June 5, 2012

டேமேஜர்.....

கணேசன் - பிபிஏ முடிச்சுட்டு கொஞ்சம் எம்பி எம்பி எம்.பி.ஏ முடிச்ச நல்லவன் சாரி ரொம்ப நல்லவன் . அதான் படிச்சு முடிச்சாச்சே அப்புறம் என்ன வேலைக்கு சேர வேண்டியது தான் . ஆனா நம்மாளுக்கு வேலைல சேர்றதுக்கு கொஞ்சம் கூட இண்டரஸ்ட்(அட வட்டி இல்ல இது விருப்பம்) இல்ல . அப்புறமா வேலைல சேந்தா தான் கல்யாணம் கட்டி வைப்போம்னு வீட்டுல வெறுப்பேத்துனதால தலைவரு வேலை தேட ஆரம்பிச்சாரு . சரி கல்யாணம் வீட்டுல பண்ணி வைக்கலன்னா லவ் பண்ணி கட்டிக்க வேண்டியது தானன்னு நீங்க என்கிட்ட கேக்குறது எனக்கு புரியுது . பாவங்க நம்ம கணேசன் அவனுக்கு லவ் பேர்ட்ஸ்னா கூட என்னான்னு தெரியாது . நல்ல வேல ஏதோ கொஞ்சம் படிச்ச காலத்துல பொண்ணுங்க பின்னாடி சுத்தாததால வேலை கிடைச்சுடுச்சு.

நம்மாளு வேலைக்கு சேந்த கம்பெனில டேமேஜரா ஐ மீன் மேனேஜரா இருந்தவரு சாரதி . சாரதி கணேசன் மாதிரி கிடையாது , எல்.கே.ஜில ஆரம்பிச்சு 12ப்பு வரைக்கும் வெறியோட படிச்சு இண்டர்வியூல செலெக்ட் ஆகி ஸ்ட்ரைட்டா மேனேஜர் ஆகிட்டாரு . அதனால அன்னைலேந்து அவரு நெம்ப ரிஸ்க் எடுத்து கம்பெனில நல்ல பேரு எடுக்குறன்னு எல்லாரையும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டாரு . அதுவும் இல்லாம டேமேஜர்னா டார்ச்சர் பண்ணனும் இல்லையா ? வழக்கம் போல நம்ம கணேசனும் மாட்டிக்கிட்டான் . நம்ம கணேசன் ஏற்கனவே இண்ட்ரஸ்ட் இல்லாம தான் வேலைல சேந்தான் , இதுல வேலைய ஒழுங்கா செய்ய சொன்னா என்ன நியாயம் ? சோ நம்மாளு வழக்கம் போல ஒழுங்கா ஒழுங்கில்லாமையே வேலைய செஞ்சுகிட்டு இருந்தாரு . நம்மாளு சாரதி வேலை செஞ்சாலே வறுத்தெடுப்பாரு , வேலை செய்யலைன்னா சும்மா விட்டுடுவாரா ? அன்னைக்கு மாட்டுனவன் தான் கணேசன் மூணு மாசம் அந்தாளு டார்ச்சர்ல பயந்து வேலையவே ரிசைன் பண்ணிட்டான் .

அப்புறம் நம்ம கணேசன் ஒர்க் பண்ண பழைய கம்பெனி தட் மீன்ஸ் சாரதி மேனேஜரா ஒர்க் பண்ண கம்பெனி சில பல சொல்ல முடியாத காரணத்துனால திவால் ஆகிடுச்சு . சோ இப்ப சாரதி ரெஸ்யூம எடுத்துகிட்டு கம்பெனி கம்பெனியா அலைய வேண்டிய நிர்பந்தம் . அப்படி அவரு போன முதல் கம்பெனிலையே வேல கன்ஃபர்ம் ஆகிடுச்சு . முதல் நாள் நம்மாளு ஏதோ கம்பெனிய தன்னோடதுங்குற மாதிரி 9 மணிக்கு போற கம்பெனிக்கு 8.30 மணிக்கே போயிட்டாரு . எல்லாம் ஒரு கடமை உணர்ச்சி தான் . அவரு கொடுத்து வச்சவரு அவர் போன நேரமா பாத்து மேனேஜர் ரெண்டு நாள் லீவ் . ரெண்டு நாள் கழிச்சு மேனேஜர் வந்தோன புதுசா வேலைக்கு சேர்ந்தவர பாக்கனும்னு கேட்டாரு . நம்ம சாரதியும் மேனேஜர எப்படியாச்சும் இம்ப்ரஸ் பண்ணனும்னு முடிவெடுத்துகிட்டு ரெண்டு நாள்ல தான் என்ன என்ன பண்ணோம்னு எடுத்துகிட்டு போனாரு . அவரு மேனேஜர் ரூம் கதவ தட்டி மே ஐ கம் இன்னு கேட்டாரு . மேனேஜர் யெஸ் கம் இன்னு சொன்னாரு . அவரு கதவ திறக்க மேனேஜர் ரோலிங் சேர்ல அந்த பக்கம் பாத்துக்கிட்டு இருந்தாரு . நம்ம சாரதி சார்னு கூப்புட்டோன மேனேஜரோட ரோலிங் சேர் சுத்தி சாரதிய பாத்து நின்னுச்சு . நின்னது சேர் மட்டும் இல்ல சாரதியோட ஹார்ட்பீட்டும் தான் . அங்க அங்க அங்க அங்க அத எப்படி என் வாயால சொல்லுவன் ? நம்ம சாரதியோட கண்ணுல தெரிஞ்சது ரோலிங் சேர் . ரோலிங் சேர்ல நம்ம பழைய டரியல் ஆன ஒர்க்கர் கணேசன்.........

7 comments:

  1. வாழ்க்கை ஒரு வட்டம்டா...

    ReplyDelete
  2. டேய்ய்ய்! இத படிக்காட்டி சோறாடா கெடைக்காது!? ஏண்டா உப்பசம் பண்றீங்க!

    ReplyDelete
  3. http://www.etakkumatakku.com/2012/06/blog-post_05.html

    இங்க வரது.

    இதோ தலைப்பை மாத்தியாச்சி.

    திருப்தியா?

    ReplyDelete
  4. குறும்படமா எடுத்துடு டா... நா ப்ரொட்யூஸ் பண்றேன்...))

    ReplyDelete
  5. ச்சக்சக்சா..ச்சாக்குசா.. ர்ர்ர்ர்..

    ReplyDelete
  6. ச்ச்சக்க்க்சா.. சச்சச்ச்ச்சாக்குசா ..ர்ர்ர்ர் !!!

    ReplyDelete
  7. இன்னும் இந்த டேமேஜருங்கோ ரோலிங் சேர் யூஸ் பண்ணுற பழக்கம் விடவே இல்லையா!!!!

    ReplyDelete