June 11, 2012

டாபிக் இல்லாம ஒரு பதிவு......

எப்ப பாத்தாலும் நாம ப்ளாக் எழுதறதுக்கு டாபிக் கெடச்சுறுமா , எல்லாருக்கும் கிடைக்கலாம் பட் எனக்கு கிடைக்கல . சோ அதையே டாபிக்கா மாத்தி ஒரு ப்ளாக் எழுதலாம்னு முடிவு பண்ணியாச்சு .

சமர்ப்பணம் , நன்றி , கிரெடிட்ஸ் அண்டு இத்தியாதி :

நான் டாப்பிக் கிடைக்காம நொந்து போயிருந்தப்ப டாபிக் குடுத்த என்னோட குருநாதர் , மொக்க ராசா , நம்பர் ஒன் ட்விட்டர் கார்க்கிக்கு.......

ப்ளாக் எழுத டாபிக் கிடைக்கலன்னா எழுதறதுக்கு டாபிக் :

1) அரசியல் :

அரசியல்ல எந்த கட்சி ஆட்சில இருக்காங்கன்னு பாருங்க. அந்த கட்சிக்கு ஆதரவா மட்டும் கட்டுரை எழுதாதீங்க . ஆட்சில இல்லாத கட்சிக்கு ஆதரவாவும் எழுதாதீங்க . நீங்க சமூக உணர்வு பொங்குறவரா உங்கள காட்டிகிட்டு ரெண்டு தரப்பு நியாயம் , அநியாயத்தையும் எழுதுங்க . அப்ப தான் உங்கள எல்லாரும் நடுநிலைவாதின்னு சொல்லுவாங்க . அதுவும் அநியாயத்தை பத்தி எழுதுறப்ப சும்மா பொங்கனும் . ஏதோ அந்த கட்சி தலைவர கூண்டுல ஏத்தி நாக்க புடுங்கிக்குற மாதிரி பதிவு எழுதனும் . பட் ஒரே வருத்தம் என்னன்னா அவரு அந்த பதிவ கடைசி வரைக்கும் படிக்க மாட்டாரு .

2)சண்டை :

எங்கையாச்சும் ஏதாச்சும் சண்டை நடக்குதான்னு பாருங்க . போயிட்டு ஏதாச்சும் ஒரு குரூப்ல சேந்துக்கோங்க . பிரச்சனை என்னான்னு உங்களுக்கு தெரியலைன்னாலும் பரவால்ல உங்க எதிர் கோஷ்டிய திட்டி ஒரு பதிவ போடுங்க . அவங்க கண்டுக்கலைன்னா நோ லாஸ் . பட் அவங்க அந்த பதிவ பாத்துட்டு ஏதாச்சும் கமெண்ட் அடிச்சாங்கன்னா ஒடனே அதுக்கு போட்டியா இன்னொரு பதிவ போடுங்க . இப்படியே அவங்க பேச , நீங்க பதிவு போட இது இன்ஃபினிட்டியா கூட போக சான்ஸ் இருக்கு . இத நிறுத்துறதுக்கு ஒரே வழி அவங்க உங்க கால்ல விழனும் , இல்ல நீங்க அவங்க கால்ல விழனும் .

3)ஈயம் :

என்னடா மேல ஈயம் பூசுற வியாவாரி மாதிரி தலைப்பு குடுத்துருக்கனேன்னு பாக்காதீங்க . இது பூசுற ஈயம் கிடையாது . வேற ஈயம் . இதுல ரெண்டு டைப் இருக்கு . ஒண்ணு ஆணியம் , ரெண்டு பெண்ணியம் . ஆணியம்னா ஆம்பளைங்க எல்லாருமே அப்பாவி , பெண்ணியம்னா பொண்ணுங்க எல்லாருமே ஒண்ணுமே அறியாத பச்ச பாப்பாங்க . இப்படி ஏதாச்சும் ஒரு பதிவு போட்டீங்கன்னா உங்க சைடு ஆளுங்க பாக்குறாங்களோ இல்லையோ எதிர் சைடு ஆளுங்க நல்லாவே பாத்துட்டு உங்கள திட்டுவாங்க . அத எல்லாம் மனசுல எடுத்துக்காதீங்க , எதிராளிய ஆயிரம் அடி அடிக்குறப்ப நம்ம மேல ஒரு அடி விழுறது சகஜம் தான் . பட் அவங்க ஆயிரம் அடி அடிச்சு நீங்க ஒரு அடி தான் அடிச்சா அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை .

4)எழுத்தாளர் :

இது தான் இருக்குறதுலையே ரொம்ப ஹாட்டான ஐடியா . ஏதாச்சும் ஒரு புக் எடுத்துக்கோங்க . அந்த புக் உங்களுக்கு புடிச்சாலும் புடிக்காத மாதிரியே ஒரு பதிவ போடுங்க . அப்புறம் அதோட தொடர்ச்சியா என்னை கவர்ந்த பாகங்கள் , கவராத சோகங்கள் இப்படின்னு ஒரு சீரிஸ் எழுதுங்க .

5)எதுவும் தோணலைன்னா :

மேல உள்ள மூணு ஐடியாவும் தோணலைன்னா இன்னொன்னு பண்ணலாம் . அது தான் அடுத்தவன கொல்லுற டெக்னிக் . நீங்க தான் என்னவோ புதுமைபித்தன் இல்ல வைரமுத்து மாதிரியே பீலா விட்டு ஒரு கதை இல்லாட்டி கவிதை எழுதுங்க . அந்த கதைய படிச்சுட்டு எத்தன பேரு வாந்தி , பேதி போகுதுன்னு பாத்துட்டு என் ப்ளாக்கை பார்த்து பயன் அடைந்தவர்கள்னு சொல்லிட்டு புதுசா ஒரு ப்ளாக் எழுதுங்க . ஆனா அந்த ப்ளாக்குல ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் வந்து கமெண்ட் போட்டார்னா எனக்கு தெரியாது .

 டிஸ்கி : 

இதெல்லாம் தவிர்த்து சினிமா விமர்சனம் , ஜோக்ஸ் பதிவுலாம் தனி மேட்டரு . அதுக்கு நமக்கு கொஞ்சம் அறிவு வேணும் அவ்வளவே.......

நான் என் ப்ளாக்குலையும் இப்படி தான் பதிவு போடுறன்னு நினைச்சா உங்களுக்கு அம்னீசியா என்று முடிவு செய்துகொள்க (சாபம்) .

June 5, 2012

டேமேஜர்.....

கணேசன் - பிபிஏ முடிச்சுட்டு கொஞ்சம் எம்பி எம்பி எம்.பி.ஏ முடிச்ச நல்லவன் சாரி ரொம்ப நல்லவன் . அதான் படிச்சு முடிச்சாச்சே அப்புறம் என்ன வேலைக்கு சேர வேண்டியது தான் . ஆனா நம்மாளுக்கு வேலைல சேர்றதுக்கு கொஞ்சம் கூட இண்டரஸ்ட்(அட வட்டி இல்ல இது விருப்பம்) இல்ல . அப்புறமா வேலைல சேந்தா தான் கல்யாணம் கட்டி வைப்போம்னு வீட்டுல வெறுப்பேத்துனதால தலைவரு வேலை தேட ஆரம்பிச்சாரு . சரி கல்யாணம் வீட்டுல பண்ணி வைக்கலன்னா லவ் பண்ணி கட்டிக்க வேண்டியது தானன்னு நீங்க என்கிட்ட கேக்குறது எனக்கு புரியுது . பாவங்க நம்ம கணேசன் அவனுக்கு லவ் பேர்ட்ஸ்னா கூட என்னான்னு தெரியாது . நல்ல வேல ஏதோ கொஞ்சம் படிச்ச காலத்துல பொண்ணுங்க பின்னாடி சுத்தாததால வேலை கிடைச்சுடுச்சு.

நம்மாளு வேலைக்கு சேந்த கம்பெனில டேமேஜரா ஐ மீன் மேனேஜரா இருந்தவரு சாரதி . சாரதி கணேசன் மாதிரி கிடையாது , எல்.கே.ஜில ஆரம்பிச்சு 12ப்பு வரைக்கும் வெறியோட படிச்சு இண்டர்வியூல செலெக்ட் ஆகி ஸ்ட்ரைட்டா மேனேஜர் ஆகிட்டாரு . அதனால அன்னைலேந்து அவரு நெம்ப ரிஸ்க் எடுத்து கம்பெனில நல்ல பேரு எடுக்குறன்னு எல்லாரையும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டாரு . அதுவும் இல்லாம டேமேஜர்னா டார்ச்சர் பண்ணனும் இல்லையா ? வழக்கம் போல நம்ம கணேசனும் மாட்டிக்கிட்டான் . நம்ம கணேசன் ஏற்கனவே இண்ட்ரஸ்ட் இல்லாம தான் வேலைல சேந்தான் , இதுல வேலைய ஒழுங்கா செய்ய சொன்னா என்ன நியாயம் ? சோ நம்மாளு வழக்கம் போல ஒழுங்கா ஒழுங்கில்லாமையே வேலைய செஞ்சுகிட்டு இருந்தாரு . நம்மாளு சாரதி வேலை செஞ்சாலே வறுத்தெடுப்பாரு , வேலை செய்யலைன்னா சும்மா விட்டுடுவாரா ? அன்னைக்கு மாட்டுனவன் தான் கணேசன் மூணு மாசம் அந்தாளு டார்ச்சர்ல பயந்து வேலையவே ரிசைன் பண்ணிட்டான் .

அப்புறம் நம்ம கணேசன் ஒர்க் பண்ண பழைய கம்பெனி தட் மீன்ஸ் சாரதி மேனேஜரா ஒர்க் பண்ண கம்பெனி சில பல சொல்ல முடியாத காரணத்துனால திவால் ஆகிடுச்சு . சோ இப்ப சாரதி ரெஸ்யூம எடுத்துகிட்டு கம்பெனி கம்பெனியா அலைய வேண்டிய நிர்பந்தம் . அப்படி அவரு போன முதல் கம்பெனிலையே வேல கன்ஃபர்ம் ஆகிடுச்சு . முதல் நாள் நம்மாளு ஏதோ கம்பெனிய தன்னோடதுங்குற மாதிரி 9 மணிக்கு போற கம்பெனிக்கு 8.30 மணிக்கே போயிட்டாரு . எல்லாம் ஒரு கடமை உணர்ச்சி தான் . அவரு கொடுத்து வச்சவரு அவர் போன நேரமா பாத்து மேனேஜர் ரெண்டு நாள் லீவ் . ரெண்டு நாள் கழிச்சு மேனேஜர் வந்தோன புதுசா வேலைக்கு சேர்ந்தவர பாக்கனும்னு கேட்டாரு . நம்ம சாரதியும் மேனேஜர எப்படியாச்சும் இம்ப்ரஸ் பண்ணனும்னு முடிவெடுத்துகிட்டு ரெண்டு நாள்ல தான் என்ன என்ன பண்ணோம்னு எடுத்துகிட்டு போனாரு . அவரு மேனேஜர் ரூம் கதவ தட்டி மே ஐ கம் இன்னு கேட்டாரு . மேனேஜர் யெஸ் கம் இன்னு சொன்னாரு . அவரு கதவ திறக்க மேனேஜர் ரோலிங் சேர்ல அந்த பக்கம் பாத்துக்கிட்டு இருந்தாரு . நம்ம சாரதி சார்னு கூப்புட்டோன மேனேஜரோட ரோலிங் சேர் சுத்தி சாரதிய பாத்து நின்னுச்சு . நின்னது சேர் மட்டும் இல்ல சாரதியோட ஹார்ட்பீட்டும் தான் . அங்க அங்க அங்க அங்க அத எப்படி என் வாயால சொல்லுவன் ? நம்ம சாரதியோட கண்ணுல தெரிஞ்சது ரோலிங் சேர் . ரோலிங் சேர்ல நம்ம பழைய டரியல் ஆன ஒர்க்கர் கணேசன்.........

May 16, 2012

ட்விட்டப் கலகல - பாகம் 1.......

சென்னையில் மே 13ந்தேதி தமிழ்நாடு அளவிலான ட்விட்டப் நிகழ்ச்சி அடையாறில் உள்ள யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது . கலந்துகொண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் திரும்பினர் . ஏனெனில் அவ்வளவு கலகலப்பாக நடைபெற்றது . அதில் நானும் கலந்து கொண்டேன் . அங்கு எனக்கு நிகழ்ந்த அனுபவங்கள் மற்றும் நான் வாங்கிய கும்மிகள் பற்றிய பதிவே இது.....
இது ரொம்ப சீரியசா இருக்கும்னு நினைக்குறவங்க தயவுசெஞ்சு படிச்சு பாத்துட்டு என்னைய அடிக்க வேண்டாம்................

13ந்தேதி ட்விட்டப்புக்கு வீட்டில் 10ந்தேதியே அனுமதி வாங்கி 1500 பணத்தையும் வாங்கிட்டேன் . 11ந்தேதி போயிட்டு வர்றதுக்கு டிக்கெட்டும் எடுத்துட்டன் . ஆனா நமக்கு தான் ஏழரை நாட்டு சனி முதுகுல ஏறி உக்காந்துக்கிட்டு இறங்க மாட்டன்னு சொல்லுமே . வழக்கம் போல இந்த வாட்டியும் ஒரு ஆப்பு ரெடியாவே இருந்துச்சு . அது என்னான்னா எனக்கு 12ந்தேதி ஒரு பரீட்சை . அத முடிச்சுட்டு தான் சென்னைக்கு கிளம்ப வேண்டிய சூழ்நிலை . நான் ஏற்கனவே ரொம்ப அழகா படிப்பன் . இதுல சென்னைக்கு வேற கிளம்பனும் . கேக்கவா வேணும் நான் எப்படி படிச்சுருப்பன்னு ? அந்த அல்லக்கை எக்சாமுக்கு படிச்சு எப்படியோ ஏனோதானோன்னு எழுதி முடிச்சுட்டு மத்தியானம் 1.45 பஸ்சுக்கு வீட்டுலேந்து 1.30க்கு கிளம்பி கரெக்டா 1.40க்கு பஸ்சுல ஏறிட்டன் . அங்க ஆரம்பிச்சது தான் நம்ம கவுஜ கருப்புக்கு தொல்லை . சென்னைக்கு போய் இறங்கற வரைக்கும் போன் பண்ணி அறுத்துட்டன் (கொசுறு : அண்ணனோட ரூம்ல தான் நான் தங்குறதா ஏற்பாடு) . ஒரு வழியா சென்னை போய் இறங்குனா , அடையாருக்கு வராத , எழும்பூர்க்கு வான்னு கருப்புக்கிட்ட இருந்து போன் . சரி பாசக்கார பயபுள்ளையாச்சேன்னு நானும் எழும்பூர் போய் இறங்குனன் . எழும்பூர்ல பயபுள்ள ரிசீவ் பண்ண வரும்னு பாத்தா வரவே இல்ல . ஒரு 10 நிமிசம் வெட்டியா நின்னுக்கிட்டு இருந்தன் . கருப்பு வந்தோன கருப்பு ரூம்க்கு சாப்புட்டுட்டு கிளம்புனோம் (ஹோட்டல்ல என் சாப்பாட்டுக்கு ஸ்பான்சர் கருப்பு தான் . ) . அப்புறமா கருப்பு ரூமுக்கு போய் தூங்கலாம்னு பாத்தா அங்க தான் ஆரம்பிச்சது கெரகமே . கருப்பு ரூமுக்கு போனதே 11 மணிக்கு தான் . இதுல 12 மணி வரைக்கும் கருப்பு கவுஜ போட்டுட்டு தான் தூங்குவன்னு அடம் புடிச்சுட்டு 12.30 மணி வரைக்கும் கவுஜயை போட்டு அதுக்கு அப்புறமா தான் தூங்க ஆரம்பிச்சோம் . அடுத்த நாள் காலைல எந்திரிச்சா மணி 6.30 தான் ஆகுது . இவ்வளவு சீக்கிரமா எந்திரிக்க கூடாதேன்னு சொல்லிட்டு திருப்பி தூங்க ஆரம்பிச்சா கடைசியில் போன் வந்து தூக்கத்த ரேப் பண்ணிடுச்சு (அதான் கெடுத்துடுச்சு) . அதுக்கு அப்புறம் நானும் கருப்பும் சேந்து டிஃபன்ஸ் காலணி கிரவுண்டுக்கு போய் அங்க கிரிக்கெட் ஆடிக்கிட்டு இருந்த பிரபலங்களோட மிங்கிள் ஆகி ஆட ஆரம்பிச்சோம் . எனக்கு பந்து கூட பொறுக்கி போட தெரியாதுன்னு நான் சொன்னத பொறுட்படுத்தாம வேதாளம் என்னைய பீல்டிங்க்குக்கு எல்லாம் நிப்பாட்டுனாரு . நான் சும்மா உருண்டு ஓடிக்கிட்டு இருந்த பந்த பறந்து பறந்து சேஸ் பண்ணி அதுல ரெண்டு ரன் அவுட் ஆனதுலாம் காலத்தின் கொடுமைகள் . அப்புறம் கிரிக்கெட் ஆடி முடிச்சுட்டு கார்க்கியின் தயவால அவரோட ஏசி கார்ல வந்து திருப்பி அடையார்ல இறங்குனோம் . அங்க போய் கருப்பு ரூம்ல குளிச்சுட்டு(டாய் டாய் டாய்) திருப்பி ஊர் சுத்த ரெடியானோம் . குளிச்சுட்டு வெட்டியா இருந்த நேரத்துல கருப்போட புக்க எல்லாம் எடுத்து பாக்க ஆரம்பிச்சன் . நான் படிக்கிறதுக்கு எடுத்து பாக்கல , எந்த புக்குலேந்து கருப்பு ஞானப்பால் குடிச்சார்னு பாக்கறதுக்கு தான் . அப்ப அங்க என்னோட மண்டைக்குள்ள ஷாக் அடிக்க வச்ச புத்தகம் உலக புகழ்பெற்றன்னு அவர அவரே சொல்லிக்குற மானங்கெட்ட சாரு எழுதுன “ஜீரோ டிகிரி” . (அத ஊருக்கு எடுத்துட்டு வந்து நான் டரியலானது தனி டிராக்) . திருப்பியும் ஊர் சுத்திட்டு கருப்பு ரூமுக்கு ரிட்டன் அடிக்கிறப்ப அங்க நம்ம பிரசன்னா , RJ கோபால் , ஜோசப் செல்வா , சீனு , சைல்டுசின்னா எல்லாம் வந்துருந்தாங்க . சரி பாசகார பயலுக ஆச்சேன்னு போய் பேசுனா எல்லாரும் சேந்து என்னைய கும்ம ஆரம்பிச்சுட்டாங்க . எதுக்குடா அடிக்கிறீங்கன்னு கேட்டா , அதெல்லாம் தெரியாது உன்னைய அடிப்போம்னு திருப்பி அடிக்க ஆரம்பிச்சாங்க . உனக்க் வலிக்கவே இல்லையாடான்னு நீங்க கேக்குறது புரியுது , எவ்வளவோ இடத்துல அடிவாங்கிட்டோம் , நம்ம நண்பங்க தானேன்னு சொல்லிட்டு அடிச்சுட்டு போங்கடான்னு சொல்லிட்டன் (கடைசியில இவ்வளவு அடி அடிச்சுட்டு ஒரு வார்த்த கூடாம போயிட்டாங்க பக்கிங்க.)

டிஸ்கி : இந்த பதிவு ஏற்கனவே ரொம்ப லெந்தா போறதால நான் வாங்குன மொரட்டு அடிய எல்லாம் அடுத்த பதிவுல போடுறன் . அடுத்த பதிவுல தான் ட்விட்டப்ல நடந்த மேட்டர் எல்லாம்.......

கடைசியா இது தான் நான்........