிக் குடுத்த என்னோட குருநாதர் , மொக்க ராசா , நம்பர் ஒன் ட்விட்டர் கார்க்கிக்கு.......

ப்ளாக் எழுத டாபிக் கிடைக்கலன்னா எழுதறதுக்கு டாபிக் :

1) அரசியல் :

அரசியல்ல எந்த கட்சி ஆட்சில இருக்காங்கன்னு பாருங்க. அந்த கட்சிக்கு ஆதரவா மட்டும் கட்டுரை எழுதாதீங்க . ஆட்சில இல்லாத கட்சிக்கு ஆதரவாவும் எழுதாதீங்க . நீங்க சமூக உணர்வு பொங்குறவரா உங்கள காட்டிகிட்டு ரெண்டு தரப்பு நியாயம் , அநியாயத்தையும் எழுதுங்க . அப்ப தான் உங்கள எல்லாரும் நடுநிலைவாதின்னு சொல்லுவாங்க . அதுவும் அநியாயத்தை பத்தி எழுதுறப்ப சும்மா பொங்கனும் . ஏதோ அந்த கட்சி தலைவர கூண்டுல ஏத்தி நாக்க புடுங்கிக்குற மாதிரி பதிவு எழுதனும் . பட் ஒரே வருத்தம் என்னன்னா அவரு அந்த பதிவ கடைசி வரைக்கும் படிக்க மாட்டாரு .

2)சண்டை :

எங்கையாச்சும் ஏதாச்சும் சண்டை நடக்குதான்னு பாருங்க . போயிட்டு ஏதாச்சும் ஒரு குரூப்ல சேந்துக்கோங்க . பிரச்சனை என்னான்னு உங்களுக்கு தெரியலைன்னாலும் பரவால்ல உங்க எதிர் கோஷ்டிய திட்டி ஒரு பதிவ போடுங்க . அவங்க கண்டுக்கலைன்னா நோ லாஸ் . பட் அவங்க அந்த பதிவ பாத்துட்டு ஏதாச்சும் கமெண்ட் அடிச்சாங்கன்னா ஒடனே அதுக்கு போட்டியா இன்னொரு பதிவ போடுங்க . இப்படியே அவங்க பேச , நீங்க பதிவு போட இது இன்ஃபினிட்டியா கூட போக சான்ஸ் இருக்கு . இத நிறுத்துறதுக்கு ஒரே வழி அவங்க உங்க கால்ல விழனும் , இல்ல நீங்க அவங்க கால்ல விழனும் .

3)ஈயம் :

என்னடா மேல ஈயம் பூசுற வியாவாரி மாதிரி தலைப்பு குடுத்துருக்கனேன்னு பாக்காதீங்க . இது பூசுற ஈயம் கிடையாது . வேற ஈயம் . இதுல ரெண்டு டைப் இருக்கு . ஒண்ணு ஆணியம் , ரெண்டு பெண்ணியம் . ஆணியம்னா ஆம்பளைங்க எல்லாருமே அப்பாவி , பெண்ணியம்னா பொண்ணுங்க எல்லாருமே ஒண்ணுமே அறியாத பச்ச பாப்பாங்க . இப்படி ஏதாச்சும் ஒரு பதிவு போட்டீங்கன்னா உங்க சைடு ஆளுங்க பாக்குறாங்களோ இல்லையோ எதிர் சைடு ஆளுங்க நல்லாவே பாத்துட்டு உங்கள திட்டுவாங்க . அத எல்லாம் மனசுல எடுத்துக்காதீங்க , எதிராளிய ஆயிரம் அடி அடிக்குறப்ப நம்ம மேல ஒரு அடி விழுறது சகஜம் தான் . பட் அவங்க ஆயிரம் அடி அடிச்சு நீங்க ஒரு அடி தான் அடிச்சா அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை .

4)எழுத்தாளர் :

இது தான் இருக்குறதுலையே ரொம்ப ஹாட்டான ஐடியா . ஏதாச்சும் ஒரு புக் எடுத்துக்கோங்க . அந்த புக் உங்களுக்கு புடிச்சாலும் புடிக்காத மாதிரியே ஒரு பதிவ போடுங்க . அப்புறம் அதோட தொடர்ச்சியா என்னை கவர்ந்த பாகங்கள் , கவராத சோகங்கள் இப்படின்னு ஒரு சீரிஸ் எழுதுங்க .

5)எதுவும் தோணலைன்னா :

மேல உள்ள மூணு ஐடியாவும் தோணலைன்னா இன்னொன்னு பண்ணலாம் . அது தான் அடுத்தவன கொல்லுற டெக்னிக் . நீங்க தான் என்னவோ புதுமைபித்தன் இல்ல வைரமுத்து மாதிரியே பீலா விட்டு ஒரு கதை இல்லாட்டி கவிதை எழுதுங்க . அந்த கதைய படிச்சுட்டு எத்தன பேரு வாந்தி , பேதி போகுதுன்னு பாத்துட்டு என் ப்ளாக்கை பார்த்து பயன் அடைந்தவர்கள்னு சொல்லிட்டு புதுசா ஒரு ப்ளாக் எழுதுங்க . ஆனா அந்த ப்ளாக்குல ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் வந்து கமெண்ட் போட்டார்னா எனக்கு தெரியாது .

 டிஸ்கி : 

இதெல்லாம் தவிர்த்து சினிமா விமர்சனம் , ஜோக்ஸ் பதிவுலாம் தனி மேட்டரு . அதுக்கு நமக்கு கொஞ்சம் அறிவு வேணும் அவ்வளவே.......

நான் என் ப்ளாக்குலையும் இப்படி தான் பதிவு போடுறன்னு நினைச்சா உங்களுக்கு அம்னீசியா என்று முடிவு செய்துகொள்க (சாபம்) .

11 comments:

  1. இப்ப எனக்கு என்ன கமென்ட் போடுறதுன்னு தெரியலையே.. அய்யய்ய்யோஒ

    ReplyDelete
  2. @கார்க்கி

    நன்றி குரு படிச்சதுக்கு

    @RealBeenu

    அது என்ன முதல்ல கார்க்கி , அப்புறம் மிஸ்டர் கார்க்கி , அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்கோ..... :)))

    ReplyDelete
  3. அட்ரா சக்கை தோத்தது போ.. சென்னிமலயார் காண்டாவுற சவுண்டு கேக்குது.. எஸ்கேப்..

    ReplyDelete
  4. @ சி.பி.செந்தில்குமார்

    என்னங்கண்ணா டீசண்ட அட்டாக்கா ?? மீ நெம்ப பாவம் யூ நோ ?

    @ பிழைத்திருத்தி

    ஏன்யா அவருக்கும் எனக்கும் என்ன வாய்க்காத்தகராறா என்ன ?? அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. என்னையும் ஒரு பெரும் தலையா மதிச்சு எனக்கு போன் பண்ணி உன் ப்ளாக் பத்தி சொன்னே நண்பா..நீ நெஞ்ச தொட்டுட்டே.. உன்னோட ரைடிங் ஸ்டைல் நல்லா இருக்கு.. என் ப்ளாகுக்கு ( www.riyazonline.com )கெஸ்ட் கட்டுரை ஒன்னு எழுதி கொடு/..

    ReplyDelete
  6. //ரைடிங்// டாக்டர்.. ரியாஸு.. அவரு ரைட்டிங்கா ரைடிங்கா..

    ReplyDelete
  7. நீயெல்லாம் நல்லா வருவடா. . . :)

    ReplyDelete