May 16, 2012

ட்விட்டப் கலகல - பாகம் 1.......

சென்னையில் மே 13ந்தேதி தமிழ்நாடு அளவிலான ட்விட்டப் நிகழ்ச்சி அடையாறில் உள்ள யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது . கலந்துகொண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் திரும்பினர் . ஏனெனில் அவ்வளவு கலகலப்பாக நடைபெற்றது . அதில் நானும் கலந்து கொண்டேன் . அங்கு எனக்கு நிகழ்ந்த அனுபவங்கள் மற்றும் நான் வாங்கிய கும்மிகள் பற்றிய பதிவே இது.....
இது ரொம்ப சீரியசா இருக்கும்னு நினைக்குறவங்க தயவுசெஞ்சு படிச்சு பாத்துட்டு என்னைய அடிக்க வேண்டாம்................

13ந்தேதி ட்விட்டப்புக்கு வீட்டில் 10ந்தேதியே அனுமதி வாங்கி 1500 பணத்தையும் வாங்கிட்டேன் . 11ந்தேதி போயிட்டு வர்றதுக்கு டிக்கெட்டும் எடுத்துட்டன் . ஆனா நமக்கு தான் ஏழரை நாட்டு சனி முதுகுல ஏறி உக்காந்துக்கிட்டு இறங்க மாட்டன்னு சொல்லுமே . வழக்கம் போல இந்த வாட்டியும் ஒரு ஆப்பு ரெடியாவே இருந்துச்சு . அது என்னான்னா எனக்கு 12ந்தேதி ஒரு பரீட்சை . அத முடிச்சுட்டு தான் சென்னைக்கு கிளம்ப வேண்டிய சூழ்நிலை . நான் ஏற்கனவே ரொம்ப அழகா படிப்பன் . இதுல சென்னைக்கு வேற கிளம்பனும் . கேக்கவா வேணும் நான் எப்படி படிச்சுருப்பன்னு ? அந்த அல்லக்கை எக்சாமுக்கு படிச்சு எப்படியோ ஏனோதானோன்னு எழுதி முடிச்சுட்டு மத்தியானம் 1.45 பஸ்சுக்கு வீட்டுலேந்து 1.30க்கு கிளம்பி கரெக்டா 1.40க்கு பஸ்சுல ஏறிட்டன் . அங்க ஆரம்பிச்சது தான் நம்ம கவுஜ கருப்புக்கு தொல்லை . சென்னைக்கு போய் இறங்கற வரைக்கும் போன் பண்ணி அறுத்துட்டன் (கொசுறு : அண்ணனோட ரூம்ல தான் நான் தங்குறதா ஏற்பாடு) . ஒரு வழியா சென்னை போய் இறங்குனா , அடையாருக்கு வராத , எழும்பூர்க்கு வான்னு கருப்புக்கிட்ட இருந்து போன் . சரி பாசக்கார பயபுள்ளையாச்சேன்னு நானும் எழும்பூர் போய் இறங்குனன் . எழும்பூர்ல பயபுள்ள ரிசீவ் பண்ண வரும்னு பாத்தா வரவே இல்ல . ஒரு 10 நிமிசம் வெட்டியா நின்னுக்கிட்டு இருந்தன் . கருப்பு வந்தோன கருப்பு ரூம்க்கு சாப்புட்டுட்டு கிளம்புனோம் (ஹோட்டல்ல என் சாப்பாட்டுக்கு ஸ்பான்சர் கருப்பு தான் . ) . அப்புறமா கருப்பு ரூமுக்கு போய் தூங்கலாம்னு பாத்தா அங்க தான் ஆரம்பிச்சது கெரகமே . கருப்பு ரூமுக்கு போனதே 11 மணிக்கு தான் . இதுல 12 மணி வரைக்கும் கருப்பு கவுஜ போட்டுட்டு தான் தூங்குவன்னு அடம் புடிச்சுட்டு 12.30 மணி வரைக்கும் கவுஜயை போட்டு அதுக்கு அப்புறமா தான் தூங்க ஆரம்பிச்சோம் . அடுத்த நாள் காலைல எந்திரிச்சா மணி 6.30 தான் ஆகுது . இவ்வளவு சீக்கிரமா எந்திரிக்க கூடாதேன்னு சொல்லிட்டு திருப்பி தூங்க ஆரம்பிச்சா கடைசியில் போன் வந்து தூக்கத்த ரேப் பண்ணிடுச்சு (அதான் கெடுத்துடுச்சு) . அதுக்கு அப்புறம் நானும் கருப்பும் சேந்து டிஃபன்ஸ் காலணி கிரவுண்டுக்கு போய் அங்க கிரிக்கெட் ஆடிக்கிட்டு இருந்த பிரபலங்களோட மிங்கிள் ஆகி ஆட ஆரம்பிச்சோம் . எனக்கு பந்து கூட பொறுக்கி போட தெரியாதுன்னு நான் சொன்னத பொறுட்படுத்தாம வேதாளம் என்னைய பீல்டிங்க்குக்கு எல்லாம் நிப்பாட்டுனாரு . நான் சும்மா உருண்டு ஓடிக்கிட்டு இருந்த பந்த பறந்து பறந்து சேஸ் பண்ணி அதுல ரெண்டு ரன் அவுட் ஆனதுலாம் காலத்தின் கொடுமைகள் . அப்புறம் கிரிக்கெட் ஆடி முடிச்சுட்டு கார்க்கியின் தயவால அவரோட ஏசி கார்ல வந்து திருப்பி அடையார்ல இறங்குனோம் . அங்க போய் கருப்பு ரூம்ல குளிச்சுட்டு(டாய் டாய் டாய்) திருப்பி ஊர் சுத்த ரெடியானோம் . குளிச்சுட்டு வெட்டியா இருந்த நேரத்துல கருப்போட புக்க எல்லாம் எடுத்து பாக்க ஆரம்பிச்சன் . நான் படிக்கிறதுக்கு எடுத்து பாக்கல , எந்த புக்குலேந்து கருப்பு ஞானப்பால் குடிச்சார்னு பாக்கறதுக்கு தான் . அப்ப அங்க என்னோட மண்டைக்குள்ள ஷாக் அடிக்க வச்ச புத்தகம் உலக புகழ்பெற்றன்னு அவர அவரே சொல்லிக்குற மானங்கெட்ட சாரு எழுதுன “ஜீரோ டிகிரி” . (அத ஊருக்கு எடுத்துட்டு வந்து நான் டரியலானது தனி டிராக்) . திருப்பியும் ஊர் சுத்திட்டு கருப்பு ரூமுக்கு ரிட்டன் அடிக்கிறப்ப அங்க நம்ம பிரசன்னா , RJ கோபால் , ஜோசப் செல்வா , சீனு , சைல்டுசின்னா எல்லாம் வந்துருந்தாங்க . சரி பாசகார பயலுக ஆச்சேன்னு போய் பேசுனா எல்லாரும் சேந்து என்னைய கும்ம ஆரம்பிச்சுட்டாங்க . எதுக்குடா அடிக்கிறீங்கன்னு கேட்டா , அதெல்லாம் தெரியாது உன்னைய அடிப்போம்னு திருப்பி அடிக்க ஆரம்பிச்சாங்க . உனக்க் வலிக்கவே இல்லையாடான்னு நீங்க கேக்குறது புரியுது , எவ்வளவோ இடத்துல அடிவாங்கிட்டோம் , நம்ம நண்பங்க தானேன்னு சொல்லிட்டு அடிச்சுட்டு போங்கடான்னு சொல்லிட்டன் (கடைசியில இவ்வளவு அடி அடிச்சுட்டு ஒரு வார்த்த கூடாம போயிட்டாங்க பக்கிங்க.)

டிஸ்கி : இந்த பதிவு ஏற்கனவே ரொம்ப லெந்தா போறதால நான் வாங்குன மொரட்டு அடிய எல்லாம் அடுத்த பதிவுல போடுறன் . அடுத்த பதிவுல தான் ட்விட்டப்ல நடந்த மேட்டர் எல்லாம்.......

கடைசியா இது தான் நான்........


May 15, 2012

பெண்கள் ட்விட்டப்பில் நடந்த சதி வேலைகள்.....

பஸ்கி
இந்த பதிவு கற்பனை என்று தெரிவித்துக்கொள்கிறேன் (அப்படி சொல்லலைனா என்னிய போட்டு கும்மிடுவாங்க)

ட்விட்டப் ஒரு அறிமுகம் :

ட்விட்டப் என்பது ட்விட்டரில் முகம் தெரியாமல் பழகும் நண்பர்கள் ஒரு பொதுவான இடத்தில் கூடுவது . ஆண்கள் ட்விட்டப் போடுவது எப்பொழுதும் வழ்க்கமான ஒன்று . பெண்கள் ட்விட்டப் எப்பொழுதாவது நடக்கும் ஒரு விபரீதம் . சென்னையில் இன்று நடந்த ட்விட்டப் , வெளிவராத உண்மைகள்

கேரக்டர்ஸ் அறிமுகம் :

அதெல்லாம் வேண்டாங்க , அப்புறம் என்னிய கொத்து பரோட்டா போட்டுருவாங்க (ரியலி பேட் கேர்ள்ஸ்) . ஒரு ரகசியம் , ட்விட்டப்ல கலந்துக்குற எல்லா பொண்ணுங்களுமே 50+ தான் , ஆனா எங்களுக்கு இன்னும் 20 கூட ஆவலன்னு பீலா விடுவாங்க . (மொத்தம் 5 பேரு)

சம்பவம் :

காலை 10 மணி :
ட்விட்டப்புக்கு ஏற்பாடு செய்தவர் மட்டும் பீச்சில் தனியாக நிற்கிறார்.(இவருக்கு 58) மைண்ட் வாய்சில் (என்ன இந்த பொண்ணுங்க யாரையும் காணும் ?? 9.30 மணிக்கே வரன்னு சொன்னாங்க ?? இவங்க வருவாங்கன்னு நான் வேற காலைல 12 இட்லி தான் சாப்புட்டன் , கையில் வெறும்(ஞேஞேஞே) 500ரூ தான் இருக்கு).

அப்போது தூரத்தில் ஒரு பெண்(52) வருகிறார் . இருவரும் இதற்கு முன் பார்த்ததில்லை . ஆனால் கோட் வேர்ட்ஸ் போன்ல சொல்லிருந்தாங்க (ஆமாம் இவிங்க பெரிய அமெரிக்க உளவாளி , கோட் வேர்டு யூஸ் பண்ணுறாங்க) . அவர் பொத்தாம்பொதுவாக வந்து பாபா பிளாக் ஷீப் என்று சொல்கிறார் . உடனே புரிந்து கொண்ட முதல் பெண் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்று சொல்கிறார் (கோட் வேர்ட்ஸ்ச பாரு , வூட்டுல பேரப்புள்ளைங்களுக்கு சொல்லி குடுத்து பழக்கம் போல) . பின் ஒவ்வொரு பெண்ணாக வருகிறார்கள் (எல்லாருமே ஒரு இத்து போன ரைம்ஸ தான் சொல்லுறாங்க . அத வேற சொல்லனுமாக்கும்).

காலை 10.30 மணி :
எல்லா பெண்களும் அங்குள்ள படகு நோக்கி நடக்கின்றனர் . படகு அருகில் அனைவரும் அமர்ந்து விட்டு தங்கள் வெட்டிக்கதைகளை ஆரம்பிக்கிறார்கள் .

பெண் 1 : (அனைவரையும் நோக்கி) எல்லாரும் காசு எடுத்துட்டு வந்தீங்களாடி ?? முதல்ல போய் சாப்புடுவோம்

அனைவரும் : (கோரசாக) ஆமாம்கா முதல்ல போய் சாப்புடுவோம் (அப்ப எல்லாம் பேசறதுக்கு வரல , சாப்புட தான் வந்துருக்கீங்க)

காலை 10.30 - 11.30 : எல்லோரும் தள்ளுவண்டியில் சாப்பிட்டு சாரி கடையை முடித்து விட்டு திருப்பி பழைய இடத்தில் கூடுகிறார்கள் .
(இனிமே யார் யார் பேசுனாங்கன்னு எல்லாம் டேக் போட முடியாது , பிகாஸ் நெம்ப கஷ்டம்) .

அக்கா , நீங்க உங்க சின்ன வயசு போட்டோ அப்லோடு பண்ணோன நானும் நீங்க சின்ன பொண்ணோன்னு நினைச்சுட்டன் . இங்க வந்து பாத்தா 60 வயசுன்னு சொல்லுறீங்க ??

நான் எப்படி அது என்னோட போட்டோன்னு சொன்னன் ? அது என்னோட பேத்தி போட்டோ . நம்ம போட்டோலாம் போட்டா ஒரு கழுதையாவது பாலோ பண்ணுமா ??(ஒலக உண்மைடா சாமி)

ஆமாம் அதுவும் சரி தான் . நானும் என்னோட பொண்ணு போட்டோ தான் அப்லோடு பண்ணிருக்கன் .(உன் பொண்ணுக்கு இது தெரியுமா)

அட நீங்கள்லாம் இப்படின்னா நான் பக்கத்து வீட்டுல காலேஜ் போற பொண்ணோட போட்டோல அப்லோடு பண்ணிருக்கன் ?(அடங்கொன்னியா)

அட ஆமாம்கா நாமலாம் நம்ம போட்டோ அப்லோடு பண்ணலன்னு இந்த பசங்களுக்குலாம் தெரியாது . அது தெரியாமயே கடல போட்டுக்கிட்டு இருக்கானுங்க . (பசங்க என்னைக்குமே நல்லவங்க தான்)

அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்டி இந்த பசங்க தொல்லை தாங்கல . எப்ப பாரு கிண்டல் பண்ணிகிட்டே இருக்காங்க . யாருக்கிட்டடி டெயில்கேர்ள்(இங்கிலிபீசுல சொல்றாங்களாம்) ஐடி இருக்குது

என்கிட்ட தான் இருக்குதுக்கா(ஆமாம் தாஜ்மகால எழுதி வச்சுருக்காங்க)

நீ மட்டும் வச்சுக்கிட்டு என்ன பண்ணுவ ?? தினம் எல்லாருக்கும் அனுப்பி விடு . அப்ப தான் பசங்க மத்தியில ஒரு பயம் வரும். (ரொம்ப நல்ல எண்ணம்)

அக்கா அது எப்படிக்கா சொல்லுறீங்க
ந்து பண்ணுனா பசங்க பயப்புடுவாங்கன்னு ??(அப்படியே தெரியாத மாதிரியே கேக்குறது)

உனக்கு விஷயமே தெரியாதாடி ??அந்த ஐடிலேந்து தான் நாங்க பசங்கள கண்டமேனிக்கு திட்டுவோம் . அதுல பயந்துகிட்டு
, அந்த ஐடிலேடு பல பசங்க எந்த பொண்ணுக்கிட்டயும் பேச மாட்டாங்க . (நாங்க பயந்தோம் ??)

ஓ , அப்படியாக்கா விசயம் ?? இது தெரியாம போச்சே இத்தன நாளா .... எனக்கும் அனுப்பி விடுங்க . நானும் கொஞ்ச நாள் திட்டுறன் , புருசனையே எத்தன நாள் தான் திட்டுறது ??(நைஸ்ல)

ஆமாண்டி நீ சொல்லுறதும் சரி தான் ஒரு ஆளையே எத்தன நாள் தான் திட்டுறது ? (அப்ப நீங்கள்லாம் புருசன அடிக்க மாட்டீங்க)

சரி அடுத்த டாபிக்குக்கு போவோம்டி , நீ கட்டிருக்குற சேலை சூப்பரு . எங்க வாங்குன ??

என்னைய போய் நீ இப்படி தப்பா நெனச்சுட்டியே ?? பக்கத்து வீட்டு கொடில இருந்துச்சு , சுட்டுட்டன்

என்னைய மாதிரியே நீயும் மானங்கெட்டவளா இருக்கடி

ஆமாம் உன் புள்ளைக்கு கல்யாணம் பேசுறன்னு சொன்னியே என்னாச்சு ??

அது சும்மா சொன்னன்கா , எனக்கு ஒரு பேர புள்ளையே இருக்கு .

இவிங்க விட்டா வளவளா கொழகொழான்னு பேசிக்கிட்டே இருப்பாங்க .நம்ம அடுத்த பதிவுல மீட் பண்ணுவோம்

டிஸ்கி
நீங்க கேக்குறது புரியுது , ட்விட்டப்ல என்ன சதிவேலை நடந்துச்சுன்னு , அப்படி ஏதாச்சும் நடக்கும்னு தான் போனன் . ஆனா இவிங்க இப்படி பேச ஆரம்பிச்சோன துண்ட காணும் , துணிய காணும்னு ஓடி வந்துட்டன் .

May 8, 2012

ஏட்டு சுரைக்காய்.....

”ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது” . காலம் காலமாக தமிழர் இடையே புழக்கத்தில் இருக்கும் பழமொழி இது . பல முறைகள் இது நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது . இப்பொழுது புதிதாக இதை நிரூபிக்க வந்தவர் தான் அந்த பிரபலம் .

அந்த பிரபலம் படித்திருப்பதோ மன உளவியல்(சைக்காலஜி) . ஆனால் அந்த படிப்புக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போலவே பொதுவெளியில் நடந்து கொண்டிருக்கிறார் . மனஉளவியலில் கண்டிப்பாக எப்படி பொறுமையாக நடப்பது என்று சொல்லி கொடுத்திருப்பார்கள் . ஆனால் இவரை பார்த்தால் மனப்பாடம் செய்து தான் தேர்ச்சி பெற்றிருப்பார் போல தோன்றுகிறது . மேலும் தன்னை யாராவது எதிர்த்தால் அவரை தவறு என்று நிரூபிக்கும் வரையில் ஓய மாட்டார் . அவர் செய்தது சரியாகவே இருக்கும் பட்சத்தில் அவரின் மேல் பொய்யாகவாவது ஒரு குற்றசாட்டை பதியாமல் ஓயாது அவர்தம் கோபம் . இவ்வாறு அவர் செய்யும் போது தான் அவர் படித்தாரா அல்லது அங்கு சிகிச்சை பெற்றாரா என்ற எண்ணம் மேலோங்குகிறது . இவ்வளவுக்கு அவர் தன்னிடம் வம்பிழுத்த ஒருவரை மட்டும் குற்றம் சாட்டாமல் ஒட்டுமொத்த ஆண்கள் இனத்தையே குற்றம் சாட்டுகிறார் . பதிலுக்கு நாங்கள் இவர் செய்யும் குற்றத்துக்கு ஒட்டுமொத்த பெண்கள் இனத்தையும் குற்றம் கூறினால் யாரேனும் வாயை மூடிக்கொண்டு இருப்பார்களா ? ஆண்கள் இனத்தை குறை கூறுவது மட்டுமில்லாமல் தன்னை பற்றி கருத்து கூறுபவர் தன்னை இழிவுபடுத்தி விட்டதாக தனக்கு தானே கற்பனை செய்துகொண்டு அவர் சிறுவயதில் ஏதோ ஒரு சம்பவத்தால் பாதிக்கபட்டுள்ளார் என்றும் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறதோ ? இதெல்லாம் போதாது என்று ஒரு பத்திரிக்கையில் பெண்கள் தினத்திற்கு பேட்டி காணும் போது சமூக வலைத்தளங்களில் பெண்களை கிண்டல் செய்வது தான் ஆண்களின் பணியாக இருக்கிறது என்று வேறு கருத்து கூறியிருக்கிறார் . அவரிடம் இவ்விடத்தில் கேட்க விரும்புவது ஒரு கேள்வியே . “தாங்கள் மட்டும் தான் இணையத்தில் உலவும் ஒரே பெண் என்று முடிவு எடுத்து விட்டீர்களோ ?

சமூகவலை ஊடகம் என்பது தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பகிர்வதறகாகவும் , புது நண்பர்களை உருவாக்கவும் தான் கண்டறியப்பட்டது . அங்கு ஒவ்வொருவருக்கும்ம் தங்களது கருத்துகளை பதிய உரிமை இருக்கிறது . அவரை பற்றி கருத்து வரும் போது ஆட்சேபித்தால் பரவாயில்லை . பொத்தாம் பொதுவாக யாரை பற்றி கருத்து சொன்னாலும் அதை கண்டிப்பது எவ்வகையில் நியாயமோ ? மேலும் அவர் தன்னை கிண்டல் செய்பவரை தான் மட்டுமே கண்டிப்பதில்லை . ஒரு 5 வயது சிறுமி போல் எதற்கெடுத்தாலும் தன் அம்மா முந்தானையை பிடித்து கொண்டு அலைகிறார் . இதற்கு அவர் அம்மாவும் ஒத்துகொண்டு தட்டிகேட்பது இந்நூற்றாண்டின் மிகபெரிய வினோதம் . மேலும் தன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்து இவர் சாபம் வேறு விடுகிறார் . இந்த நகைச்சுவைக்கு எல்லாம் உச்சகட்டமாக நடந்த கூத்து தான் சைபர்கிரைமில் புகார் அளித்தது . இவருக்கு ஆதரவு தெரிவிக்கவென்றே சிலர் ஒரு ட்விட்டர் கணக்கு வைத்து கொண்டு அலைகின்றனர் . இதனால் நமக்கு புரிவது ஒன்றே ஒன்று தான் . அந்த பிரபலம் இணையம் தனக்கு மட்டுமே சொந்தம் , தனக்கு மட்டுமே உபயோகபடுத்த தெரியும் என்ற மனநோயில் இருக்கிறார். அவர் மனநோயில் இருந்து விடுபட நாம் பிரார்த்திப்போமாக......

பின்குறிப்பு : 

நான் இங்கு யார் பெயரையும் குறிப்பிடவில்லை . எனவே இதை சைபர்கிரைமுக்கு கொண்டு சென்றால் செல்லாது.

May 7, 2012

சைபர்கிரைம் பாயுதே......

முன்னுரை :

சில நாட்களுக்கு முன் வரை ட்விட்டர் சில பல ட்விட்லாங்கர்களால் களேபரமானதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கவியலாது . இன்று மறுபடியும் ஒரு பூகம்பம் கிளம்பும் என்பதில் சந்தேகம் இல்லை . அதற்கு காரணம் இதோ இந்த வலைபதிவு தான் http://mantra8787.blogspot.in/2012/05/of-legends-miss.html

குற்றப்பிண்ணனி :

ட்விட்டரில் ப்ளாக் செய்யப்படுவது என்ற செயலுக்கு அர்த்தத்தை புகட்டியவர் . தமிழ் பெருமகன்களை ட்ரோல் என்று அன்புடன் அழைத்தவர் . சைபர்கிரைம் என்ற வார்த்தையை எங்களை போன்ற சாமானியர்களுக்கு அறிமுகபடுத்தியவர் என்று பல முகங்கள் உண்டு இந்த பிரபலத்துக்கு . இந்த பிரபலம் யாரிடம் வேண்டுமானாலும் சண்டை போடுவார் ஆனால் இவருடன் யாரும் சண்டை போட கூடாது என்பது எழுதப்படாத விதி . மீறி சண்டை போட்டால் மேலே குறிப்பிட்ட மூன்று அஸ்திரங்களும் சம்பந்தபட்டவரின் மீது பாயும் . மேலும் இதற்கெல்லாம் அடங்காதவர்கள் அவர்தம் தாயாரால் திட்டி மந்திரிக்க படுவார் . இதற்கும் கட்டுகடங்காதவரை அந்த பிரபலம் சாபம் விட்டே கொல்வார் . இதற்கு எல்லாம் கட்டுபடாத நமது ட்விட்டர் பெருமக்கள் வம்பிழுத்த வண்ணமே உள்ளனர் . அதில் புதிதாக ஒருவர் இணைந்துள்ளார் . அவர் தான் மேலே நான் குறிப்பிட்ட வலைப்பூவை எழுதிய திரு.மந்திரா . இந்த வலைப்பூவை எழுதி அந்த பிரபலத்தை மேலும் அவர் பிரபலபடுத்தியுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது . மேலும் இவ்வழக்கில் இவரை தாண்டியும் முக்கிய குற்றவாளியாக கருதபடுபவர் திரு.ராஜன்லீக்ஸ் அவர்கள் . அவரை மந்திரா மிகவும் மரியாதையுடன் ராஜகசிவு என்று
விழித்துள்ளார் . திரு.மன்னர்கசிவு செய்ததாக கருதப்படும் குற்றம் யாதெனில் , “அவர் பிரபலத்திடம் மேற்குறிப்பிட்டவாறு விதியை மீறி சண்டை போட்டுவிட்டாராம்,” மேலும் இவரது துதிபாடிகள் இவரை விட மிகவும் அதிகமாக குதிப்பதால் ட்விட்டரில் நிலநடுக்கம் 8.9 ரிக்டர் என்ற கணக்கில் பதிவானது . இப்பொழுது நண்பர் மந்திரா வேறு ஆதாரங்களுடன் அவரை குற்றம் சாட்டியுள்ளதால் இன்று நிலநடுக்கம் 10 ரிக்டரை தாண்டியும் பதிவாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது . மேலும் இன்றும் பல சைபர்கிரைம்கள் பாயும் , ட்விட்லாங்கர்கள் கதறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . சென்ற தடவை பிரபலம் தன்னை எதிர்த்தவர்களுக்கு எதிராக காசு வெட்டி போட்டதாக நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன . இந்த தடவை  இன்னும் பன்மடங்கு மேலே போய் மாந்திரீகம் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சென்ற முறை சில பிரபலங்களும் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர் . இம்முறை ஆதரவு கரங்கள் பெருக பெருக எங்களது மகிழ்ச்சி எல்லை கடந்து போகும் என்பது நிதர்சனம் . பழைய ட்விட்லாங்கரில் 15 பேரின் மீது சைபர்கிரைமில் வழக்கு பதிவு செய்ததாக கூறி கடைசியில் ஒருவரது பெயரை மட்டும் கூறி ஏமாற்றி விட்டார்கள் . அந்த தவறு இம்முறையும் நடக்காது என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் . அதேபோல் இந்த முறை தண்டனைகள் என்னென்ன என்று கூறும் பட்சத்தில் நாங்கள் எங்களை தயார் செய்து கொள்வோம் . எங்களை தயவு செய்து கைவிட்டு விடாதீர்கள் . எங்கள் ஆசைகளை நிராசையாக்கி விடாதீர்கள் என்று தாழ்மையுடன் அல்ல மிடுக்குடனே கேட்டுகொள்கிறேன் .

முடிவுரை :

இந்த வலைபூவிற்கு சைபர்கிரைம் பாயுதே என்று பெயர் வைத்ததற்கு காரணம் . இம்முறையாவது நான் மாட்ட மாட்டேனா என்ற அவாவில் தான் . அப்படியே நான் இம்முறை மாட்டினால் ட்விட்டரில் நான் “நானும் ரவுடி தான் , நானும் ரவுடி தான்” என்று பெருமையடித்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று தான்.

இப்படிக்கு ,
இதுவரை பாதிக்கபடாத ஒரு ட்ரோல்

டிஸ்கி :

இப்பதிவில் நான் பிரபலத்தின் பெயரை எங்கும் குறிப்பிட்டு என் வலைப்பூவை மானபங்கபடுத்தவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன் .

நீங்கள் இப்பதிவை படிக்கும் போது அந்த பிரபலத்தின் செயலோடு உங்கள் செயல்களும் ஒத்துபோனால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல . மேலும் அது தன்னிச்சையானது என்றும் விழைகிறேன் .

இப்பதிவை படிக்கும் போது தங்களது மனக்கழுதை பிரபலம் என்ற இடத்தில் அவரது பெயரை போட்டு படித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல .