June 11, 2012

டாபிக் இல்லாம ஒரு பதிவு......

எப்ப பாத்தாலும் நாம ப்ளாக் எழுதறதுக்கு டாபிக் கெடச்சுறுமா , எல்லாருக்கும் கிடைக்கலாம் பட் எனக்கு கிடைக்கல . சோ அதையே டாபிக்கா மாத்தி ஒரு ப்ளாக் எழுதலாம்னு முடிவு பண்ணியாச்சு .

சமர்ப்பணம் , நன்றி , கிரெடிட்ஸ் அண்டு இத்தியாதி :

நான் டாப்பிக் கிடைக்காம நொந்து போயிருந்தப்ப டாபிக் குடுத்த என்னோட குருநாதர் , மொக்க ராசா , நம்பர் ஒன் ட்விட்டர் கார்க்கிக்கு.......

ப்ளாக் எழுத டாபிக் கிடைக்கலன்னா எழுதறதுக்கு டாபிக் :

1) அரசியல் :

அரசியல்ல எந்த கட்சி ஆட்சில இருக்காங்கன்னு பாருங்க. அந்த கட்சிக்கு ஆதரவா மட்டும் கட்டுரை எழுதாதீங்க . ஆட்சில இல்லாத கட்சிக்கு ஆதரவாவும் எழுதாதீங்க . நீங்க சமூக உணர்வு பொங்குறவரா உங்கள காட்டிகிட்டு ரெண்டு தரப்பு நியாயம் , அநியாயத்தையும் எழுதுங்க . அப்ப தான் உங்கள எல்லாரும் நடுநிலைவாதின்னு சொல்லுவாங்க . அதுவும் அநியாயத்தை பத்தி எழுதுறப்ப சும்மா பொங்கனும் . ஏதோ அந்த கட்சி தலைவர கூண்டுல ஏத்தி நாக்க புடுங்கிக்குற மாதிரி பதிவு எழுதனும் . பட் ஒரே வருத்தம் என்னன்னா அவரு அந்த பதிவ கடைசி வரைக்கும் படிக்க மாட்டாரு .

2)சண்டை :

எங்கையாச்சும் ஏதாச்சும் சண்டை நடக்குதான்னு பாருங்க . போயிட்டு ஏதாச்சும் ஒரு குரூப்ல சேந்துக்கோங்க . பிரச்சனை என்னான்னு உங்களுக்கு தெரியலைன்னாலும் பரவால்ல உங்க எதிர் கோஷ்டிய திட்டி ஒரு பதிவ போடுங்க . அவங்க கண்டுக்கலைன்னா நோ லாஸ் . பட் அவங்க அந்த பதிவ பாத்துட்டு ஏதாச்சும் கமெண்ட் அடிச்சாங்கன்னா ஒடனே அதுக்கு போட்டியா இன்னொரு பதிவ போடுங்க . இப்படியே அவங்க பேச , நீங்க பதிவு போட இது இன்ஃபினிட்டியா கூட போக சான்ஸ் இருக்கு . இத நிறுத்துறதுக்கு ஒரே வழி அவங்க உங்க கால்ல விழனும் , இல்ல நீங்க அவங்க கால்ல விழனும் .

3)ஈயம் :

என்னடா மேல ஈயம் பூசுற வியாவாரி மாதிரி தலைப்பு குடுத்துருக்கனேன்னு பாக்காதீங்க . இது பூசுற ஈயம் கிடையாது . வேற ஈயம் . இதுல ரெண்டு டைப் இருக்கு . ஒண்ணு ஆணியம் , ரெண்டு பெண்ணியம் . ஆணியம்னா ஆம்பளைங்க எல்லாருமே அப்பாவி , பெண்ணியம்னா பொண்ணுங்க எல்லாருமே ஒண்ணுமே அறியாத பச்ச பாப்பாங்க . இப்படி ஏதாச்சும் ஒரு பதிவு போட்டீங்கன்னா உங்க சைடு ஆளுங்க பாக்குறாங்களோ இல்லையோ எதிர் சைடு ஆளுங்க நல்லாவே பாத்துட்டு உங்கள திட்டுவாங்க . அத எல்லாம் மனசுல எடுத்துக்காதீங்க , எதிராளிய ஆயிரம் அடி அடிக்குறப்ப நம்ம மேல ஒரு அடி விழுறது சகஜம் தான் . பட் அவங்க ஆயிரம் அடி அடிச்சு நீங்க ஒரு அடி தான் அடிச்சா அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை .

4)எழுத்தாளர் :

இது தான் இருக்குறதுலையே ரொம்ப ஹாட்டான ஐடியா . ஏதாச்சும் ஒரு புக் எடுத்துக்கோங்க . அந்த புக் உங்களுக்கு புடிச்சாலும் புடிக்காத மாதிரியே ஒரு பதிவ போடுங்க . அப்புறம் அதோட தொடர்ச்சியா என்னை கவர்ந்த பாகங்கள் , கவராத சோகங்கள் இப்படின்னு ஒரு சீரிஸ் எழுதுங்க .

5)எதுவும் தோணலைன்னா :

மேல உள்ள மூணு ஐடியாவும் தோணலைன்னா இன்னொன்னு பண்ணலாம் . அது தான் அடுத்தவன கொல்லுற டெக்னிக் . நீங்க தான் என்னவோ புதுமைபித்தன் இல்ல வைரமுத்து மாதிரியே பீலா விட்டு ஒரு கதை இல்லாட்டி கவிதை எழுதுங்க . அந்த கதைய படிச்சுட்டு எத்தன பேரு வாந்தி , பேதி போகுதுன்னு பாத்துட்டு என் ப்ளாக்கை பார்த்து பயன் அடைந்தவர்கள்னு சொல்லிட்டு புதுசா ஒரு ப்ளாக் எழுதுங்க . ஆனா அந்த ப்ளாக்குல ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் வந்து கமெண்ட் போட்டார்னா எனக்கு தெரியாது .

 டிஸ்கி : 

இதெல்லாம் தவிர்த்து சினிமா விமர்சனம் , ஜோக்ஸ் பதிவுலாம் தனி மேட்டரு . அதுக்கு நமக்கு கொஞ்சம் அறிவு வேணும் அவ்வளவே.......

நான் என் ப்ளாக்குலையும் இப்படி தான் பதிவு போடுறன்னு நினைச்சா உங்களுக்கு அம்னீசியா என்று முடிவு செய்துகொள்க (சாபம்) .

June 5, 2012

டேமேஜர்.....

கணேசன் - பிபிஏ முடிச்சுட்டு கொஞ்சம் எம்பி எம்பி எம்.பி.ஏ முடிச்ச நல்லவன் சாரி ரொம்ப நல்லவன் . அதான் படிச்சு முடிச்சாச்சே அப்புறம் என்ன வேலைக்கு சேர வேண்டியது தான் . ஆனா நம்மாளுக்கு வேலைல சேர்றதுக்கு கொஞ்சம் கூட இண்டரஸ்ட்(அட வட்டி இல்ல இது விருப்பம்) இல்ல . அப்புறமா வேலைல சேந்தா தான் கல்யாணம் கட்டி வைப்போம்னு வீட்டுல வெறுப்பேத்துனதால தலைவரு வேலை தேட ஆரம்பிச்சாரு . சரி கல்யாணம் வீட்டுல பண்ணி வைக்கலன்னா லவ் பண்ணி கட்டிக்க வேண்டியது தானன்னு நீங்க என்கிட்ட கேக்குறது எனக்கு புரியுது . பாவங்க நம்ம கணேசன் அவனுக்கு லவ் பேர்ட்ஸ்னா கூட என்னான்னு தெரியாது . நல்ல வேல ஏதோ கொஞ்சம் படிச்ச காலத்துல பொண்ணுங்க பின்னாடி சுத்தாததால வேலை கிடைச்சுடுச்சு.

நம்மாளு வேலைக்கு சேந்த கம்பெனில டேமேஜரா ஐ மீன் மேனேஜரா இருந்தவரு சாரதி . சாரதி கணேசன் மாதிரி கிடையாது , எல்.கே.ஜில ஆரம்பிச்சு 12ப்பு வரைக்கும் வெறியோட படிச்சு இண்டர்வியூல செலெக்ட் ஆகி ஸ்ட்ரைட்டா மேனேஜர் ஆகிட்டாரு . அதனால அன்னைலேந்து அவரு நெம்ப ரிஸ்க் எடுத்து கம்பெனில நல்ல பேரு எடுக்குறன்னு எல்லாரையும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டாரு . அதுவும் இல்லாம டேமேஜர்னா டார்ச்சர் பண்ணனும் இல்லையா ? வழக்கம் போல நம்ம கணேசனும் மாட்டிக்கிட்டான் . நம்ம கணேசன் ஏற்கனவே இண்ட்ரஸ்ட் இல்லாம தான் வேலைல சேந்தான் , இதுல வேலைய ஒழுங்கா செய்ய சொன்னா என்ன நியாயம் ? சோ நம்மாளு வழக்கம் போல ஒழுங்கா ஒழுங்கில்லாமையே வேலைய செஞ்சுகிட்டு இருந்தாரு . நம்மாளு சாரதி வேலை செஞ்சாலே வறுத்தெடுப்பாரு , வேலை செய்யலைன்னா சும்மா விட்டுடுவாரா ? அன்னைக்கு மாட்டுனவன் தான் கணேசன் மூணு மாசம் அந்தாளு டார்ச்சர்ல பயந்து வேலையவே ரிசைன் பண்ணிட்டான் .

அப்புறம் நம்ம கணேசன் ஒர்க் பண்ண பழைய கம்பெனி தட் மீன்ஸ் சாரதி மேனேஜரா ஒர்க் பண்ண கம்பெனி சில பல சொல்ல முடியாத காரணத்துனால திவால் ஆகிடுச்சு . சோ இப்ப சாரதி ரெஸ்யூம எடுத்துகிட்டு கம்பெனி கம்பெனியா அலைய வேண்டிய நிர்பந்தம் . அப்படி அவரு போன முதல் கம்பெனிலையே வேல கன்ஃபர்ம் ஆகிடுச்சு . முதல் நாள் நம்மாளு ஏதோ கம்பெனிய தன்னோடதுங்குற மாதிரி 9 மணிக்கு போற கம்பெனிக்கு 8.30 மணிக்கே போயிட்டாரு . எல்லாம் ஒரு கடமை உணர்ச்சி தான் . அவரு கொடுத்து வச்சவரு அவர் போன நேரமா பாத்து மேனேஜர் ரெண்டு நாள் லீவ் . ரெண்டு நாள் கழிச்சு மேனேஜர் வந்தோன புதுசா வேலைக்கு சேர்ந்தவர பாக்கனும்னு கேட்டாரு . நம்ம சாரதியும் மேனேஜர எப்படியாச்சும் இம்ப்ரஸ் பண்ணனும்னு முடிவெடுத்துகிட்டு ரெண்டு நாள்ல தான் என்ன என்ன பண்ணோம்னு எடுத்துகிட்டு போனாரு . அவரு மேனேஜர் ரூம் கதவ தட்டி மே ஐ கம் இன்னு கேட்டாரு . மேனேஜர் யெஸ் கம் இன்னு சொன்னாரு . அவரு கதவ திறக்க மேனேஜர் ரோலிங் சேர்ல அந்த பக்கம் பாத்துக்கிட்டு இருந்தாரு . நம்ம சாரதி சார்னு கூப்புட்டோன மேனேஜரோட ரோலிங் சேர் சுத்தி சாரதிய பாத்து நின்னுச்சு . நின்னது சேர் மட்டும் இல்ல சாரதியோட ஹார்ட்பீட்டும் தான் . அங்க அங்க அங்க அங்க அத எப்படி என் வாயால சொல்லுவன் ? நம்ம சாரதியோட கண்ணுல தெரிஞ்சது ரோலிங் சேர் . ரோலிங் சேர்ல நம்ம பழைய டரியல் ஆன ஒர்க்கர் கணேசன்.........

May 16, 2012

ட்விட்டப் கலகல - பாகம் 1.......

சென்னையில் மே 13ந்தேதி தமிழ்நாடு அளவிலான ட்விட்டப் நிகழ்ச்சி அடையாறில் உள்ள யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது . கலந்துகொண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் திரும்பினர் . ஏனெனில் அவ்வளவு கலகலப்பாக நடைபெற்றது . அதில் நானும் கலந்து கொண்டேன் . அங்கு எனக்கு நிகழ்ந்த அனுபவங்கள் மற்றும் நான் வாங்கிய கும்மிகள் பற்றிய பதிவே இது.....
இது ரொம்ப சீரியசா இருக்கும்னு நினைக்குறவங்க தயவுசெஞ்சு படிச்சு பாத்துட்டு என்னைய அடிக்க வேண்டாம்................

13ந்தேதி ட்விட்டப்புக்கு வீட்டில் 10ந்தேதியே அனுமதி வாங்கி 1500 பணத்தையும் வாங்கிட்டேன் . 11ந்தேதி போயிட்டு வர்றதுக்கு டிக்கெட்டும் எடுத்துட்டன் . ஆனா நமக்கு தான் ஏழரை நாட்டு சனி முதுகுல ஏறி உக்காந்துக்கிட்டு இறங்க மாட்டன்னு சொல்லுமே . வழக்கம் போல இந்த வாட்டியும் ஒரு ஆப்பு ரெடியாவே இருந்துச்சு . அது என்னான்னா எனக்கு 12ந்தேதி ஒரு பரீட்சை . அத முடிச்சுட்டு தான் சென்னைக்கு கிளம்ப வேண்டிய சூழ்நிலை . நான் ஏற்கனவே ரொம்ப அழகா படிப்பன் . இதுல சென்னைக்கு வேற கிளம்பனும் . கேக்கவா வேணும் நான் எப்படி படிச்சுருப்பன்னு ? அந்த அல்லக்கை எக்சாமுக்கு படிச்சு எப்படியோ ஏனோதானோன்னு எழுதி முடிச்சுட்டு மத்தியானம் 1.45 பஸ்சுக்கு வீட்டுலேந்து 1.30க்கு கிளம்பி கரெக்டா 1.40க்கு பஸ்சுல ஏறிட்டன் . அங்க ஆரம்பிச்சது தான் நம்ம கவுஜ கருப்புக்கு தொல்லை . சென்னைக்கு போய் இறங்கற வரைக்கும் போன் பண்ணி அறுத்துட்டன் (கொசுறு : அண்ணனோட ரூம்ல தான் நான் தங்குறதா ஏற்பாடு) . ஒரு வழியா சென்னை போய் இறங்குனா , அடையாருக்கு வராத , எழும்பூர்க்கு வான்னு கருப்புக்கிட்ட இருந்து போன் . சரி பாசக்கார பயபுள்ளையாச்சேன்னு நானும் எழும்பூர் போய் இறங்குனன் . எழும்பூர்ல பயபுள்ள ரிசீவ் பண்ண வரும்னு பாத்தா வரவே இல்ல . ஒரு 10 நிமிசம் வெட்டியா நின்னுக்கிட்டு இருந்தன் . கருப்பு வந்தோன கருப்பு ரூம்க்கு சாப்புட்டுட்டு கிளம்புனோம் (ஹோட்டல்ல என் சாப்பாட்டுக்கு ஸ்பான்சர் கருப்பு தான் . ) . அப்புறமா கருப்பு ரூமுக்கு போய் தூங்கலாம்னு பாத்தா அங்க தான் ஆரம்பிச்சது கெரகமே . கருப்பு ரூமுக்கு போனதே 11 மணிக்கு தான் . இதுல 12 மணி வரைக்கும் கருப்பு கவுஜ போட்டுட்டு தான் தூங்குவன்னு அடம் புடிச்சுட்டு 12.30 மணி வரைக்கும் கவுஜயை போட்டு அதுக்கு அப்புறமா தான் தூங்க ஆரம்பிச்சோம் . அடுத்த நாள் காலைல எந்திரிச்சா மணி 6.30 தான் ஆகுது . இவ்வளவு சீக்கிரமா எந்திரிக்க கூடாதேன்னு சொல்லிட்டு திருப்பி தூங்க ஆரம்பிச்சா கடைசியில் போன் வந்து தூக்கத்த ரேப் பண்ணிடுச்சு (அதான் கெடுத்துடுச்சு) . அதுக்கு அப்புறம் நானும் கருப்பும் சேந்து டிஃபன்ஸ் காலணி கிரவுண்டுக்கு போய் அங்க கிரிக்கெட் ஆடிக்கிட்டு இருந்த பிரபலங்களோட மிங்கிள் ஆகி ஆட ஆரம்பிச்சோம் . எனக்கு பந்து கூட பொறுக்கி போட தெரியாதுன்னு நான் சொன்னத பொறுட்படுத்தாம வேதாளம் என்னைய பீல்டிங்க்குக்கு எல்லாம் நிப்பாட்டுனாரு . நான் சும்மா உருண்டு ஓடிக்கிட்டு இருந்த பந்த பறந்து பறந்து சேஸ் பண்ணி அதுல ரெண்டு ரன் அவுட் ஆனதுலாம் காலத்தின் கொடுமைகள் . அப்புறம் கிரிக்கெட் ஆடி முடிச்சுட்டு கார்க்கியின் தயவால அவரோட ஏசி கார்ல வந்து திருப்பி அடையார்ல இறங்குனோம் . அங்க போய் கருப்பு ரூம்ல குளிச்சுட்டு(டாய் டாய் டாய்) திருப்பி ஊர் சுத்த ரெடியானோம் . குளிச்சுட்டு வெட்டியா இருந்த நேரத்துல கருப்போட புக்க எல்லாம் எடுத்து பாக்க ஆரம்பிச்சன் . நான் படிக்கிறதுக்கு எடுத்து பாக்கல , எந்த புக்குலேந்து கருப்பு ஞானப்பால் குடிச்சார்னு பாக்கறதுக்கு தான் . அப்ப அங்க என்னோட மண்டைக்குள்ள ஷாக் அடிக்க வச்ச புத்தகம் உலக புகழ்பெற்றன்னு அவர அவரே சொல்லிக்குற மானங்கெட்ட சாரு எழுதுன “ஜீரோ டிகிரி” . (அத ஊருக்கு எடுத்துட்டு வந்து நான் டரியலானது தனி டிராக்) . திருப்பியும் ஊர் சுத்திட்டு கருப்பு ரூமுக்கு ரிட்டன் அடிக்கிறப்ப அங்க நம்ம பிரசன்னா , RJ கோபால் , ஜோசப் செல்வா , சீனு , சைல்டுசின்னா எல்லாம் வந்துருந்தாங்க . சரி பாசகார பயலுக ஆச்சேன்னு போய் பேசுனா எல்லாரும் சேந்து என்னைய கும்ம ஆரம்பிச்சுட்டாங்க . எதுக்குடா அடிக்கிறீங்கன்னு கேட்டா , அதெல்லாம் தெரியாது உன்னைய அடிப்போம்னு திருப்பி அடிக்க ஆரம்பிச்சாங்க . உனக்க் வலிக்கவே இல்லையாடான்னு நீங்க கேக்குறது புரியுது , எவ்வளவோ இடத்துல அடிவாங்கிட்டோம் , நம்ம நண்பங்க தானேன்னு சொல்லிட்டு அடிச்சுட்டு போங்கடான்னு சொல்லிட்டன் (கடைசியில இவ்வளவு அடி அடிச்சுட்டு ஒரு வார்த்த கூடாம போயிட்டாங்க பக்கிங்க.)

டிஸ்கி : இந்த பதிவு ஏற்கனவே ரொம்ப லெந்தா போறதால நான் வாங்குன மொரட்டு அடிய எல்லாம் அடுத்த பதிவுல போடுறன் . அடுத்த பதிவுல தான் ட்விட்டப்ல நடந்த மேட்டர் எல்லாம்.......

கடைசியா இது தான் நான்........


May 15, 2012

பெண்கள் ட்விட்டப்பில் நடந்த சதி வேலைகள்.....

பஸ்கி
இந்த பதிவு கற்பனை என்று தெரிவித்துக்கொள்கிறேன் (அப்படி சொல்லலைனா என்னிய போட்டு கும்மிடுவாங்க)

ட்விட்டப் ஒரு அறிமுகம் :

ட்விட்டப் என்பது ட்விட்டரில் முகம் தெரியாமல் பழகும் நண்பர்கள் ஒரு பொதுவான இடத்தில் கூடுவது . ஆண்கள் ட்விட்டப் போடுவது எப்பொழுதும் வழ்க்கமான ஒன்று . பெண்கள் ட்விட்டப் எப்பொழுதாவது நடக்கும் ஒரு விபரீதம் . சென்னையில் இன்று நடந்த ட்விட்டப் , வெளிவராத உண்மைகள்

கேரக்டர்ஸ் அறிமுகம் :

அதெல்லாம் வேண்டாங்க , அப்புறம் என்னிய கொத்து பரோட்டா போட்டுருவாங்க (ரியலி பேட் கேர்ள்ஸ்) . ஒரு ரகசியம் , ட்விட்டப்ல கலந்துக்குற எல்லா பொண்ணுங்களுமே 50+ தான் , ஆனா எங்களுக்கு இன்னும் 20 கூட ஆவலன்னு பீலா விடுவாங்க . (மொத்தம் 5 பேரு)

சம்பவம் :

காலை 10 மணி :
ட்விட்டப்புக்கு ஏற்பாடு செய்தவர் மட்டும் பீச்சில் தனியாக நிற்கிறார்.(இவருக்கு 58) மைண்ட் வாய்சில் (என்ன இந்த பொண்ணுங்க யாரையும் காணும் ?? 9.30 மணிக்கே வரன்னு சொன்னாங்க ?? இவங்க வருவாங்கன்னு நான் வேற காலைல 12 இட்லி தான் சாப்புட்டன் , கையில் வெறும்(ஞேஞேஞே) 500ரூ தான் இருக்கு).

அப்போது தூரத்தில் ஒரு பெண்(52) வருகிறார் . இருவரும் இதற்கு முன் பார்த்ததில்லை . ஆனால் கோட் வேர்ட்ஸ் போன்ல சொல்லிருந்தாங்க (ஆமாம் இவிங்க பெரிய அமெரிக்க உளவாளி , கோட் வேர்டு யூஸ் பண்ணுறாங்க) . அவர் பொத்தாம்பொதுவாக வந்து பாபா பிளாக் ஷீப் என்று சொல்கிறார் . உடனே புரிந்து கொண்ட முதல் பெண் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்று சொல்கிறார் (கோட் வேர்ட்ஸ்ச பாரு , வூட்டுல பேரப்புள்ளைங்களுக்கு சொல்லி குடுத்து பழக்கம் போல) . பின் ஒவ்வொரு பெண்ணாக வருகிறார்கள் (எல்லாருமே ஒரு இத்து போன ரைம்ஸ தான் சொல்லுறாங்க . அத வேற சொல்லனுமாக்கும்).

காலை 10.30 மணி :
எல்லா பெண்களும் அங்குள்ள படகு நோக்கி நடக்கின்றனர் . படகு அருகில் அனைவரும் அமர்ந்து விட்டு தங்கள் வெட்டிக்கதைகளை ஆரம்பிக்கிறார்கள் .

பெண் 1 : (அனைவரையும் நோக்கி) எல்லாரும் காசு எடுத்துட்டு வந்தீங்களாடி ?? முதல்ல போய் சாப்புடுவோம்

அனைவரும் : (கோரசாக) ஆமாம்கா முதல்ல போய் சாப்புடுவோம் (அப்ப எல்லாம் பேசறதுக்கு வரல , சாப்புட தான் வந்துருக்கீங்க)

காலை 10.30 - 11.30 : எல்லோரும் தள்ளுவண்டியில் சாப்பிட்டு சாரி கடையை முடித்து விட்டு திருப்பி பழைய இடத்தில் கூடுகிறார்கள் .
(இனிமே யார் யார் பேசுனாங்கன்னு எல்லாம் டேக் போட முடியாது , பிகாஸ் நெம்ப கஷ்டம்) .

அக்கா , நீங்க உங்க சின்ன வயசு போட்டோ அப்லோடு பண்ணோன நானும் நீங்க சின்ன பொண்ணோன்னு நினைச்சுட்டன் . இங்க வந்து பாத்தா 60 வயசுன்னு சொல்லுறீங்க ??

நான் எப்படி அது என்னோட போட்டோன்னு சொன்னன் ? அது என்னோட பேத்தி போட்டோ . நம்ம போட்டோலாம் போட்டா ஒரு கழுதையாவது பாலோ பண்ணுமா ??(ஒலக உண்மைடா சாமி)

ஆமாம் அதுவும் சரி தான் . நானும் என்னோட பொண்ணு போட்டோ தான் அப்லோடு பண்ணிருக்கன் .(உன் பொண்ணுக்கு இது தெரியுமா)

அட நீங்கள்லாம் இப்படின்னா நான் பக்கத்து வீட்டுல காலேஜ் போற பொண்ணோட போட்டோல அப்லோடு பண்ணிருக்கன் ?(அடங்கொன்னியா)

அட ஆமாம்கா நாமலாம் நம்ம போட்டோ அப்லோடு பண்ணலன்னு இந்த பசங்களுக்குலாம் தெரியாது . அது தெரியாமயே கடல போட்டுக்கிட்டு இருக்கானுங்க . (பசங்க என்னைக்குமே நல்லவங்க தான்)

அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்டி இந்த பசங்க தொல்லை தாங்கல . எப்ப பாரு கிண்டல் பண்ணிகிட்டே இருக்காங்க . யாருக்கிட்டடி டெயில்கேர்ள்(இங்கிலிபீசுல சொல்றாங்களாம்) ஐடி இருக்குது

என்கிட்ட தான் இருக்குதுக்கா(ஆமாம் தாஜ்மகால எழுதி வச்சுருக்காங்க)

நீ மட்டும் வச்சுக்கிட்டு என்ன பண்ணுவ ?? தினம் எல்லாருக்கும் அனுப்பி விடு . அப்ப தான் பசங்க மத்தியில ஒரு பயம் வரும். (ரொம்ப நல்ல எண்ணம்)

அக்கா அது எப்படிக்கா சொல்லுறீங்க
ந்து பண்ணுனா பசங்க பயப்புடுவாங்கன்னு ??(அப்படியே தெரியாத மாதிரியே கேக்குறது)

உனக்கு விஷயமே தெரியாதாடி ??அந்த ஐடிலேந்து தான் நாங்க பசங்கள கண்டமேனிக்கு திட்டுவோம் . அதுல பயந்துகிட்டு
, அந்த ஐடிலேடு பல பசங்க எந்த பொண்ணுக்கிட்டயும் பேச மாட்டாங்க . (நாங்க பயந்தோம் ??)

ஓ , அப்படியாக்கா விசயம் ?? இது தெரியாம போச்சே இத்தன நாளா .... எனக்கும் அனுப்பி விடுங்க . நானும் கொஞ்ச நாள் திட்டுறன் , புருசனையே எத்தன நாள் தான் திட்டுறது ??(நைஸ்ல)

ஆமாண்டி நீ சொல்லுறதும் சரி தான் ஒரு ஆளையே எத்தன நாள் தான் திட்டுறது ? (அப்ப நீங்கள்லாம் புருசன அடிக்க மாட்டீங்க)

சரி அடுத்த டாபிக்குக்கு போவோம்டி , நீ கட்டிருக்குற சேலை சூப்பரு . எங்க வாங்குன ??

என்னைய போய் நீ இப்படி தப்பா நெனச்சுட்டியே ?? பக்கத்து வீட்டு கொடில இருந்துச்சு , சுட்டுட்டன்

என்னைய மாதிரியே நீயும் மானங்கெட்டவளா இருக்கடி

ஆமாம் உன் புள்ளைக்கு கல்யாணம் பேசுறன்னு சொன்னியே என்னாச்சு ??

அது சும்மா சொன்னன்கா , எனக்கு ஒரு பேர புள்ளையே இருக்கு .

இவிங்க விட்டா வளவளா கொழகொழான்னு பேசிக்கிட்டே இருப்பாங்க .நம்ம அடுத்த பதிவுல மீட் பண்ணுவோம்

டிஸ்கி
நீங்க கேக்குறது புரியுது , ட்விட்டப்ல என்ன சதிவேலை நடந்துச்சுன்னு , அப்படி ஏதாச்சும் நடக்கும்னு தான் போனன் . ஆனா இவிங்க இப்படி பேச ஆரம்பிச்சோன துண்ட காணும் , துணிய காணும்னு ஓடி வந்துட்டன் .

May 8, 2012

ஏட்டு சுரைக்காய்.....

”ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது” . காலம் காலமாக தமிழர் இடையே புழக்கத்தில் இருக்கும் பழமொழி இது . பல முறைகள் இது நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது . இப்பொழுது புதிதாக இதை நிரூபிக்க வந்தவர் தான் அந்த பிரபலம் .

அந்த பிரபலம் படித்திருப்பதோ மன உளவியல்(சைக்காலஜி) . ஆனால் அந்த படிப்புக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போலவே பொதுவெளியில் நடந்து கொண்டிருக்கிறார் . மனஉளவியலில் கண்டிப்பாக எப்படி பொறுமையாக நடப்பது என்று சொல்லி கொடுத்திருப்பார்கள் . ஆனால் இவரை பார்த்தால் மனப்பாடம் செய்து தான் தேர்ச்சி பெற்றிருப்பார் போல தோன்றுகிறது . மேலும் தன்னை யாராவது எதிர்த்தால் அவரை தவறு என்று நிரூபிக்கும் வரையில் ஓய மாட்டார் . அவர் செய்தது சரியாகவே இருக்கும் பட்சத்தில் அவரின் மேல் பொய்யாகவாவது ஒரு குற்றசாட்டை பதியாமல் ஓயாது அவர்தம் கோபம் . இவ்வாறு அவர் செய்யும் போது தான் அவர் படித்தாரா அல்லது அங்கு சிகிச்சை பெற்றாரா என்ற எண்ணம் மேலோங்குகிறது . இவ்வளவுக்கு அவர் தன்னிடம் வம்பிழுத்த ஒருவரை மட்டும் குற்றம் சாட்டாமல் ஒட்டுமொத்த ஆண்கள் இனத்தையே குற்றம் சாட்டுகிறார் . பதிலுக்கு நாங்கள் இவர் செய்யும் குற்றத்துக்கு ஒட்டுமொத்த பெண்கள் இனத்தையும் குற்றம் கூறினால் யாரேனும் வாயை மூடிக்கொண்டு இருப்பார்களா ? ஆண்கள் இனத்தை குறை கூறுவது மட்டுமில்லாமல் தன்னை பற்றி கருத்து கூறுபவர் தன்னை இழிவுபடுத்தி விட்டதாக தனக்கு தானே கற்பனை செய்துகொண்டு அவர் சிறுவயதில் ஏதோ ஒரு சம்பவத்தால் பாதிக்கபட்டுள்ளார் என்றும் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறதோ ? இதெல்லாம் போதாது என்று ஒரு பத்திரிக்கையில் பெண்கள் தினத்திற்கு பேட்டி காணும் போது சமூக வலைத்தளங்களில் பெண்களை கிண்டல் செய்வது தான் ஆண்களின் பணியாக இருக்கிறது என்று வேறு கருத்து கூறியிருக்கிறார் . அவரிடம் இவ்விடத்தில் கேட்க விரும்புவது ஒரு கேள்வியே . “தாங்கள் மட்டும் தான் இணையத்தில் உலவும் ஒரே பெண் என்று முடிவு எடுத்து விட்டீர்களோ ?

சமூகவலை ஊடகம் என்பது தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பகிர்வதறகாகவும் , புது நண்பர்களை உருவாக்கவும் தான் கண்டறியப்பட்டது . அங்கு ஒவ்வொருவருக்கும்ம் தங்களது கருத்துகளை பதிய உரிமை இருக்கிறது . அவரை பற்றி கருத்து வரும் போது ஆட்சேபித்தால் பரவாயில்லை . பொத்தாம் பொதுவாக யாரை பற்றி கருத்து சொன்னாலும் அதை கண்டிப்பது எவ்வகையில் நியாயமோ ? மேலும் அவர் தன்னை கிண்டல் செய்பவரை தான் மட்டுமே கண்டிப்பதில்லை . ஒரு 5 வயது சிறுமி போல் எதற்கெடுத்தாலும் தன் அம்மா முந்தானையை பிடித்து கொண்டு அலைகிறார் . இதற்கு அவர் அம்மாவும் ஒத்துகொண்டு தட்டிகேட்பது இந்நூற்றாண்டின் மிகபெரிய வினோதம் . மேலும் தன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்து இவர் சாபம் வேறு விடுகிறார் . இந்த நகைச்சுவைக்கு எல்லாம் உச்சகட்டமாக நடந்த கூத்து தான் சைபர்கிரைமில் புகார் அளித்தது . இவருக்கு ஆதரவு தெரிவிக்கவென்றே சிலர் ஒரு ட்விட்டர் கணக்கு வைத்து கொண்டு அலைகின்றனர் . இதனால் நமக்கு புரிவது ஒன்றே ஒன்று தான் . அந்த பிரபலம் இணையம் தனக்கு மட்டுமே சொந்தம் , தனக்கு மட்டுமே உபயோகபடுத்த தெரியும் என்ற மனநோயில் இருக்கிறார். அவர் மனநோயில் இருந்து விடுபட நாம் பிரார்த்திப்போமாக......

பின்குறிப்பு : 

நான் இங்கு யார் பெயரையும் குறிப்பிடவில்லை . எனவே இதை சைபர்கிரைமுக்கு கொண்டு சென்றால் செல்லாது.

May 7, 2012

சைபர்கிரைம் பாயுதே......

முன்னுரை :

சில நாட்களுக்கு முன் வரை ட்விட்டர் சில பல ட்விட்லாங்கர்களால் களேபரமானதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கவியலாது . இன்று மறுபடியும் ஒரு பூகம்பம் கிளம்பும் என்பதில் சந்தேகம் இல்லை . அதற்கு காரணம் இதோ இந்த வலைபதிவு தான் http://mantra8787.blogspot.in/2012/05/of-legends-miss.html

குற்றப்பிண்ணனி :

ட்விட்டரில் ப்ளாக் செய்யப்படுவது என்ற செயலுக்கு அர்த்தத்தை புகட்டியவர் . தமிழ் பெருமகன்களை ட்ரோல் என்று அன்புடன் அழைத்தவர் . சைபர்கிரைம் என்ற வார்த்தையை எங்களை போன்ற சாமானியர்களுக்கு அறிமுகபடுத்தியவர் என்று பல முகங்கள் உண்டு இந்த பிரபலத்துக்கு . இந்த பிரபலம் யாரிடம் வேண்டுமானாலும் சண்டை போடுவார் ஆனால் இவருடன் யாரும் சண்டை போட கூடாது என்பது எழுதப்படாத விதி . மீறி சண்டை போட்டால் மேலே குறிப்பிட்ட மூன்று அஸ்திரங்களும் சம்பந்தபட்டவரின் மீது பாயும் . மேலும் இதற்கெல்லாம் அடங்காதவர்கள் அவர்தம் தாயாரால் திட்டி மந்திரிக்க படுவார் . இதற்கும் கட்டுகடங்காதவரை அந்த பிரபலம் சாபம் விட்டே கொல்வார் . இதற்கு எல்லாம் கட்டுபடாத நமது ட்விட்டர் பெருமக்கள் வம்பிழுத்த வண்ணமே உள்ளனர் . அதில் புதிதாக ஒருவர் இணைந்துள்ளார் . அவர் தான் மேலே நான் குறிப்பிட்ட வலைப்பூவை எழுதிய திரு.மந்திரா . இந்த வலைப்பூவை எழுதி அந்த பிரபலத்தை மேலும் அவர் பிரபலபடுத்தியுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது . மேலும் இவ்வழக்கில் இவரை தாண்டியும் முக்கிய குற்றவாளியாக கருதபடுபவர் திரு.ராஜன்லீக்ஸ் அவர்கள் . அவரை மந்திரா மிகவும் மரியாதையுடன் ராஜகசிவு என்று
விழித்துள்ளார் . திரு.மன்னர்கசிவு செய்ததாக கருதப்படும் குற்றம் யாதெனில் , “அவர் பிரபலத்திடம் மேற்குறிப்பிட்டவாறு விதியை மீறி சண்டை போட்டுவிட்டாராம்,” மேலும் இவரது துதிபாடிகள் இவரை விட மிகவும் அதிகமாக குதிப்பதால் ட்விட்டரில் நிலநடுக்கம் 8.9 ரிக்டர் என்ற கணக்கில் பதிவானது . இப்பொழுது நண்பர் மந்திரா வேறு ஆதாரங்களுடன் அவரை குற்றம் சாட்டியுள்ளதால் இன்று நிலநடுக்கம் 10 ரிக்டரை தாண்டியும் பதிவாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது . மேலும் இன்றும் பல சைபர்கிரைம்கள் பாயும் , ட்விட்லாங்கர்கள் கதறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . சென்ற தடவை பிரபலம் தன்னை எதிர்த்தவர்களுக்கு எதிராக காசு வெட்டி போட்டதாக நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன . இந்த தடவை  இன்னும் பன்மடங்கு மேலே போய் மாந்திரீகம் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சென்ற முறை சில பிரபலங்களும் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர் . இம்முறை ஆதரவு கரங்கள் பெருக பெருக எங்களது மகிழ்ச்சி எல்லை கடந்து போகும் என்பது நிதர்சனம் . பழைய ட்விட்லாங்கரில் 15 பேரின் மீது சைபர்கிரைமில் வழக்கு பதிவு செய்ததாக கூறி கடைசியில் ஒருவரது பெயரை மட்டும் கூறி ஏமாற்றி விட்டார்கள் . அந்த தவறு இம்முறையும் நடக்காது என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் . அதேபோல் இந்த முறை தண்டனைகள் என்னென்ன என்று கூறும் பட்சத்தில் நாங்கள் எங்களை தயார் செய்து கொள்வோம் . எங்களை தயவு செய்து கைவிட்டு விடாதீர்கள் . எங்கள் ஆசைகளை நிராசையாக்கி விடாதீர்கள் என்று தாழ்மையுடன் அல்ல மிடுக்குடனே கேட்டுகொள்கிறேன் .

முடிவுரை :

இந்த வலைபூவிற்கு சைபர்கிரைம் பாயுதே என்று பெயர் வைத்ததற்கு காரணம் . இம்முறையாவது நான் மாட்ட மாட்டேனா என்ற அவாவில் தான் . அப்படியே நான் இம்முறை மாட்டினால் ட்விட்டரில் நான் “நானும் ரவுடி தான் , நானும் ரவுடி தான்” என்று பெருமையடித்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று தான்.

இப்படிக்கு ,
இதுவரை பாதிக்கபடாத ஒரு ட்ரோல்

டிஸ்கி :

இப்பதிவில் நான் பிரபலத்தின் பெயரை எங்கும் குறிப்பிட்டு என் வலைப்பூவை மானபங்கபடுத்தவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன் .

நீங்கள் இப்பதிவை படிக்கும் போது அந்த பிரபலத்தின் செயலோடு உங்கள் செயல்களும் ஒத்துபோனால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல . மேலும் அது தன்னிச்சையானது என்றும் விழைகிறேன் .

இப்பதிவை படிக்கும் போது தங்களது மனக்கழுதை பிரபலம் என்ற இடத்தில் அவரது பெயரை போட்டு படித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல .

April 27, 2012

விக்கிகள்.....

நான் பள்ளியில் சேர்ந்த நாள் முதலே , பாலர் வகுப்பு தொட்டு இன்று வரை பல விக்கிகள் என்னுடன் பயணித்திருக்கிறார்கள் . விக்கி என்பது பெரும்பாலும் விக்னேஷ் , விவேக் போன்ற பெயர்களின் சுருக்கமே . நான் இது வரை எத்தனை விக்னேஷ் , விவேக்கை ஞாபகம் வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லை ஆனால் விக்கிகளை மட்டும் ஞாபகம் வைத்திருக்கிறேன் . பலருடன் நட்பும் , சிலருடன் சண்டைகளும் . ஆறாம் வகுப்பின் தொடக்கம் தான் விக்கிகளுக்கு உரிய முக்கியதுவத்தை உணர வைத்தது . என் வகுப்பில் பல விக்கிகள் உண்டு . அதனால் அனைவரையும் இன்ஷியல் வைத்தே அழைப்போம் . அன்றிலிருந்து இன்று வரை நான் விக்கிகளை கடக்காமல் எந்த ஒரு வகுப்பையும் கடந்ததில்லை . என் அகராதியில் விக்கி என்றாலே அமைதி என்று இருக்கிறது . அதற்கு காரணம் நான் இதுவரை கடந்து வந்தவர்கள் சண்டை போட்டு நான் பார்த்ததில்லை . நான் மட்டுமல்ல வகுப்பில் எவருமே பார்த்ததில்லை .

 ஆனால் அந்த மரபை உடைக்க பிறந்தவன் போல் அறிமுகமானான் 10ஆம் வகுப்பில் ஒரு விக்கி . வகுப்பு தலைவன் அவனே . அவனுடன் நான் சண்டை போடாத நாளும் நட்பு பாராட்டாத நாளும் கிடையாது . வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் என்று ஒரு கோஷ்டி இருந்தால் அதில் அவனும் இருப்பான் , நானும் இருப்பேன் . நான் அவனை ஓரிரு பாடங்களில் முந்தினாலும் கடைசியில் அவனே முதலிடம் வகிப்பான் . அந்த முதலிடமே அவனுக்கும் எனக்கும் சண்டை வர ஒரு காரணமாயிருந்தது . அதே போல் வகுப்பு தலைவன் என்ற முறையில் அவன் செய்யும் அடாவடிக்கும் எல்லைகள் கிடையாது . 10ஆம் வகுப்பு முடிந்ததும் அவன் வேறு பள்ளிக்கு மாற்றபட்டான் . எங்கள் தொடர்பும் விட்டுபோனது .

 மறுபடியும் அவனை அண்ணா பல்கலைகழகம் கவுன்சிலிங் விண்ணப்பம் வாங்க போன போது பார்த்தேன் . அப்பொழுது அவனிடம் இருந்த அடாவடி மறைந்து அமைதியானவனாக காட்சியளித்து என் அகராதியின் அர்த்தம் மாறாமல் காப்பாற்றினான் . இப்பொழுது கல்லூரியிலும் ஒரு விக்கி வந்து சேர்ந்து அந்த பெயர் மறையாமல் இருக்க உதவி கொண்டிருக்கிறான் .

April 13, 2012

OKOK - OK தானுங்க.....

ஒரு கல் , ஒரு கண்ணாடி.......

தமிழில் இப்படி ஒரு படமே வந்ததில்லை.வித்தியாசமான கதை , இந்த படம் ஒரு மைல்கல் ....... இப்படில்லாம் ஆரம்பிக்க மாட்டங்க . ஏன்னா படமும் அப்படி இல்லைங்க .

படத்தோட கதை என்னான்னா நம்ம தமிழ் சினிமாவோட அக்மார்க் கதை தான் . ஹீரோ ஹீரோயினை லவ் பண்ணுறாரு , ஹீரோயின் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டு கடைசியில ஒத்துக்குறாங்க . அப்ப ஹீரோயினுக்கு கல்யாணம் நிச்சயமாவுது , அங்க ஒரு கெஸ்ட் ரோல் வந்து ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறாரு . அவ்வளவு தாங்க .

இந்த படத்த இன்னும் ஷார்ட்டா சொல்லனும்னா பாஸ் (எ) பாஸ்கரன் , சிவா மனசுல சக்தி படத்தோட ரீமேக்னு சொல்லலாம் . இங்க ஒரு விஷயம் , முந்தின ரெண்டு படத்தையும் இயக்குனது இந்த படத்தோட டைரக்டர் தான் .

 ஹீரோ உதயநிதி , கலக்கல் அறிமுகம் . படத்தோட ஆரம்பத்துலேந்து படம் முழுக்க செம்ம அலப்பறை . ஹன்சிகாவ பாத்தோன அம்மாவ வண்டிலேந்து இறக்கி விட்டுட்டு போறது , சரக்கு அடிக்குறன்னு சொல்லிட்டு சும்மா மோந்து பாத்துட்டே மட்டையாவறதுன்னு படம் ஃபுல்லா கலக்குறாரு . பாவம் டான்ஸ் தான் வரல . அதுவும் இல்லாம டூயட் பாடுறப்ப என்னவோ பஞ்சத்துல அடிபட்டவன் மாதிரியே மூஞ்ச வச்சுருக்காரு . அவ்வ்வ்வ்வ்வ்

ஹன்சிகா - இந்த பொண்ண வச்சு படம் எடுக்குறவங்க முதல்ல நல்ல டிரஸ் வாங்கி குடுங்கையா . பாவம் இந்த படத்துலையும் சின்ன டிரஸ்ச தான் போட்டுருக்குது அந்த புள்ள . அதுக்கு முன்னாடி உடம்பை குறைக்க சொல்லுங்கப்பா . குளோசப் ஷாட்ல பாக்குறப்ப ஏதோ எரும மாட்ட பாக்குற மாதிரியே இருக்கு . படத்துல அம்மிணிக்கு ஒன்னும் பெரிய ரோல் இல்ல , ஹீரோ காதல சொல்லுறப்ப முடியாதுன்னு ஒரு டயலாக் , அப்புறம் கிளைமாக்சுக்கு முன்னாடி ஹீரோ ஏமாத்திட்டாருன்னு நெனச்சு ஒரு அழுகை சீன் . அம்புட்டு தான் .

சந்தானம் - இவரு தாங்க படத்தோட உண்மையான ஹீரோ . இவரு இல்லன்னா படத்த அரை மணி கூட நேரம் பாக்க முடியாது , அதுக்கு நான் கியாரண்டி (அம்புட்டு நம்பிக்கை) . மனுசன் கதறடிக்குறாரு படம் பூரா . ஆரம்ப சீன்ல ஸ்கோடா கார காட்டுற மாதிரி கரகாட்டகாரன் கார காட்டி இண்ட்ரோ குடுக்குறதுலேந்து கடைசில உதயநிதிய நண்பேண்டான்னு சொல்லுற வரைக்கும் செம்ம . உதயநிதி குடுக்குற ஒவ்வொரு டயலாக்குக்கும் ஒரு கவுண்டர் குடுத்துருக்காரு .

படத்தோட டான்ஸ் மாஸ்டர் பாக்யராஜ்னு நெனக்கிறன் . ஒரு பாட்டுல உதயநிதி ஆடுறப்ப பாக்யராஜே திரும்பி வந்துட்டாரோன்னு ஆச்சர்யபட்டு போயிட்டன் . தியேட்டர்ல அந்த டான்ஸ்க்கு தான் செம ரெஸ்பான்ஸ் . பாத்துட்டு எல்லாரும் இப்படியும் ஆட முடியுமான்னு பேசிக்கிட்டாங்க .

தியேட்டர்ல கிளாப்ஸ் , விசில் இல்லாத சீன் ரொம்ப கம்மி . ஓவரா கிளாப்ஸ் , விசில் வாங்குனது உதயநிதியும் , சந்தானமும் பிளைட்ல அடிக்கிற லூட்டி தான் . அந்த சீன்ல ஒரு போனஸ் சினேகா . ச்ச அந்த சீன்ல அவங்கள பாக்குறப்ப ஹன்சிகா ஒரு குரங்கு மாதிரியே தோணுச்சு .

படத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு ஜீவன் - சரண்யா பொன்வண்ணன் . இவங்க உதயநிதிக்கு இந்த படத்துல அம்மா . பாவம் 20 வருசமா ஒரு டிகிரி வாங்க இந்த படத்துல ரொம்ப கஷ்டபடுறாங்க . இந்த மாதிரி ஒரு அம்மா இருந்தா பசங்க லவ்வ பத்தி கவல படவே வேணாம் .

அப்புறமா நிறைய எக்ஸ்ட்ரா பெர்சன்ஸ் இந்த படத்துல உலா வர்றாங்க . அவங்க எதுக்கு வர்றாங்கன்னு கண்டுபுடிக்குறதுக்குள்ள படம் முடிஞ்சுடுச்சு . அதே மாதிரி டைரக்டருக்கு பொண்ணோட அப்பா மேல ஏன் இவ்வளவு கோபம்னு தெரியல ஒவ்வொரு படத்துலையும் பொண்ணோட அப்பாவ மட்டும் ரொம்ப கேவலமா காட்டுறாரு .

படம் நான்ஸ்டாப் காமெடி , பட் நாட் ரீச்சபிள் கதை .......

டிஸ்கி : கமர்சியல் படம் புடிக்கும்னு சொல்லுறவங்க எல்லாம் கண்டிப்பா போய் பாருங்கையா ......

March 31, 2012

ஏப்ரல் ஃபூல்......

ஏப்ரல் மாசம்னாலே எல்லாருக்கு ஞாபகம் வர்றது மத்தவங்கள முட்டாளாக்குறது தான்.....

முன்னாடிலாம் வீட்ட விட்டு வெளில வர்றப்ப ஏதாச்சும் சின்ன புள்ளைங்க தான் ஏப்ரல் ஃபூல் பண்ணுறன்னு சொல்லிட்டு வந்து நிக்கும் . அந்த புள்ளைங்க மூஞ்சுல சந்தோசத்த பாக்கனுங்கறதுக்காகவே ஏமாறலாம் (சின்ன புள்ளைக்கிட்ட ஏமாந்ததும் இல்லாம சமாளிக்குறத பாரு) . சின்ன புள்ளைங்க நான் சைக்கிள்ள போகுறப்ப எல்லாம் அண்ணே சைக்கிள்ல வீல் சுத்துதுண்ணேன்னு கத்துவாங்க . என்னது என்னோட சைக்கிள் வீல் சுத்துதான்னு நானும் அதிசயமா பார்ப்பேன் . நம்ம சைக்கிள்ல வீல் சுத்துதான்னு , அப்புறம் பாத்தா தான் தெரியும் என் சைக்கிள்லயும் அதிசயமா வீல் சுத்துமுன்னு .

இந்த சின்ன புள்ளைங்க பண்ணுற டார்ச்சர விட அதிகமா டார்ச்சர் பண்ணுறது ஏழு கழுத வயசுக்கு வளந்த பெருசுங்க தான் . நேத்துக்கு ஒரு SMS வந்துச்சு . அதுல பாத்தா “உன்னைய பத்தி இன்னைக்கு தான் எனக்கு தெரிஞ்சுது . இனிமே எனக்கு கால் பண்ணாத , மெசேஜ் பண்ணாத” - இப்படி எழுதியிருந்துச்சு . அப்பாடா தொல்ல ஒழிஞ்சுதேன்னு நிம்மதியா இருந்தன் . பாத்தா மெசேஜ் இன்னும் முடியல , கீழ வேற கண்டினியூ ஆகி இருந்துச்சு . இன்னும் மானாவாரியா திட்டி எழுதியிருக்கும்னு பாத்தா அங்க தாங்க வச்சாங்க ஒரு பெரிய அணுகுண்டே வச்சுருந்தானுங்க . அது என்னான்ன “சும்மா உன்னைய ஏப்ரல் ஃபூல் பண்ணலாம்னு தான் அப்படி அனுப்புனன் . ஹேப்பி ஏப்ரல் ஃபூல்”னு இருந்துச்சு . அட படுபாவிகளா நான் சந்தோச வேற பட்டேனேடான்னு நெனச்சுக்கிட்டன் . சாயங்காலம் என் கேர்ள்பிரண்டுக்கிட்ட இருந்து அதே மாதிரி ஒரு மெசேஜ் வந்துச்சு . “இனிமே நான் உனக்கு மெசேஜ் பண்ண மாட்டன் , நீயும் எனக்கு பண்ணாத”ன்னு . சரி இவளும் ஏப்ரல் ஃபூல் தான் பண்ணுறான்னு நெனச்சுக்கிட்டு சாயங்காலம் தெரியாத்தனமா மெசேஜ் அனுப்புனன் . அப்ப வந்துச்சு பாருங்க மெசேஜ் , நான் ஏண்டா பொறந்தன்னு என்னைய யோசிக்க வைக்கிற அளவுக்கு மானாவாரியா திட்டி அனுப்பி வச்சுருந்தா . இவ காலைல சாதாரணமா தான மெசேஜ் பண்ணான்னு பாத்தா , நான் முன்னாடி சொன்ன மெசேஜ்க்கு மேல வேற எதுவும் காணும் . இன்னுமா புரியல ? அவ என்னோட இனிமே பேசவே மாட்டன்னு மெசேஜ் அனுப்பிருக்கா . அப்ப தான் என் மனசுக்குள்ள வெறும் ஹிட்டு சாங்கா ஓடுது . “நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்” - அப்படின்னு ஜாலிலோ ஜிம்கானா பாட்டு ஓடுறப்ப தான் இன்னொரு மெசேஜ் வந்து தொலைச்சுது . ”சும்மா சொன்னன் டா , உன் கூட பேசாம என்னாட்டி இருக்க முடியாது” . (ம்க்கும் நான் போயிட்டா வேற எவனும் ஈசி பண்ணி விட மாட்டான்னு ஒனக்கும் தெரிஞ்சிருக்கு ) .இப்ப என் மனசுல ஓடுன ஹாப்பி சாங்கு அப்படியே ஆப்பு சாங்கா ஓட ஆரம்பிச்சுடுச்சு “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” .

டிஸ்கி : இனிமே மெசேஜ்னு ஏதாச்சும் வந்தா அத முழுசா படிச்சு தொலைக்கனும் , இது எனக்கு மட்டும் இல்லங்க , உங்களுக்கும் தான்

March 25, 2012

அஜால் குஜால்......

பஸ்கி : 
இப்போதைக்கு நாட்டையே உலுக்கிட்டு இருக்குற மேட்டர் என்னான்னா நீல கலர் வஸ்து தாங்க . என்னாடா இவன் வஸ்து கிஸ்துன்னு உளர்றானேன்னு பாக்குறீங்களா , அது தாங்க ப்ளூ பிலிம்........

ப்ளூ பிலிம்னா என்னான்னே தெரியாதவங்களுக்கு ஒரு குட்டி இண்ட்ரோ :
ப்ளூ பிலிம்னா என்னான்னா பெட்ரூம்ல நடக்கறத திருட்டுதனமா புடிச்சு சிடி போட்டு விக்குறது . அத விட்டுட்டு நீங்க படத்துல நீல கலர் மட்டும் தான் இருக்கும்னு நெனச்சா கம்பெனி பொறுப்பில்லீங்க....

சரி நம்ம மேட்டருக்கு வருவோம் .... யோவ் அந்த மேட்டர் இல்லைய்யா . நியூஸ்க்கு வருவோம்னு சொன்னன் . அதாகப்பட்டது என்னான்னா சட்டமன்றத்துல வச்சு எம்.எல்.ஏஸ் எல்லாம் பிட்டு படம் பாத்தாங்களாம் . ஒண்ணு ரெண்டு வாட்டி இல்லைங்க , பல வாட்டி . அத டீடெய்லா பாப்போம்.....

ஒரு இனிய பொழுது எம்.எல்.ஏக்கள் எல்லாம் கர்நாடகா சட்டசபைக்கு வழக்கம் போல தங்கள் குல பணி தூங்கறதுக்கு போயிருந்தாங்க . அன்னைக்கு தான் நடந்துச்சு இந்த ராவடி . சட்டசபைல கேமரா வச்சுருப்பாங்க தெரியும் ஆனா அது வொர்க் ஆகும்னு எத்தன பேத்துக்கு தெரியும் ??? அது வொர்க் ஆகுதான்னு செக் பண்ண போட்டுருக்காங்க . ஆச்சரியம் ஆனா உண்மை கேமரா வொர்க் ஆகி எல்லாத்தையும் படம் புடிக்க ஆரம்பிச்சுடுச்சு . படம் கிளாரிட்டியா இருக்கான்னு செக் பண்ண சட்டசபை வாட்ச்மேன் செக் பண்ணுனாரு ரெக்கார்ட் ஆயிருந்தத . அவரு ஏன் செக் பண்ணாருன்னு கேக்குறீங்களா ?? அவரு வீட்டு கம்ப்யூட்டருக்கு வெப்கேம் இல்லையாம் . அதனால இத எடுத்துட்டு போனா சரியா வருமான்னு பாத்துருக்காரு . அவரு பாத்த வீடியோவுல எல்லா உறுப்பின பெருமக்களும் கொட்டாவி விடுறது , மத்தவன் பாக்கெட்ல இருந்து பணம் எடுக்குறதுன்னு எல்லாம் இருந்துச்சு . வாட்ச்மேன் இதல்லாம் சகஜமப்பான்னு சொல்லி பாத்துக்கிட்டு இருந்தாரு .

அப்ப தான் நடந்துச்சு அந்த கொடுமை . திடீர்னு ஒரு எம்.எல்.ஏ போன எடுத்து எதையோ நோண்ட ஆரம்பிச்சுட்டாரு . இது என்னாடா அதிசயமா இருக்கேன்னு வாட்ச்மேன் பாக்க ஆரம்பிச்சாரு . ஏன்னா அந்த எம்.எல்.ஏக்கு லேண்ட்லைன்ல கூட போன் பண்ண தெரியாது . கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா அதுல ஏதோ படம் ஓடுது . கொஞ்சம் ஜூம் பண்ணி பாத்தாரு நம்ம வாட்ச்மேன் . திடீர்னு ஒரு புள்ள வந்து சேலைய அவுக்க ஆரம்பிச்சுட்டு . அதுக்கு மேல என்னா நடக்குதுன்னு ஆர்வமா அவரு பாக்க , பொசுக்குன்னு கரண்ட் போயிருச்சு . ஆமாங்க தமிழ்நாட்டுல இருந்த கரண்ட் கட்டு கர்நாடகாவையும் தாக்கிடுச்சு . கடுப்சான வாட்ச்மேன் நேரா அந்த எம்.எல்.ஏக்கிட்டயே போய் படத்த போட்டு காட்டுங்கன்னு கேட்டாரு . பட் என்ன செய்ய எம்.எல்.ஏ அந்த படத்த நான் டெலிட் பண்ணிட்டன்னு சொல்லிட்டாரு . இதனால கடுப்சான வாட்ச்மேன் , கேமரால பதிவான ஒரே ஒரு சீன வச்சு அவரு பிட்டு படம் தான் பாத்தாருன்னு சொல்லி ஆப்படிச்சுட்டாரு . அப்புறம் என்ன , அந்த எம்.எல்.ஏ நான் மட்டும் பாக்கல , என்னோட தோஸ்த்களும் பாத்தாங்கன்னு “ஆபத்தில் காப்பான் தோழன்” ரேஞ்சுக்கு போட்டு குடுத்துட்டாரு . அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் நாடே அறியும் . சரி உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லுறீங்க , சொல்லுறன் . அந்த எம்.எல்.ஏ எல்லாம் ராஜினாமா பண்ணிட்டாங்க பதவிய . அதாவது ஒரு குற்றத்துக்கு கட்டுப்பட்டு பதவிய துச்சம்னு தூக்கி எறிஞ்சிட்டாங்க .

எல்லாரும் எங்க போறீங்க ?? இன்னும் கிளைமாக்ஸ் வரலைங்க . இவங்க பாத்ததுக்கு அப்புறம் கொஞ்ச நாள் சட்டசபை கொஞ்ச நாள் தூக்க சபையா தான் போனுச்சு . அப்புறம் யாரு பில்லி சூனியம் வச்சாங்கன்னு தெரியல வரிசையா அந்த கட்சி ஆளுங்க எல்லாம் சட்டசபைல படம் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க . இதன் விளைவா பி.ஜே.பிங்குற கட்சியோட அப்ரிவேசன பிட்டு ஜனதா பார்ட்டின்னு மாத்திட்டாங்க நம்ம பயபுள்ளைக .

இதல்லாம் விட என்னா பெரிய காமெடின்னா அந்த எம்.எல்.ஏ என்னா படம் பாத்தாருன்னு காங்கிரஸ் காரங்க எல்லாம் பெரிய மனசு பண்ணி சி.டி.யா விட்டுட்டாங்க . கேட்டா எதிர்கட்சிக்கு எதிரா பண்ணுறோம்னு கட்சி நியாய தர்மம் பேசுறாங்க . ஏண்டா உங்களுக்கு கடமை உணர்ச்சி இருக்கலாம் அதுக்குன்னு இப்படிலாமா ??? முடியல

டிஸ்கி : இந்த பதிவ நான் எழுத ஆரம்பிச்சப்ப காமெடி பீஸா இருந்த பா.ஜ.க வை வீழ்த்தி விட்டு காங்கிரஸ் காமெடி பீஸாகிடுச்சு . இது நானே எதிர்பாக்காத ட்விஸ்ட்

March 23, 2012

கடலதொரைக்கு கண்ணீர் கடிதம்.......

அன்புள்ள கட்டதொரைக்கு ,

லெட்டரோட ஆரம்பத்துல ஏதோ போனா போகுதேன்னு அன்புள்ளன்னு போட்டுருக்கன் . எப்பவும் போல இந்த வாட்டியும் பஞ்சாயத்துல உன் மேல தான் பிராது குடுத்துருக்காங்க . இந்த வாட்டியும் பிராது உன்னோட கடலை வறுக்குறது பத்தி தான்னு வருத்தத்தோடயும் , ஆத்திரத்தோடயும் சொல்லிக்குறன் .

உன்னோட எஸ்.டி.டீ எனக்கு நல்லாவே தெரியும் . நீ பொறந்தோன உனக்கு வைத்தியம் பாத்த டாக்டர் மெண்டல் ஆனாங்க . அதுக்கு அப்புறம் ஸ்கூல் , காலேஜ் படிச்சப்ப (ச்ச எட்டிபாத்தப்ப) அங்க இருந்தவங்க லூசு ஆனாங்க . அதனால உன் டார்ச்சர் தாங்காம உன்னைய துபாய்க்கு அனுப்புனாங்க . ஆனா நீ அங்கையும் எல்லாரையும் மெண்டலாக்கிட்டு இப்ப ஒட்டகத்த மெண்டல் ஆக்குற வேலைல இருக்கன்னு கேள்விபட்டேன்.

நீ கடல போடு வேணான்னு சொல்லல . ஏன்னா கடல போடுறது ஆண்களின் பிறப்புரிமை . ஆனா நீ மட்டுமே கடல போடாதன்னு தான் சொல்லுறோம் . ட்விட்டருக்கு வந்த ஆரம்பத்துல நான் உன்ன பாத்து தான் கடல போட கத்துக்கிட்டேன் . அப்ப நீ ஒரு பிரபல ட்விட்டரா 700 பாலோயர்சோட இருந்த . அதனால பல பொண்ணுங்கக்கிட்ட கடல போட்ட . அத பாத்து நானும் பிரபல ட்விட்டர் ஆகனும்னு சபதம் எடுத்தன் . அன்னைலேந்து இன்னைக்கு வரைக்கும் அதுக்கு போராடிக்கிட்டு இருக்கன் . இடைபட்ட காலத்துல நானும் ரெண்டு மூணு பொண்ணுக்கிட்ட கடல போட்டுக்கிட்டு இருந்தன் . ஆனா அத பாத்து பொறாமபட்ட நீ எனக்கு எதிரா சதி பண்ணி அந்த பொண்ணுங்ககிட்டயும் நீயே கடல போட்ட . பொறுத்துக்கிட்டேன் . ஏன் , உன் வயசுக்கு நீ அப்படி இருப்பன்னு நெனச்சா  ? இல்ல எனக்கு இன்னும் வயசு இருக்கு வேற பொண்ண உசார் பண்ணலாம்னு தான் . ஆனா அத தப்பா புரிஞ்சுக்கிட்ட நீ என்னை மட்டும் இல்லாம சக ட்விட்டர்கள் கடல போட்ட பொண்ணுங்க மனசயும் கலைச்சு உன்னோட கடல போட வச்ச . 

ஐயர் மாமிக்கிட்ட கடல போட்ட . கேட்டா சமையல் டிப்ஸ் வாங்குறன்னு சொல்லி எங்க வாய அடைச்சுட்ட . உன்னைய எதுக்கு விட்டோம் நீ சொன்ன காரணத்துக்காகவா இல்ல , உன் வயசுக்கு ஏத்த மாதிரி ஆளுங்க கூட பேசுறன்னு . அத நீ அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு சின்ன பொண்ணுங்க கூட எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட.

நீ ஆண்ட்ராயிட் போன் வாங்குன . நாங்க சந்தோசப்பட்டோம் . எங்க குரூப்லயும் ஒரு ஆளு ஆண்ட்ராயிட் போன் வாங்கிட்டாருன்னு . ஆனா நீ அந்த போன் வந்தோன எல்லாருக்கிட்டயும் அதுக்கு ஆப்ஸ் (Apps) எங்க டவுன்லோடனும்னு கேட்ட . அதுக்குன்னே எங்க ஷேக்ன்னு ஒரு ஆம்பள இருக்குறப்ப நீ அத விட்டுட்டு மத்த பொண்ணுங்கக்கிட்ட கேக்க ஆரம்பிச்சுட்ட . அந்த பொண்ணுங்ககிட்ட ஆப்ஸ் கேக்குறன்னு சொல்லி உன்னோட ஆண்ட்ராயிட் போன காட்டி சீன் போட்டு அவங்களையும் உன் பக்கம் இழுத்துக்கிட்ட . இது என்ன நியாயம் கட்டதொர அவர்களே ?

நீ தனியா உன் பேர்ல வெப்சைட் ஆரம்பிச்சப்ப சந்தோசப்பட்டோம் . நாங்களாம் பிலாக் வச்சு காலம் தள்ளிக்கிட்டு இருக்குறப்ப நீ தனியா பெரிய வெப்சைட் ஆரம்பிக்குறன்னு பெருமையா இருந்துச்சு . ஆனா அப்பயும் நீ அடங்கல . வெப்சைட்டுக்கு கோடிங் எழுதுறதுக்கு ஆளு தேடுன . ட்விட்டர்ல எத்தனையோ திறமையான ஆண் டிசைனர்ஸ் இருக்கும் போது நீ அவங்கள எல்லாம் குப்பைதொட்டில போட்டுட்டு , இன்னொரு பொண்ணோட உதவிய தான் தேடுன . அப்புறம் அந்த கோடிங் மேட்டர மறந்துட்டு கடல வறுக்க ஆரம்பிச்சுட்ட .

இம்புட்டு அதுப்பு பண்ணது பத்தாதுன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி 12ப்பு பெயில் ஆன ஒரு பொண்ணுக்கிட்ட பழக ஆரம்பிச்ச . சரி ஏதோ சின்ன பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணுறன்னு எட்டி பாத்தா அந்த பொண்ணுக்கிட்டயும் கடல தான் போட்டுக்கிட்டு இருக்க . அந்த புள்ள உன்னைய மானாவாரியா திட்டுச்சு . ஆனா நீ சண்டைல சட்டையே கிழியாத மாதிரி திருப்பி திருப்பி கடலை போடுற . உன்னைய திருத்தவே முடியாதான்னு நாங்க ஏங்கிகிட்டு இருந்தப்ப தான் உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்த இருக்குற மேட்டரு தெரிஞ்சுது . அத வச்சு உன் டெபாசிட்ட காலி பண்ணலாம்னு பாத்தா நீ ஏதோ பில்லி , சூனியம் வைச்சு எல்லாரையும் அந்த மேட்டர மறக்க வைச்சுட்ட .

அதுக்கு அப்புறம் அண்ணியோட பேஸ்புக் காண்டாக்ட் கிடைச்சு அவங்கக்கிட்ட உன்னைய பத்தி சொன்னன் . அதுக்கு அப்புறம் அண்ணி உன்னைய ரூம்ல கட்டி வைச்சு அடிச்சதுல ரெண்டு நாள் சும்மா இருந்த . அதுக்கு அப்புறம் அவங்களுக்கு நீ செஞ்ச மீன் குழம்ப குடுத்து அவங்கள மட்டையாக்கிட்டு திருப்பி உன் கடல யாவாரத்த ஆரம்பிச்ச.

அண்ணிய தான் கவுத்துட்டன்னு உன் தங்கச்சிக்கிட்ட சொன்னா அவங்கக்கிட்டயும் ஏதோ பேமிலி சாங்கு பாடி உனக்கு ஆதரவா திருப்பிக்கிட்ட . 

சரி உன் தொல்லைய எப்படி ஒழிக்குறதுன்னு உன்கிட்ட பேசி சுமூகமா முடிவுக்கு வரலாம்னு பேசுனதுல , ஒரு ஓட்டெடுப்பு நடத்தி அதுல மெஜாரிட்டி ஆளுங்க சொல்லுறத கேக்குறன்னு சொன்ன . சரி பெரிய மனுசனாச்சேன்னு நானும் ஓட்டெடுப்புக்கு தயார் பண்ணன் . அங்கையும் உன் சித்து வேலைய காட்டி கள்ள ஓட்டு போட்டுருக்க .

இம்புட்டு நாள் எதுக்கு உன் தொல்லைய பொறுத்துக்கிட்டன்னா நீ துபாய்லேந்து வர்றப்ப பேரீச்சம்பழமும் , டிரவுசரும் வாங்கிட்டு வருவன்னு ஒரு நம்பிக்கைல தான் . ஆனா நீ என்னோட அட்ரஸ் தெரியாதுன்னு சொல்லி அனுப்ப முடியாதுன்னு மறுத்துட்ட . அதனால தான் இப்ப நான் பொங்கி எழுந்துட்டன் .

இன்னைக்கு சாயங்காலம் கூடுற பஞ்சாயத்துல உன்னோட வேட்டி உருவப்படும் . அதுக்கு முன்னாடி நீ நல்ல டிரவுசரா உள்ளார போட்டுட்டு வந்துரு .......

இப்படிக்கு , 
கண்ணீருடன் உன் சிஷ்யன் “குட்டி

March 4, 2012

அரவான் - எளிவனின் விதி


பழைய தமிழகத்தில் பலி கொடுக்கும் பழக்கம் என்று ஒன்று இருந்தது . அதன்படி இரு ஊர்களுக்கு நடுவே அமைதி நிலவ , குற்றங்கள் குறைய ஒருவரை பலி கொடுப்பது வழக்கம் .18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசு பலி முறையை ஒழித்தது . அந்த பலி முறையை சார்ந்து எடுக்கபட்ட படமே அரவான்.கதை :
கொம்பூதி(பசுபதி)யும் , அவர் கூட்டாளிகளும் களவாட செல்லுவது போல் ஆரம்பிக்கிறது படம் .அங்கு வெற்றிகரமாக களவாடி விட்டு வந்த பின்பு அவர்கள் ஊர் பெயரை சொல்லி வரிப்புலி(ஆதி) களவாடுவது தெரிய வருகிறது . அவன் யாரென்று கண்டுபிடித்து அவனிடன் இருந்து அந்த திருட்டுபொருளை மீட்டு எடுக்கிறார் பசுபதி . பின்பு ஆதியின் திறம் கண்டு தங்கள் களவுகூட்டத்தில் சேர்த்துகொள்கிறார் . ஆதியிடம் அவன் யாரென்று கேட்டதற்கு தான் ஒரு அனாதை என்று பதிலளிக்கிறார் . ஒரு கட்டத்தில் பசுபதியின் தங்கை ஆதியின் மீது காதல்வயப்பட பசுபதி ஆதியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்கிறார் . அப்பொழுது ஆதி தனக்கு திருமணம் ஆகிவிட்டது என அதிர்ச்சியான தகவலை கூறுகிறார் . அந்த நேரத்தில் ஒரு ஜல்லிக்கட்டில் பசுபதியின் ஊர் பெயரை சொல்லி ஒருவன் சவாலுக்கு இழுக்கிறான் . அப்பொழுது ஆதி தானும் பசுபதியின் ஊரை சேர்ந்தவனே என்று உண்மையை உடைக்கிறார் . ஜல்லிக்கட்டில் ஆதி ஜெயிக்கும் பொழுது ஒரு கும்பல் அவரை இழுத்து கொண்டு செல்கிறது . அப்பொழுது ஆதி ஒரு ஊரின் பலி ஆடு என்பது தெரியவருகிறது . அதற்கு பின்பு விரிவதே இரண்டாம் பாதியும் , படத்தின் இன்னொரு கதையும் .

ஆதியின் மாஸ்டர்பீசாக இந்த படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை . ஈரம் படத்திற்கு பின்பு ஆதியின் விஸ்வரூபம் இந்த படத்தில் தெரிகிறது . அவருக்கு போட்டி பசுபதியே . படத்தின் இரண்டாம் கதாநாயகனா இல்லை அவர் தான் கதாநாயகனா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது அவரது நடிப்பு .
ஆதி திருடிவிடக்கூடாது என்பதற்காக பசுபதி மரத்தை வெட்ட சொல்வதும் , அதை தனக்கு சாதகம் என்று ஆதி சொல்வதும் செம்ம ரிவீட் . படத்தின் ஆங்காங்கே நகைச்சுவையை தூவிவிட்டு படத்தை அலுக்காமல் கொண்டு சென்றிக்கிறார் இயக்குனர் . கருங்காலியாக வரும் நபர் கிரேட் செலக்‌ஷன் . தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும் இடங்கள் என்றால் சிங்கம்புலி வரும் கொளுந்தியாள் பாகம் தான் . படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் போய் விட்டு இரண்டாம் பாதியை இந்த இழு இழுத்திருப்பது ஏனோ ? .

படத்தில் கதாநாயகிகளுக்கு மிக பெரிய ஸ்கோப் இருக்கும் என்று பார்த்தால் அவர்கள் இடத்தையும் சேர்த்து மற்ற நடிகர்களே ஆக்கிரமித்து கொள்கின்றனர் . முதல் பாதியில் வரும் அர்ச்சனாகவியை(சிமிட்டி) மறந்தும் கூட இரண்டாம் பாதியில் காட்டவில்லை . தன்ஷிகா(பேச்சி) சும்மாக்காச்சுக்கும் வந்து போகிறார் . அஞ்சலி படத்தில் உண்டு என்று நம்பி போனால் அவர் அழுவதை தவிர வேறு ஒரு வேலையும் செய்யவில்லை . பரத் ஏனோ மனதில் ஒட்ட மறுக்கிறார் . ராஜாவாக வருபவர் சில நிமிடம் வந்தாலும் வில்லத்தனத்தை பார்வையிலேயே விதைத்து விட்டு செல்கிறார் . தாசியாக வருபவர் வெள்ளி அரைஞான் கொடியை வைத்து கண்டுபிடிப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தில் ஒன்று .

படத்தில் ஒரு எளியவன் வலியவனால் எப்படி தன் வாழ்க்கையை இழக்கிறான் என்பதை மிகச்சரியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் . தான் செய்யாத ஒரு குற்றத்திற்கு ஒரு மனிதன் பலியாகும் போது என்ன என்ன நிகழும் என்பதற்கு இந்த படம் ஒரு அத்தாட்சி . படத்தின் கருத்து என்று இயக்குனர் கூறுவது ”மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்பதே . பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு மனதில் ஒட்டவில்லை .

படத்தின் பலங்கள் :

பழந்தமிழகம் எப்படி இருக்குமென்று அப்படியே கண் முன் நிறுத்தியதும் , பழந்தமிழரின் வாழ்க்கை எப்படி இருக்குமென்று துல்லிமாக காட்டியது .

களவாடும் முறையை இதுவரை தமிழில் காட்டியிடாதவாறு தெளிவாக காட்டியது .

பசுபதியும் அவர் கூட்டாளிகளும் சேர்ந்து திருடும் காட்சிகள் .

மகாராஜா என்றால் பெரிய அரண்மனை என்று காட்டாமல் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார் என காட்டியது .

சிங்கம்புலியை நகைச்சுவைக்கு மட்டும் உபயோகப்படுத்தாமல் படத்தின் திருப்புமுனைக்கும் பயன்படுத்தியது .

பழந்தமிழர் என்றால் செந்தமிழில் தான் பேசுவார்கள் என்று காட்டாமல் வழக்குமொழியில் பேச வைத்திருப்பது .

அசாதாரணமாக உழைத்த படத்தின் நடிகர்கள் அனைவரும் .

ஈட்டி போன்ற வசனங்கள் (வசந்தபாலன் - வெங்கடேசன்)

எதற்காக பலி கொடுக்கிறார்கள் , பலி தோன்றியதன் வரலாறை சுருக்கமாக ராஜா சொல்லும் காட்சி .

கார்த்திக்கின் இசை (அறிமுகம்)

அசாதாரணமான கோணங்களில் காட்டிய கேமராமேன் சித்தார்த்

அடிசறுக்கும் இடங்கள் :

படத்தின் போஸ்டரில் நிஜமாட்டை காட்டிவிட்டு அந்த காட்சி முழுக்க கிராபிக்ஸ் உபயோகபடுத்தியிருப்பது .

பல இடங்களில் கிராபிக்ஸ் கேவலமாக இருப்பது .

அந்த தேவையில்லாத உன்ன கொல்ல போறேன் பாடல் .

அவசர அவசரமாக முடிக்கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ் .

கருத்து சொல்லி தான் படத்தை முடிக்க வேண்டும் என்று வலிய ஒரு கருத்தை திணித்திருப்பது .

படத்தில் நச் என்று பதிந்த வசனங்கள் :

ஊர்மக்கள் : களவாணிப்பயல கட்டுங்கடா
வரிப்புலி : நான் களவாணின்னா நீங்களாம் யாருடா ?

சிமிட்டி : வாக்கு ஜக்கம்மாதுன்னாலும் நாக்கு சிமிட்டியிது

ஜமீந்தாரின் மனைவி : இந்த கிழவி வெத்தல இடிக்கிறாளா இல்ல வீட்டையே இடிக்கிறாளா ? ஊருக்கு எல்லாம் இவ சத்தம் கேக்குது அந்த எமனுக்கு கேக்காதா ??

அஞ்சலி (இது நச் வசனம் இல்லை இந்த படத்தில் அவர் பேசிய ஒரே வசனம்) : அப்பா இனிமே இவர பாக்க மாட்டன்பா

வரிப்புலி : களவுலேந்து தான் காவல் பொறக்கும்

சிங்கம்புலி : என் பொண்டாட்டிய பாத்துருந்தா கூட விட்டுருப்பன் , ஆனா என் கொழுந்தியாள பாக்குறான்பா

சிமிட்டி : அரவட்ட கல்ல நான் கூட தூக்கிகிட்டு ஓடுவன் 

கூத்து கட்டுபவர் : நான் வாக்கு தவற மாட்டன் . எனக்கு வாக்கு தான் நாக்கு

சிங்கம்புலி : இன்னும் ஒரு வருசம் கழிச்சு வந்துருக்கலாம்ல ?
ஆதி : விதிடா

பசுபதி : தூக்கம் வர்றவன் களவுக்கு வரக்கூடாதுடா

சிங்கம்புலி : யெப்பா கிட்டக்க போவாதப்பா , மாத்தூரான் சின்ன புள்ளைய வச்சு நம்மள புடிக்க பாக்குறான் . கத்திய எடுத்து சொருவிட போறா

டிஸ்கி : தயவுசெய்து மசாலா பட விரும்பிகள் இந்த படத்திற்கு செல்ல வேண்டாம் . பார்த்து விட்டு என்னை திட்டினால் நான் பொறுப்பல்ல .

February 29, 2012

பிப்ரவரி 30ம் பல்புகளும்......

நம்ம பசங்களுக்கு பிப்ரவரி மாசம் மட்டும் எங்குட்டு இருந்து இம்புட்டு அறிவு வருதுன்னு தெரியல . நம்மளுக்கு பல்பு (குறிப்பா எனக்கு) கொடுக்குறதுக்குன்னே ஒரு கூட்டம் அலைஞ்சுக்கிட்டு இருக்குது . அப்படி என்னா தான் பல்பு குடுத்தாங்க , குடுக்கபோறாங்கன்னு ஒரு கற்பனை + உண்மை பதிவு .........


நேத்து காலைல 6 மணிக்கு (நம்புங்கப்பா காலைல 6 மணி தான்) நான் எந்திரிச்சப்ப ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு . அதுல பாத்தா என்னோட குளோஸ் பிரெண்டு திடீர்னு எனக்கு இந்த மாசம் 30ந்தேதி நிச்சயதார்த்தம் கண்டிப்பா வந்துருன்னு மெசேஜ் பண்ணிருந்தான் . சரி நண்பனுக்கு நல்லது நடக்குதேன்னு பார்ட்டி கேக்கலாம்னு (ஆகா நீ நல்லதுன்னு சொன்னப்பவே சுதாரிச்சுருக்கனும்) போன் பண்ணுனன் . போன் பண்ணுனா அவன் ஒரு வார்த்தை சொன்னான் . அத கேட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன் நானு . அது என்னான்னா “போடா லூசு , பிப்ரவரிக்கு ஏதுடா 30”ன்னு சொல்லுறான்(பயபுள்ள ஏமாத்திட்டான்) . சரி அப்படியே கொஞ்ச பில்டப் குடுத்து இது மார்ச் மாசம்னு நெனச்சுட்டன்னு சொல்லி நான் போன வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு சொல்லி தெரியாது........அதுக்கு அப்புறம் இந்த மாதிரியே எல்லாரும் மெசேஜ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க . சரி நம்மளும் பண்ணுவோமேன்னு சொல்லிட்டு பண்ணுனா , அதுக்கு வந்த ஒரு ரிப்ளை “அந்த தியாகிக்கு என்னோட வாழ்த்துகள சொல்லிடு” . காலைலயாச்சும் ஒரு பல்பு மட்டும் தான் வாங்குனன் . இப்ப ஒரு ட்யூப்லைட்டையே வாங்கிருக்கன் .


அதோட விடல என்னோட கெரகம் . தெரியாத்தனமா என்னோட லவ்வருக்கு(அட நம்புங்கப்பா) வேற அனுப்பி தொலச்சுட்டன் இந்த மெசேஜ . வழக்கம் போல சாயங்காலம்  காலேஜ் முடிச்சுட்டு(காலேஜ்லேந்து உன்னிய தொரத்தி வுட்டாங்கன்னு சொல்லு) வந்தா 7 மெசேஜ் . எல்லாம் லவ்வர்கிட்டேந்து தான் . எல்லா மெசேஜ்லயும் ”கால் மீ” தான் . அதான் பாத்தன் பாவி இப்பயாச்சும் நீ கால் பண்ணுவன்னு பாத்தா அப்பயும் கால் மீ . சரி போனா போகுதேன்னு (கால் பண்ணலன்னா பிரிஞ்சிருவாளோன்னு ஒரு பயம்) கால் பண்ணுனன் . கால் பண்ணுனா மம்மி ,டாடி பாவம்லாம் போய் ஒன்னு விட்ட அப்பத்தாவலாம் புடிச்சு திட்டுறா . ஒரே பேட் வேர்ட்ஸ் . திடீர்னு கல்யாணம்னு மெசேஜ் அனுப்புனோன பாசத்துல திட்டுறான்னு பாத்தா கடைசியா சொன்னா பாருங்க ஒரு வார்த்தை “உன் மூஞ்சுக்கு எல்லாம் எவண்டா பொண்ணு குடுப்பான் , நானே ஒனக்கு ஓவர் , இதுல இன்னொரு பொண்ணு வேறயா” .ஒடனே கட் பண்ணிட்டனே போன . மனசுக்குள்ள “பாவி மவளே , ஏதோ லவ்வுல போன் பண்ணுறியேன்னு பாத்தா என்னிய கலாய்க்கறதுக்கு போன் பண்ணிருக்கியேடி” . ஹூம் , இதுக்கு நான் அவளுக்கு போன் பண்ணாமையே இருந்துருக்கலாம் . நான் போன பிராக்கெட்டுல சொல்லிருந்த நல்ல விஷயமாச்சும் நடந்து தொலைச்சுருக்கும் .

ஆகவே மக்களே இனிமே மெசேஜ பாத்துட்டு உணர்ச்சிவசப்பட்டு கால் பண்ணுறதுக்கு முன்னாடி காலண்டரையும் கொஞ்சம் பாத்துருங்க . இல்லாட்டி எனக்கு கிடைச்சா மாதிரி உங்களுக்கும் தொடர்ச்சியா பல்பு கிடைக்கும்ங்குறதுல எந்த சந்தேகமும் இல்ல.

டிஸ்கி : இனிமே எந்த மெசேஜ் வந்தாலும் கால் பண்ண மாட்டண்டா (ஏன்னா என்கிட்ட பேலன்ஸ் இல்லடா)

February 28, 2012

கோடி வித் எ கேடி......

இப்ப தமிழ்நாட்டையே கலக்கிக்கிட்டு இருக்குற ஒரு ப்ரொக்ராம் நம்ம விஜய் டிவி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தான் . அது கலக்கிக்கிட்டு இருக்குறது மக்கள் மனச இல்லைங்க , மக்களோட மூளைய தான் . சில பேருக்கு வயிறு கூட கலங்குதுங்க அந்த ஷோவ பாக்குறப்ப .இந்த ஷோவ ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே இவங்க குடுக்க ஆரம்பிச்ச அலப்பற இருக்குதே சப்பாஆஆஆ........ எப்ப விஜய் டிவி பக்கம் போனாலும் ஒருத்தர் கோட்டு சூட்டு போட்டுகிட்டு வந்து ஆரம்பிச்சுருவாரு , மாற்றம் ஒன்றே மாறாதது .  நல்லா உத்து பாத்தா நம்ம சூர்யா . இவரு போட்டுருக்க கோட்டு ரொம்ப நாறுது .(கோபிநாத்து மாதிரி இவரும் துவைக்க மாட்டாரு போல) . சுருக்கமா சொல்லனும்னா அடுத்த கோட்டு கோபி உருவாகிறார் .  தினம் தினம் இந்த தொல்ல தாங்கல . சீக்கிரம் ஆரம்பிக்குறோம் , சீக்கிரம் ஆரம்பிக்குறோம்னு தான் சொன்னானுங்களே ஒழிய ஆரம்பிக்கலையே . இப்படியே கொஞ்ச நாள் மக்கள் மனச வேவ வச்சுக்கிட்டு இருந்தானுங்க .

அப்புறமா அந்த ஷோவுக்கு ஆளு சேக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க . அதுக்கு அவங்க கேட்ட கேள்வி என்சைக்ளோபீடியாலயே இல்லன்னா பாத்துக்கோங்க . ஆமாம் , எல்.கே.ஜி புள்ளைக்கு அட்மிஷன் அப்ப வைக்கிற இண்டர்வியூல கேக்குற மாதிரி ஆரம்பிச்சுட்டாங்க கேள்வி கேக்க (உங்கள எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களாடா) . இன்னும் கொஞ்ச நாள் விட்டுருந்தா எட்டு கால் பூச்சிக்கு எத்தன காலுன்னு கூட கேட்டு தொலச்சுருப்பாங்க . இப்படி கொஞ்ச நாள் கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தாங்க . நம்ம தமிழ் மக்கள் அறிவை இம்ப்ரூவ் பண்ணாங்களோ இல்லையோ எனக்கு தெரியாது , விஜய் டிவி காரனோட டிஆர்பி ரேட்டிங் நல்லாவே ஏறுனுச்சு . அது மட்டுமில்லாம அப்பாவி புத்திசாலிங்க எஸ்.எம்.எஸ் மூலமா ஆன்சர அனுப்பி அவங்க கல்லாவையும் நல்லாவே கட்டுனாங்க .

அப்புறம் ஒரு வழியா ஷோவையும் ஆரம்பிச்சுட்டாய்ங்க . அதுல கேக்குறானுங்க பாருங்க ஒரு கேள்வி , யெப்பா சாமி இதுக்கு எஸ்.எம்.எஸ் வழியா ஆன்சர் அனுப்ப சொன்ன கேள்வி எவ்வளவோ தேவலாம். காப்பி அடிக்கிறத என்னா சொல்லுவோம்னு கேட்டுட்டு , அதுக்கு நாலு ஆப்சன் வேற , ஈயடிச்சான் காப்பி , நாயடிச்சான் காப்பி , பேயடிச்சான் காப்பின்னு .

இதுல கேள்வி கேட்டா மட்டும் பத்தாதுன்னு வெளாட வந்தவரு எஸ்.டி.டீ , ஐ.எஸ்.டி ய எல்லாம் கேட்டு வேற கடுப்பேத்துறாங்க மை லார்டு .

இதுல கம்ப்யூட்டருக்கு வேற ஒரு பேரு வச்சு தொலச்சுருக்கானுங்க . அது என்னான்னா மிஸ்டர்.ஜீனியஸ் (ஜீனின்னு வந்தோன சக்கரன்னு நெனச்சுக்காதீங்க . அவரு புத்திசாலின்னு சொல்லுறாராம்) . இனிமே தினமும் ஒன்றரை மணி நேரம் அந்த தொல்ல தொடரும் . 

இந்த தொல்ல பத்தாதுன்னு புதுசா ஒரு தொல்ல வேற இருக்குது ,  அது சன் டிவியும் இந்த ப்ரோக்ராமுக்கு ஆப்போசிட்டா (”ஆப்பு”சிட்டா) புதுசா ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கிறாங்களாம் . ஏற்கனவே ஒருத்தன் தாலி அறுக்கறது பத்தாதுன்னு இது வேறயா ??

சரி , நீங்களும் புத்திசாலி ஆக சில கொஸ்டீன்ஸ் , இதுக்கு ஆன்சர் தெரிஞ்சா நீங்களும் வெளாடலாம் கோடி வித் எ கேடி....

1)படையப்பா படத்தின் பெயர் என்ன ?

a) படையப்பா      b) பாட்ஷா      c) அண்ணாமலை      d) சிவாஜி

2 )இந்த படத்தில் இருப்பவர் யார் ?

a) விஜயகாந்த்      b) புரட்சிகலைஞர்      c) தேமுதிக தலைவர்      d) கேப்டன்

3)சதுரம் எந்த வடிவத்தில் இருக்கும் ?

a) கட்டமா      b) வட்டமா      c) கோணலா      d) நீளமா

4)நீங்க யாரு ?

a) நீங்க      b) சூர்யா      c) விஜய்      d) கமல்

5)எட்டுகால் பூச்சிக்கு எத்தன கால் ?

a) 4      b) 3     c) 9      d) 8

இந்த கேள்விக்கெல்லாம் உங்களுக்கு பதில் தெரிஞ்சா ஒடனே உங்க போன எடுங்க , எங்களுக்கு எஸ்.எம்.எஸ்* வழியா அனுப்புங்க . செலெக்ட் ஆனா நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

* - ஒரு எஸ்.எம்.எஸ் கட்டணம் 10 ரூபாய் மட்டுமே(அடங்கொன்னியா)

டிஸ்கி : இந்த பதிவ படிச்சும் அந்த நிகழ்ச்சில கலந்துக்குவன்னு ஒத்த கால்ல நின்னா உங்களுக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்ல முடியும் “விதி வலியது”

February 27, 2012

அதிரிபுதிரி.....(01)

பஸ்கி : ஒவ்வொரு வாரமும் அரசியல்ல நடக்குற உட்சபட்ச காமெடி சீன்களின் தொகுப்பு தான் அதிரிபுதிரி . இனி வாராவாரம் கூத்தடிப்போம்

**********************************************************************************

இந்த வாரம் சங்கரன்கோவில் தான் ஹாட் மேட்டரு

நம்ம மாம்பழக்காரரு (அதாங்க ராமதாஸ்) போன வாரம் சும்மா தானுங்க இருந்தாரு , பட் அவரோட புள்ளையாண்டான் மிஸ்டர்.அன்புமணி தான் போன வாரத்து டாக் ஆப் தமிழ்நாடு . அப்படி என்னாத்தய்யா பேசுனாருன்னு கேக்குறீங்களா ??"ராமதாஸ் தான் உண்மையான தமிழர் - மற்ற அனைவரும் தமிழர் இல்லை"

இது தான் அந்த பயபுள்ள விட்ட ஸ்டேட்மெண்ட்

இதுல ஆரம்பிச்சது தான் கும்மி . அதுக்கு அப்புறம் அவங்க அப்பாவ விட ஓவர் நைட்ல ஒபாமா ஆயிட்டாருங்க . கூடவே அவங்க சங்கட்தோட ட்ரேட்மார்க் டயலாக் “திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது” . இவங்க கூப்புட்டாலும் அவங்க வரமாட்டாங்கன்னு ஊருக்கே தெரியும் .

********************************************************************************** 


நம்ம வடிவேலு திருப்பியும் புதுசா ஆரம்பிச்சுட்டாரு . அரசியல்ல குதிச்சே தீருவன்னு ஒத்த கால்ல நின்னுட்டு இருக்காப்பல புயல் . புயல் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி பல்பானது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் . இந்த வாட்டி அவரு ட்யூப்லைட்டு ஆவறது அவராட்டியே தடுக்க முடியாது  . இதுல என்னைய யாராட்டியும் தடுக்க முடியாதுன்னு வேற பஞ்ச் !!!

**********************************************************************************

வழக்கம் போல நம்ம காங்கிரஸ் காரங்க நம்பிக்கைய வீணாக்கல , அறிக்கைலாம் விட்டாங்க . அதுல டாப் மோஸ்ட் டயலாக் - “விளம்பரம் இல்லாததால் விலாசம் இல்லாமல் போனோம்” , சொன்னது நம்ம ஞானதேசிகன் . என்னா இருந்தாலும் தங்கபாலு மாதிரி வராதுங்க . இது பத்தாதுன்னு நம்ம ஜி.கே.வாசன் , அதாங்க மத்திய மந்திரி அவரு வேற கான்பிடன்சா சொல்லுறாரு , திமுக ஜெயிக்கும்னு . அப்படியே ஜெயிச்சுட்டாலும் .


இது பத்தாதுன்னு காங்கிரஸ்க்கு இது போதாத காலம் . நம்ம உள்துறை மந்திரி ஏதோ சட்டம் கொண்டு வர்றதா பேச்சு , அதுல சில பல உரிமைகள் பறிபோகுதுன்னு எல்லா முதல்வர்களும் இப்ப அவருக்கு எதிரா திரும்பிருக்காங்க . இப்ப அவரு எல்லாருக்கும் கலைஞர் அளவுக்கு லெட்டர் எழுதிகிட்டு இருக்காரு . இன்னும் கொஞ்ச நாள்ல ப.சி யோட டவுசர் அவிழ்க்கபடும்னு எல்லாரும் ஆவலோட எதிர்பாக்குறாங்க . அவங்க ஆசை நிறைவேறட்டும் .................


**********************************************************************************

நெக்ஸ்ட் ஏரியா நம்ம கேப்டன் . அவரு அம்மாக்கிட்ட சவால் விட்டதுக்குன்னே தனியா வேற நிக்குறாரு . பிரச்சாரத்துக்கு போய்யான்னா குடும்பத்தோட ஏதோ பிக்னிக் போறா மாதிரியே போறாரு , கேட்டா கூட்டுறவே நாட்டுயர்வுன்னு ஒரு டயலாக்கு . சப்பா , இப்பவே கண்ண கட்ட ஆரம்பிக்குதே.............


நல்லா பாத்துக்கோங்க இதுல இருக்குற கேப்டன் பையன் அடுத்ததா சினிமால வேற நடிக்க போறாராம் . தமிழ்நாட்டு மக்களே உசார் . அடுத்த பஞ்ச் பரமசிவம் உருவாகிறார் ............

**********************************************************************************

அதிமுக இந்த வாட்டி இடைத்தேர்தல்ல ஜெயிச்சே ஆகனும்னு ஒத்த கால்ல நிக்குறது தெரியுது  . அதுக்காக இருக்குற மந்திரி எல்லாம் அங்க இப்ப பிரசாரம் பண்ண ஆரம்பிச்சாச்சு . நம்ம கேப்டன் வேற இதுக்கு தடை கேட்டார்.

அம்மா வேற கரண்டு கட்டு , சமச்சீர் கல்வி , அண்ணா நூலகம்னு ஏகப்பட்ட மைனஸ் வச்சுக்கிட்டு இருக்காங்க . ஜெயிப்பாங்களான்னு தெரியாது , ஆனா அங்க பலத்த போட்டி இருக்குன்னு மட்டும் தெரியுது

**********************************************************************************

அது எப்படிங்க திமுகவ விட்டுட்டு எழுத முடியும் ??

திமுக வும் இடைத்தேர்தல்ல நிக்குது . ஆனா இன்னும் அங்க யாரு வேட்பாளர்ன்னு சந்தேகமா தாங்க இருக்கு . இதுல கலைஞர் வேற நாங்க தமிழ பாலிடாயில் ஊத்தி வளர்த்தோம்னு கொக்கரிச்சுக்கிட்டு இருக்காரு . இன்னும் மியூசிக்கல் சேர் நிக்கலங்க யார் வேட்பாளர்ன்னு .


**********************************************************************************

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் நம்ம பாஜக பெரிய காமெடிபீசாவாலாம்னு ட்ரை பண்ணுறாங்க . ஆமாம் அவங்க இந்த இடைத்தேர்தல்ல யார் ஆதரவும் இல்லாம தனியா நிக்குறாங்க . இவங்க டவுசர உறுவலாம்னு எல்லாரும் பாத்தா இவங்க ரொம்ப உசார் , டவுசரே போடல , ரொம்ப புத்திசாலிங்க போல....

**********************************************************************************

டிஸ்கி : மேல சொன்னா மாதிரி வாரம் ஒரு பதிவ விட்டுறுவங்க . ஞாயிறு இல்லன்னா திங்கள் ரெண்டு நாள்ல விட்டுருவன் . உங்கள் ஆதரவு தேவை .

February 25, 2012

வாங்க சொதப்பலாம்.... - விமர்சனம்

எல்லாரும் விமர்சனம் போட்டாச்சு , நாம மட்டும் எதுக்கு விட்டு வைக்கனும்??
போட்டுட்டா போச்சு . நேத்து தான் படத்த பாத்தன் . அதனால லேட் விமர்சனத்துக்கு சாரிங்கோ ...........

முதல்ல படத்தோட கதைய சொல்லிடுறன் :

நெறைய பேரு படத்த பாத்து தொலச்சுருப்பீங்க . அவிங்க மட்டும் இந்த பேராவ ஸ்கிப் செஞ்சுடுங்க . அதாகப்பட்டது படத்தோட கதை என்னான்னா ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்றாங்க(ஆமாம் இது பெரிய ஒலக அதிசயம்) . அவங்க ரெண்டு பேரும் வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம எதுக்காகவாச்சும் சண்ட போட்டுக்கிட்டே இருக்குறாங்க . ஒரு கட்டத்துல(அதென்னா கட்டம் ?? சதுரம் ரவுண்டாலாம் இருக்காதா)  இதுக்கு நடுவுல ஈரோயினோட அப்பா அம்மா வேற அடிச்சுக்குறாங்க(ஏன்யா கன்னுக்குட்டிய பத்தி பேசுறப்ப பசு மாட்ட இழுக்குற) . ஈரோவும் ஈரோயினும் சேந்தாங்களா(அவங்க சேருவாங்கன்னு பச்ச புள்ளைக்குக் கூட தெரியும்) , ஈரோயினோட அப்பா அம்மா என்ன ஆனாங்கங்கறது தான் மீதிக்கதை.


இனிமே படத்த பத்தி என் அறிவுக்கு(?!?!?) எட்டுனத சொல்லுறன் :
 
படம் நிஜமாவே சூப்பரா தான் இருக்கு . என்ன ஹீரோ எப்ப பாத்தாலும் படத்த பத்தி கமெண்ட் குடுத்துக்கிட்டே இருக்காரு . நான் பிளாக்ல ப்ராக்கெட்ல கமெண்ட் சொல்லுவன்ல அந்த மாதிரி (பாரு ,இன்னும் ஒழுங்கா எழுதவே கத்துக்கல , அதுக்குள்ள படத்தோட கம்பேர் பண்ணுற ?? நீ நடத்து மவனே) . படத்தோட பெரிய ப்ளஸ்சே சித்தார்த்தோட பிரெண்ட்ஸ் , அப்புறம் ஈரோயினோட அப்பா அம்மா தாங்க . எப்பா பாரு சித்தார்த்தும் அமலாபாலும் சண்ட போடுறதுல அமலா பால் தாங்க ஜெயிக்குது . அதுக்கு அந்த புள்ள யூஸ் பண்ணுற வெப்பன் கண்ணீர் . அத சித்தார்த் சொல்லுற இடத்துல சிம்பாலிக்கா அருவிய காட்டிருப்பாங்க . 

படத்துல வெட்டுக்குத்து இல்லன்னாலும் அத விட மோசமான் மேட்டர்லாம் இருக்குங்க . படத்துல சித்தார்த்தோட பிரெண்டா வர்றவரு எப்ப பாரு பொண்ணுங்க கிட்ட அடி வாங்கிகிட்டே இருப்பாரு . இன்னொருத்தரு அண்ணான்னு சொல்லுற பொண்ணையும் லவ்விட்டே இருப்பாரு . இது பத்தாதுன்னு சித்தார்த் அப்பா அம்மா வேற ரொமான்ஸ் .... (முடியல) . ஒரு தடவ ரெண்டு தடவ சண்ட போட்டா பரவால்ல , இவங்க போடுற சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லப்பா . 

பாவம் எப்ப பாத்தாலும் சித்தார்த் ஏதாச்சும் செய்ய போய் அது அவருக்கே வினையா முடிஞ்சுடுது . உதாரணத்துக்கு அமலா பால் எத பத்தி யோசிக்கிறன்னு கேப்பாங்க . அதுக்கு இவரு முதல்ல எத பத்தியும் யோசிக்கலன்னு சொல்லிட்டு , அப்புறம் மழுப்பறதுக்காக உன் போன்ல ஏன் இத்தன பசங்க நம்பர் இருக்குன்னு கேப்பாரு . அப்புறம் ஆரம்பிக்கும் பாருங்க ரணகளம் , (சித்தார்த்த நினைச்சு தியேட்டர்லயே அழுக அழுகயா வந்துடுச்சு)

படத்தோட ஸ்வீட் எபிசோடுன்னா அது அமலா பால் அப்பா அம்மா எபிசோடு தான் , அதுவும் கோயில்ல ரெண்டு பேரும் பாத்துக்குறப்ப வளையோசை பாட்டு போடுறது செம்ம குறும்பு . அதுக்கு அப்புறம் அவரு ஈரோயின விட ஓவரா வெக்க படுறாருங்க . பொண்ணுக்கிட்டயே லவ் லெட்டர குடுத்து அம்மாகிட்ட குடுக்க சொல்லுறது ஓவர் ரவுசு .

சித்தார்த்தோட மொத்த குடும்பமுமே பேஸ்புக்குல கும்மியடிச்சுட்டு இருக்குது . சித்தார்த்தோட ப்ரொஃபைல்ல அமலா பால் போட்டோவ பாத்துட்டு அது யாருன்னு கேட்டு குடும்பமே ஓட்டுறது , அமலா பால் சித்தார்த்துக்கிட்ட உன் சின்ன வயசு போட்டோ அப்லோடு பண்ணதுக்கு பாட்டின்னு அவரு பதில் சொல்லுறதுன்னு எல்லாமே ஏதோ கனவுல நடக்குற மாதிரியே இருக்கு (நம்ம வீட்டுல எல்லாம் அப்படி பாத்தாங்கன்னா ஒரு பில்லி,சூனியமாச்சும் வச்சுருப்பாங்க)

படத்தோட இன்னொரு பிளஸ்சு சித்தார்த்தோட பிரெண்டா வர்ற அந்த குண்டு பையன் தாங்க . அவன் லவ்வர்ச சேத்து வைக்கிறன்னு சொல்லிட்டு செய்யுற அலப்பற தாங்கல . அமலா பாலும் , சித்தார்த்தும் சண்டைன்னு சமாதானத்துக்கு அவருகிட்ட போவாங்க . பட் கொடுமை என்னான்னா அவருகிட்ட போனதுக்கு அப்புறம் தான் சண்டை பெருசா ஆவும் . அதுல வர்ற டயலாக் “நம்ம பசங்க சொதப்பறதுக்கு காரணமே இந்த மாதிரி மொக்க பசங்களோட அட்வைஸாட்டி தான்”.

படத்தோட மைனஸ்னா அந்த பாண்டிச்சேரி எபிசோட வளவளான்னு இழுத்துறுக்குறது தான். மத்தபடி படம் யூத்துங்க(என்னைய மாதிரி) எல்லாருக்கும் புடிக்கும் .

டிஸ்கி 1 : மவனே , எவனாச்சும் டயலாக்க வச்சு ஒரு பதிவு போடு , அது இதுன்னு சொன்னீங்க தொலச்சுபுடுவேன் . அதுக்குன்னு என் தலைவர் இருக்காரு . அவரு ஏற்கனவே போட்டுட்டாரு
டிஸ்கி 2 : எவனும் என்கிட்ட எங்க பாத்தன்லாம் கேட்டுறாதீங்கப்பா

February 24, 2012

தொடரும் மனிதஉரிமை மீறல்கள்

இப்பொழுது நடந்திருக்கும் வேளச்சேரி என்கவுண்டர் பற்றி தான் இணையத்தில் எல்லோரும் பரவலாக பேசி வருகிறார்கள் . ஆனால் இதிலும் இரு சாரார் பிரிந்து சண்டையிட்டு கொள்வது தான் வருந்ததக்க விஷயம் . 

ஒரு சாரார் அவர்களை கொன்றது சரி என்றும் , இன்னொரு சாரார் அவர்களை கொன்றது தவறு என்றும் வாதிடுகிறார்கள் . என் பார்வையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகப்பெரிய தவறே . 5 பேரை சுட்டுக்கொன்றது சட்டத்தை காக்கும் செயல் என்றால் பலநூறு பேரை கொன்ற கசாப்பை இன்னும் சிறையில் வைத்து அழகு பார்ப்பதன் உள்நோக்கம் எதுவோ ?

சென்ற ஜனவரி 23ந் தேதி 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் தான் இவர்கள் . 20 லட்சம் பணத்திற்காக 5 பேரை கொல்ல தயங்காத அரசு , பல்லாயிரம் கோடியை கொள்ளையடிக்கும் பணமுதலைகளை இன்னும் விட்டு வைத்திருப்பது இந்த நூற்றாண்டின் உச்சகட்ட கேவலம் . 

தமிழ்நாட்டில் இதுவரை இப்படி ஒரு என்கவுண்டர் நடக்கவில்லை என்று வேறு போலீசார் தங்கள் மார் தூக்கி சொல்கிறார்கள் . இந்த சம்பவத்திற்கு இன்னும் ஒரு மனித உரிமை அமைப்பு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை  . அவர்களும் இதை ஏற்றுக்கொண்டார்களோ என்று அஞ்சத்தோன்றுகிறது . இதை விட அச்சபடவேண்டிய தகவல் ஒன்று இருக்கிறது . அது மக்கள் இந்த என்கவுண்டரை வரவேற்று இருப்பது தான் . மக்கள் இப்படியே வரவேற்பார்களானால் ஒரு நாள் அவர்களே வருத்தபட வேண்டியது இருக்கும் .

ஒரு கட்டத்தில் எந்த தண்டனைக்கும் என்கவுண்டரை செயல்படுத்தலாம் என்ற நிலைமை ஏற்படலாம் . இதில் இன்னொரு வினோதம் போலீசாரின் செயல்பாடே . மாலையிலேயே கொள்ளையர்களை பற்றி துப்பு கிடைத்தும் அதை பொருட்படுத்தாமல் நள்ளிரவு 1.30க்கு இந்த என்கவுண்டரை நிறைவேற்றியிருப்பது , கொள்ளையர்களை உயிரோடு விட்டால் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என நினைத்து செயல்பட்டதையே சுட்டிக்காட்டுகிறது .

கொள்ளையடித்த பணத்தை மீட்டு விட்டோம் என கூறுகிறார்கள் . ஆனால் 5 உயிர்களின் விலை 20 லட்சமா ?? பிற்காலத்தில் தங்களுக்கு வேண்டாதவர்களை சுட்டுக்கொல்ல மக்கள் கூலிப்படைகளை நாடாமல் போலீசாரை நாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .

சட்டம் , ஒழுங்கு நிலைநாட்ட பட்டுவிட்டது என பலர் பேட்டி கொடுக்கிறார்கள் . ஆனால் இது மக்களின் மனதில் ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என சொல்ல மறந்து விட்டார்கள் . இனிவரும் காலத்திலாவது மக்கள் இதை போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை ஆதரிப்பதை விட்டொழிக்கட்டும் .

February 23, 2012

தமிழன் என்றொரு இனமுண்டு......

தமிழன் என்றாலே எவரும் மதிக்காத ஒரு நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது இந்த சீர் மிகுந்த உலகில்..........

 கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை சுட்டுகொன்றது இத்தாலி ராணுவம் . இதில் தமிழக மீனவர்கள் , கேரள மீனவர்களும் அடக்கம் . இதனால் நாடே கொந்தளித்தது . கேரளாவாசிகள் கொதித்து எழுந்தனர் , இந்தியாவை சேர்ந்த கேரள மீனவர்களை எப்படி சுட்டு கொல்லலாம் என்று . ஆமாம் கேரளா மட்டுமே இந்தியாவிற்குள் இருக்கிறது . தமிழகம் என்பதை இந்தியாவை விட்டு விலக்கி வைத்து பல வருடங்களாகின்றன் . கேரளா கொதித்ததை தொடர்ந்து நமது அண்டை நாடான இந்தியாவை சேர்ந்த அரசு கைது செய்தது . அப்பொழுது தமிழக மீனவர்களின் குடும்பங்களில் நிலை ?? தமிழகம் இப்பொழுது இந்தியாவின் கீழ் இருக்கும் ஒரு தீவே . யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் , மிதிக்கலாம் , கேட்க யாரும் கிடையாது . ஆனால் இன்னும் தமிழ்நாடு இந்தியாவிற்குள் தான் இருக்கிறது என பலர் சொல்வது விந்தையாய் இருக்கிறது . தன் தேசத்திற்குள் இருக்கும் ஒரு அப்பாவி மீனவனை கொன்றால் அந்த நாடு பார்த்து கொண்டு சும்மா இருக்குமா ?? ஆனால் இந்த பாரத திருநாடு இருக்கும் . இது ஒரு முன்மாதிரி தேசம் என்பதை மற்ற நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும் .

இது ஒரு சின்ன விஷயம் என்று சொல்லும் அறிஞர்களே , பல வருடங்களாக தொடரும் இலங்கை பிரச்சனை உங்கள் கண்களுக்கு தெரியாதா ?? மீனவர்கள் தினம் தங்கள் பிழைப்பை சாவிலேயே நடத்தி கொண்டு இருப்பது எவர் கண்ணுக்கும் தெரியாமல் போனது ஒரு விசித்திரம் . ஒரு பெண்ணின் சுயநலத்தால் ஒரு மாநிலமே இன்று கண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது . ஆனால் அந்த பெண்ணோ இன்னும் தமிழகம் என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டாரா ? அவருக்கு தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் தேவை . ஆனால் அந்த எம்.பி.க்களை உருவாக்கிய மக்கள் தேவை இல்லை . மேலும் இத்தாலி விஷயத்தில் நடந்த கொடுமை தமிழகத்தை சேர்ந்த மத்திய கப்பல்துறை அமைச்சரே தமிழகத்தை பற்றி வாய் திறவாதது தான் . சோனியா தமிழகத்தை சேர்ந்த மக்களை மட்டும் மறந்தாரா அல்லது தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்களை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்தாரோ தெரியாது . தமிழக ஆட்சியில் இருப்பவர்களும் மீனவர் என்று ஒரு இனம் இருப்பதை மறந்து விட்டதையே இந்த நிலை சுட்டி காட்டுகிறது .

தமிழக மீனவன் செய்த பாவம் முதலில் மீனவனாய் பிறந்தது , அதனினும் கொடிது தமிழினத்தில் பிறந்தது . வேறு எந்த நாட்டை சேர்ந்த மீனவனையும் இப்படி மாற்றாந்தாய் போக்குடன் நடத்தி பார்த்ததுண்டா ??? ஒரு மனிதனை கொன்றதற்கு ஒரு இனம் ஏற்கனவே அழித்து விட்டார்கள் . இப்போது மிஞ்சியிருப்பது தமிழன் என்று மார்தட்டி கொள்ளும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் . அவர்களையும் முற்றிலும் அழித்து விட்டால் இந்தியாவின் பெயர் உலக சரித்திரத்தில் எழுதப்படும் , பொன்னால் அல்ல , ரத்தத்தால் . அந்த பெருமையை சீக்கிரமே நிறைவேற்றும் நோக்குடன் இருக்கிறது மத்திய அரசு . தூங்கும் போது கால் ஆட்டவில்லையென்றால் பிணம் என்று நினைக்கும் இவ்வுலகிலே நடந்தால் கூட பிணம் என்று நினைப்பது இந்தியாவில் மட்டுமே நிகழும் கொடூரம் . இந்நிலை தொடருமேயானால் இவ்வுலகம் தமிழக மீனவனை அருங்காட்சியகத்தில் மட்டுமே பார்க்க நேரிடும் .

தமிழன் என்றொரு இனம் உண்டு . மானம் , வெட்கம் அதற்கு இல்லை என்று இப்பொழுதே எழுத ஆரம்பித்து விட்டார்கள் . கூடிய விரைவில் அது உலகத்திலேயே இல்லை என்று கூட எழுதுவார்கள் . அப்பொழுதும் நாம் பல்லிளித்து கொண்டே இருப்போம் .

நேற்று சிங்களவன் அடித்தான் , இன்று இத்தாலிகாரன் அடிக்கிறான் , நாளை ??? யாரும் அடிக்க மாட்டார்கள் , நாம் இதை போல் இருப்போமேயானால் நாளை நம்மை இருக்க விட மாட்டார்கள் . இருந்தால் தானே அடிப்பதற்கு ??

இன்னமும் இந்த மானம்கெட்ட நிலை தேவையா தமிழா ?? உன் மானத்தையும் , வீரத்தையும் காட்டிடும் நேரம் வெகு தூரத்தில் இல்லை . அதற்கு பிறகும் பயணமும் இல்லை .

February 21, 2012

அப்பாடக்கர்ஸ் - பாகம் 1

இன்னைக்கு தமிழகத்த கலக்கிக்கிட்டு இருக்கற சில பேர பத்தி தான் இந்த பதிவு .............

1)கேப்டன் விஜயகாந்த் : 

கேப்டன் போல வருமாஆஆஆஆஆ


இவரு தாங்க தமிழ்நாட்டோட தமிழ்நாட்டுல இப்போதைக்கு மிகபிரபலமானவரு . இவர பத்தி தமிழ்நாட்டுல தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது . இவரோட ஸ்பெசாலிட்டியே ஏர்ல பறந்து பறந்து அடிக்கிறது தானுங்க . இவரு கணக்குல புலிங்க , இவரு கணக்கு சொன்னா மிஸ்ஸே ஆகாது . அதே மாதிரி தான் இவரோட பஞ்ச் டயலாக்கும் தமிழ்நாட்டுல மட்டும் இல்லாம் பட்டிதொட்டி பூரா பேமசுங்க ........
இவரு பண்ணுற அடாவடி இருக்குங்களே .... சொல்லி மாளாது . விருதகிரின்னு ஒரு படமுங்க . அந்த படத்துல தலைவர் பண்ணுன காரியத்த பாத்தீங்கன்னா நீங்க அரண்டு போயிடுவீங்க . அப்படி என்ன தான் செஞ்சுபுட்டாருன்னு கேக்குறீங்களா ??? ஸ்விட்ஸர்லாந்து போலீசுக்கே எப்படி அக்யூஸ்ட புடிக்கனும்னு ட்யூசன் எடுக்குறாருங்க . சரி அத கூட விட்டுறலாம் . தர்மபுரின்னு ஒரு படம் , அந்த படத்துல இவர வில்லனோட ஆளுங்க துப்பாக்கியாட்டி சுடுவாங்க . ஆனா இவருக்கு ஒன்னும் ஆகாது , ஏன்னா இவரு ஒரு தாம்பாளத்த நெஞ்சுல வச்சுருப்பாருங்க (அந்த தாம்பாளத்துல பட்டு புல்லட்டே எகிறிடுச்சாம்) . ரமணாங்கிற படத்துல இவரு விண்டோஸ் மீடியா பிளேயர்ல தாங்க டாக்குமெண்ட் அடிப்பாரு . இவரு தாங்க தமிழ்நாட்டோட நிரந்தர கேப்டன் . அது ஏன்னா இவரு எல்லா படத்துலயும் போலீசா தான் நடிப்பாரு . இவரு ஈரோயினு கூட டூயட் பாட ஆரம்பிச்சாருன்னா போதும் , தியேட்டர்ல பத்து பதினஞ்சு தல உருளாம போவாது . இவரு புடிக்காத தீவரவாதிங்களே இல்லங்க . அதே மாதிரி எந்த நாட்டு அன்னியசக்தியும் தமிழ்நாட்டுக்குள்ள நுழையாம பாதுகாக்கறது இவரு தானுங்க .அட இதெல்லாம் இவரோட பழைய மேட்டர் , புது மேட்டர்ல தான் இருக்குது கிக்கே ...........

இவரு எத்தன நாள் தான் கேப்டனா நடிக்கிறது, மெய்யாளுமே கேப்டன் ஆயிடுவோம்னு அரசியல்ல குதிச்சுட்டாரு .அதுக்கு அப்புறம் நடந்தது தான் ரியல் ரணகளமே .........
இவரு அரசியல்ல குதிச்சோன இவர இவரே கருப்பு எம்.ஜி.ஆர்னு சொல்லிக்கிட்டாரு . இவரு அரசியலுக்கு வந்தோன சந்திச்ச மொத தேர்தல் 2006 சட்டமன்ற தேர்தல் . இவரு கூட நின்னவங்க எல்லாரும் அவுட்டு , ஆனா கேப்டன் எம்.எல்.ஏ ஆகி சட்டசபைக்குள்ள போனாரு  , ஆனா ஒன்னும் செய்யலங்க . இப்படியே அடி வாங்கிகிட்டு இருந்தாருங்க . கொஞ்ச நாளைக்கு இவர கைப்புள்ள கணக்கா எல்லாரும் பாத்தாங்கன்னு சொன்னா அது குறைச்சல் தானுங்க ....

அதுக்கு அப்புறமாச்சும் இவரு நடிக்கறத நிப்பாட்டுவாருன்னு பாத்தாங்க ..... ம்ஹூம் அதுக்கு அப்புறம் நான் முதல்லயே சொன்ன ஒலக மகா காவியம் விருதகிரி வந்துச்சுங்க.......

அதுக்கு அப்புறம் ஒரு அஞ்சு வருசம் எப்படியோ ஓடிபோச்சு . அதுக்கு அப்புறம் 2011 - சட்டமன்ற தேர்தல்ல அம்மா கூப்புட்டாக , அய்யா கூப்புட்டாக , அன்னை கூப்புட்டாக !!! தலைவர் கடவுளோடயும் மக்களோடயும் தான் கூட்டனின்னு ஸ்ட்ராங்கா மறுத்துட்டாரு . அதுக்கு அப்புறம் அவருக்கு பில்லி , சூனியம்லாம் வச்சு அம்மா அவிங்க கட்சிக்கு இழுத்துட்டாங்க . ஆமாங்க இவங்க ரெண்டு பேரும் கூட்டணின்னு ஒன்னு வச்சுக்கிட்டாங்க . ஆனா ரெண்டு பேரும் இது வரைக்கும் நாங்க கூட்டணில இருக்கோம்னு சொல்லிக்கிட்டதுல்ல . இவரு இந்த தேர்தல்ல பண்ண அடாவடிக்கு அலும்பே இல்லைங்க ....... தன்னோட கட்சி வேட்பாளருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ண போயி அங்க அவரு பேர மாத்தி சொல்லிபோட்டாருங்க . ஒடனே அந்த வேட்பாளர் நம்ம மம்மி , டாடி வச்ச பேர இவரு மாத்துறாரேன்னு தெரியாத்தனமா சொல்லிட்டாருங்க . ஒடனே வந்துச்சு பாருங்க கேப்டனுக்கு கோவம் , என்னியவே எதுத்து பேசுறியான்னு சொல்லிட்டு வேட்பாளரோட டாடிமம்மியே அவரு பேர மறந்து போற அளவுக்கு வச்சு நொங்கு நொங்குன்னு நொங்கிட்டாருங்க . அன்னைலேந்து அவரு போற இடம்லாம் அவரு மத்தவங்கள அடிப்பாருன்னே கூட்டம் பெருகிடுச்சு . இது பத்தாதுன்னு வேற இவரு குடிச்சுட்டு தான் பிரச்சாரம் பண்ணுறாருன்னு ஒரு செய்திய கெளப்பி விட்டுட்டாங்க . இவருக்கு போட்டியா வடிவேல எறக்கி விட்டாங்க பிரசார களத்துல . இருந்தாலும் கேப்டன பீட் பண்ண யாராட்டி முடியும் ?? இந்த மாதிரி மேட்டராட்டியே கேப்டன் புகழ் தாறுமாறா ஓட ஆரம்பிச்சுது . மக்கள் எல்லாரும் சேந்து பயங்கரமா யோசிச்சு இவர ஜெயிக்க வைச்சாங்க . பாத்தா பொசுக்குன்னு இவரு எதிர்கட்சி தலைவராயிட்டாரு . அதுக்கு அப்புறம் பத்திரிக்கைலாம் இவருக்கிட்ட ஆளும்கட்சி எப்படி ஆட்சி நடத்துதுன்னு கேட்டாங்க . இவரு பதிலே சொல்லலியே , அதுக்கு இப்படி ஒரு அப்பாடக்கர் ரீசன் சொன்னாரு , ஆறு மாசம் டைம் குடுங்க அப்புறமா சொல்லுறன்னு .

சரி இதோட கதை முடிஞ்சுடும்னு பாத்தா அங்க தான்யா வச்சாங்க ஒரு பெரிய ட்விஸ்ட .................

கொஞ்ச நாள் தென்றலா இருந்த கேப்டன் ஒரு நாள் புயலாயிட்டாரு . அட ஆமாம் இவரு பத்திரிக்கைகாரங்க கிட்ட கேட்ட 6 மாசம் அவகாசம் முடிஞ்சிடுச்சு . அய்யயோ திருப்பி கொஸ்டீன் கேப்பாங்களேன்னு சொல்லிட்டு இவரு பயங்கரமா யோசிச்சு ஒரு பிளான் போட்டாரு . அந்த பிளான் படி தான் பின்னாடி நான் எழுதிருக்குறது நடந்துச்சுன்னு உளவுத்துறை சொன்னுச்சு . அந்த அம்மா இவர பேச விடலைன்னு சொல்லிட்டு இவரு சட்டசபைல எந்திரிச்சு அந்த அம்மாவ பாத்து நாக்க துறுத்தி ஒரு பஞ்ச் வச்சாரு பாருங்க , சட்டசபை மட்டுமில்ல , இந்த உலகமே ஆடி போயிடுச்சு . அதுல டென்சனான அம்மா இவர பாத்து ஒரு கேள்விய கேட்டு போட்டாங்க , முடிஞ்சா உனக்கு திராணி(தைரியம்) இருந்தா தனியா இடைதேர்தல்ல நில்லுன்னு . சும்மாவே கேப்டன் ஆடுவாரு காலுல சலங்கைய வேற கட்டி விட்டுட்டாங்க கேக்கவா வேணும் ?? அவரு அந்த சவாலுக்கு ஒத்துகிட்டாரு . அந்த சவால்ல அவரு ஜெயிச்சாரா இல்லியான்னு பொறுத்திருந்து பார்ப்போம்டிஸ்கி 1 : இந்த பதிவுலயே எல்லா அப்பாடக்கர பத்தியும் போட்டுறலாம்னு தான் இருந்தன் , பட் ரொம்ப லென்தா போனுச்சுன்னு சொல்லிட்டு ஒவ்வொருத்தரையா போடுவோமேன்னு இருக்கன் .........

டிஸ்கி 2 : என் பதிவ இண்ட்லி , உடான்ஸ் - ரெண்டுத்தலயும் இணைச்சுருக்கன் . சோ மறக்காம ஓட்டு போடுங்க மக்காஸ் . அப்புறம் இந்த பதிவ உங்களுக்கு தெரிஞ்ச ஏரியாலலாம் போஸ்டர் ஒட்டி விட்டுறுங்க (புடிச்சுருந்தா மட்டும்)

February 20, 2012

காதலில் சொதப்புவது எப்படி......

பஸ்கி : ஏய்ய்ய்ய்ய் !!! யாருடா அது விமர்சனம்னு நெனச்சுக்கிட்டு உள்ளார வர்றது ???
அப்படி நெனச்சுகிட்டு வர்றவங்க எல்லாம் அப்படியே டூ ஸ்டெப்ஸ் பேக் போயிக்கோ , மீதி எல்லாரும் மட்டும் உள்ளார வா !!!

நம்ம இப்ப காதல்ல எப்படி எப்படி எல்லாம் சொதப்புறதுன்னு பாப்போம் அதுக்கு முன்னாடி இந்த பதிவு எழுத காரணம் ........
நம்ம பசங்க பல பேரு லவ்வு பண்ண பிகர் கிடைக்காம அல்லாடுறாங்க , அப்படியும் சில பேரு ஒரு பிகர புடிச்சுக்கிட்டு அவஸ்தபடுறாங்க . அவங்க எப்படி அந்த பிகர கழட்டி விடுறதுன்னு தான் இந்த பதிவு (ரொம்ப நல்ல எண்ணம்டா)

முதல்ல நம்ம பிரண்டுங்க :

இந்த காதலுக்கு உதவுறதே நம்ம பிரண்டுங்க தாங்க . நம்ம காதல நம்ம லவ்வர்கிட்ட நாம சொல்லுறோமோ இல்லையோ , நம்ம பிரண்டுங்க கண்டிப்பா அவிங்ககிட்ட சொல்லிடுவாங்க . அப்படி பட்டவங்கள விட்டுறுங்க , இந்த பொண்ணே கிடைக்காத பிரண்டுங்ககிட்ட போய் எனக்கு அந்த பொண்ண புடிக்கலன்னு சொல்லி பாருங்க . அப்புறம் உங்க மேட்டர் நம்ம வீரபாகு பேக்கரி மாதிரி ஒபாமா வரைக்கும் தெரிஞ்சா கூட ஆச்சரியம் இல்லைங்க (இந்த விசயத்துல மட்டும் பசங்க வில்லாதி வில்லனுங்க)

அடுத்தது நம்மள பெத்தவங்க

உங்க பெத்தவங்ககிட்ட போய் அம்மா , அப்பா நான் ஒரு பொண்ண லவ்வு பண்ணுறன்னு மட்டும் சொல்லுங்க . ஒடனே உங்க பெத்தவங்க காசு வெட்டி போட்டாச்சும் உங்க லவ்வ அத்து விட்டுறுவாங்க (இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க . உங்க பேரண்ட்ஸ் பசங்க படத்துல வர்ற மாதிரி நல்லவங்களா இருந்துட்டாங்கன்னா உங்க பாடு ஞேஞேஞேஞே தான்)

அடுத்தது பொண்ணோட அண்ணன்

உடம்ப அர்னால்டு மாதிரி ஏத்தி வச்சுருக்கவங்க , எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோம்னு சொல்லுற தாராள மனசு படைச்சவங்க , இந்த ஐடியாவ செயல்படுத்தவும் . நேரா பொண்ணோட அண்ணன்கிட்ட போய் , குறிப்பா அவரு பிரெண்ட்ஸ் கூட இருக்கறப்ப போய் நான் உன் தங்கச்சிய லவ் பண்ணுறண்டான்னு சொல்லிபாருங்க , உங்க லவ்வு கிழிஞ்சிரும் . மே பி உங்க கன்னமும் கிழியலாம் , ஏன் நீங்களே கூட கிழியலாம் .. ஆனா லவ்வு கண்பார்மா அத்துக்கும் (இதுலயும் ஒரு பிரச்சன இருக்குது , உங்க ஆளுக்கு அண்ணன் இல்லன்னா உங்க பாடு திண்டாட்டம் தான்)

அடுத்தது அந்த பொண்ணோட பிரண்டு

நம்ம பசங்க எல்லாம் கண்டிப்பா அவங்க ஆளோட பேசுறாங்களோ இல்லையோ , அந்த பொண்ணோட பிரண்ட காக்கா புடிச்சு வச்சுருப்பாங்க ரெண்டு பேத்துக்கும் நடுவுல மெசெஞ்சரா . அந்த புள்ளகிட்ட போய் உன் பிரண்ட லவ் பண்ணுறன்னு எல்லாம் சொல்ல வேணாம் , நீ அழகா இருக்கன்னு சொன்னாலே போதும் . அந்த பொண்ணு வெக்கபட்டுகிட்டே போய் அது பிரண்டு , அதாங்க உங்க லவ்வருக்கிட்ட சொல்லும் . அப்ப இருக்குது பாருங்க தீபாவளி , அந்த புள்ள உங்கள பிரியுதோ இல்லையோ , உங்கள நார் நாரா கிழிச்சுரும் . அப்புறம் அத காரணம் காட்டி நீங்க உங்க லவ்வ அத்துக்கலாம். (உங்க ஆளு கொஞ்சம் ஜாலி டைப்பா இருந்தா நான் பொறுப்பு இல்ல)

அடுத்தது அந்த பொண்ண பெத்தவங்க :

மேல உள்ளதும் சரிபட்டு வராதவங்க ஸ்ட்ரைட்டா போய் அந்த பொண்ண பெத்தவங்ககிட்டயே சொல்லிடுங்க . உங்க லவ்வு அத்துகிதோ இல்லையோ அந்த பொண்ணுக்கு அடுத்த மாசத்துல கல்யாணம் கண்டிப்பா ஆயிடும் . (உங்க பெத்தவங்க மாதிரி அவங்க அப்பா அம்மாவும் நல்லவங்களா இருந்தா ??? உனக்கு சங்கு தாண்டி)

தி லாஸ்ட் அண்டு பைனல்

இம்புட்டு செஞ்சும் ஆவலயா ?? ரைட்டு நேரா போய் அந்த பொண்ணுக்கிட்டயே போய் உன் தங்கச்சி சூப்பரா இருக்குறான்னு சொல்லுங்க . தங்கச்சி இல்லன்னா பரவால்ல , இந்த டயலாக்க மட்டும் சொல்லி பாருங்க , ஒடனே அந்த பொண்ணு உங்கள செப்பலாட்டி அடிச்சு இனிமே வாழ்க்கைல நீங்க லவ்வே பண்ண கூடாதுன்னு சாபம் வுட்டுட்டு போய்டும் . அந்த டயலாக்கு 
அந்த பொண்ணோட கால்ல விழுந்து  ”அம்மா தாயே என்னைய விட்டுடுமா”

(அப்படி சொல்லியும் அந்த பொண்ணு உங்கள தான் லவ்வு பண்ணுவன்னு ஒத்த கால்ல நின்னா கம்பெனி பொறுப்பில்ல)

(என்னாங்க மேல உள்ள டயலாக் தெரியலயா ??? அந்த லைன மட்டும் செலெக்ட் பண்ணுங்க தெரியும் . இந்த மானங்கெட்ட ஐடியாவ அப்படி தான் வைக்கோனும்)

டிஸ்கி : கடைசியா அந்த பொண்ணு உங்க லவ்வ புட்டுகிட்டு போனா மறக்காம அந்த பொண்ணோட நம்பர எனக்கு அனுப்பி வச்சுடுங்க ......

இப்படிக்கு ,
லவ்வு பண்ண பொண்ணு கிடைக்கதோர் சங்கம்