May 7, 2012

சைபர்கிரைம் பாயுதே......

முன்னுரை :

சில நாட்களுக்கு முன் வரை ட்விட்டர் சில பல ட்விட்லாங்கர்களால் களேபரமானதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கவியலாது . இன்று மறுபடியும் ஒரு பூகம்பம் கிளம்பும் என்பதில் சந்தேகம் இல்லை . அதற்கு காரணம் இதோ இந்த வலைபதிவு தான் http://mantra8787.blogspot.in/2012/05/of-legends-miss.html

குற்றப்பிண்ணனி :

ட்விட்டரில் ப்ளாக் செய்யப்படுவது என்ற செயலுக்கு அர்த்தத்தை புகட்டியவர் . தமிழ் பெருமகன்களை ட்ரோல் என்று அன்புடன் அழைத்தவர் . சைபர்கிரைம் என்ற வார்த்தையை எங்களை போன்ற சாமானியர்களுக்கு அறிமுகபடுத்தியவர் என்று பல முகங்கள் உண்டு இந்த பிரபலத்துக்கு . இந்த பிரபலம் யாரிடம் வேண்டுமானாலும் சண்டை போடுவார் ஆனால் இவருடன் யாரும் சண்டை போட கூடாது என்பது எழுதப்படாத விதி . மீறி சண்டை போட்டால் மேலே குறிப்பிட்ட மூன்று அஸ்திரங்களும் சம்பந்தபட்டவரின் மீது பாயும் . மேலும் இதற்கெல்லாம் அடங்காதவர்கள் அவர்தம் தாயாரால் திட்டி மந்திரிக்க படுவார் . இதற்கும் கட்டுகடங்காதவரை அந்த பிரபலம் சாபம் விட்டே கொல்வார் . இதற்கு எல்லாம் கட்டுபடாத நமது ட்விட்டர் பெருமக்கள் வம்பிழுத்த வண்ணமே உள்ளனர் . அதில் புதிதாக ஒருவர் இணைந்துள்ளார் . அவர் தான் மேலே நான் குறிப்பிட்ட வலைப்பூவை எழுதிய திரு.மந்திரா . இந்த வலைப்பூவை எழுதி அந்த பிரபலத்தை மேலும் அவர் பிரபலபடுத்தியுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது . மேலும் இவ்வழக்கில் இவரை தாண்டியும் முக்கிய குற்றவாளியாக கருதபடுபவர் திரு.ராஜன்லீக்ஸ் அவர்கள் . அவரை மந்திரா மிகவும் மரியாதையுடன் ராஜகசிவு என்று
விழித்துள்ளார் . திரு.மன்னர்கசிவு செய்ததாக கருதப்படும் குற்றம் யாதெனில் , “அவர் பிரபலத்திடம் மேற்குறிப்பிட்டவாறு விதியை மீறி சண்டை போட்டுவிட்டாராம்,” மேலும் இவரது துதிபாடிகள் இவரை விட மிகவும் அதிகமாக குதிப்பதால் ட்விட்டரில் நிலநடுக்கம் 8.9 ரிக்டர் என்ற கணக்கில் பதிவானது . இப்பொழுது நண்பர் மந்திரா வேறு ஆதாரங்களுடன் அவரை குற்றம் சாட்டியுள்ளதால் இன்று நிலநடுக்கம் 10 ரிக்டரை தாண்டியும் பதிவாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது . மேலும் இன்றும் பல சைபர்கிரைம்கள் பாயும் , ட்விட்லாங்கர்கள் கதறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . சென்ற தடவை பிரபலம் தன்னை எதிர்த்தவர்களுக்கு எதிராக காசு வெட்டி போட்டதாக நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன . இந்த தடவை  இன்னும் பன்மடங்கு மேலே போய் மாந்திரீகம் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சென்ற முறை சில பிரபலங்களும் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர் . இம்முறை ஆதரவு கரங்கள் பெருக பெருக எங்களது மகிழ்ச்சி எல்லை கடந்து போகும் என்பது நிதர்சனம் . பழைய ட்விட்லாங்கரில் 15 பேரின் மீது சைபர்கிரைமில் வழக்கு பதிவு செய்ததாக கூறி கடைசியில் ஒருவரது பெயரை மட்டும் கூறி ஏமாற்றி விட்டார்கள் . அந்த தவறு இம்முறையும் நடக்காது என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் . அதேபோல் இந்த முறை தண்டனைகள் என்னென்ன என்று கூறும் பட்சத்தில் நாங்கள் எங்களை தயார் செய்து கொள்வோம் . எங்களை தயவு செய்து கைவிட்டு விடாதீர்கள் . எங்கள் ஆசைகளை நிராசையாக்கி விடாதீர்கள் என்று தாழ்மையுடன் அல்ல மிடுக்குடனே கேட்டுகொள்கிறேன் .

முடிவுரை :

இந்த வலைபூவிற்கு சைபர்கிரைம் பாயுதே என்று பெயர் வைத்ததற்கு காரணம் . இம்முறையாவது நான் மாட்ட மாட்டேனா என்ற அவாவில் தான் . அப்படியே நான் இம்முறை மாட்டினால் ட்விட்டரில் நான் “நானும் ரவுடி தான் , நானும் ரவுடி தான்” என்று பெருமையடித்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று தான்.

இப்படிக்கு ,
இதுவரை பாதிக்கபடாத ஒரு ட்ரோல்

டிஸ்கி :

இப்பதிவில் நான் பிரபலத்தின் பெயரை எங்கும் குறிப்பிட்டு என் வலைப்பூவை மானபங்கபடுத்தவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன் .

நீங்கள் இப்பதிவை படிக்கும் போது அந்த பிரபலத்தின் செயலோடு உங்கள் செயல்களும் ஒத்துபோனால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல . மேலும் அது தன்னிச்சையானது என்றும் விழைகிறேன் .

இப்பதிவை படிக்கும் போது தங்களது மனக்கழுதை பிரபலம் என்ற இடத்தில் அவரது பெயரை போட்டு படித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல .

7 comments:

 1. ஹக்கக்க போ

  ReplyDelete
  Replies
  1. உன் தமிழ்ல கொள்ளிகட்டைய தான் வைக்கோனும்....
   இருந்தாலும் முதல் கமெண்ட்....
   நன்றி

   Delete
 2. @prasanna2903 நல்ல பதிவு. சீக்கிரம் உள்ள போக என் வாழ்த்துக்கள் குட்டி நல்லா வருவடா. :-))

  ReplyDelete
  Replies
  1. நான் உள்ள போனா பஸ்ட் உன்னிய தான் துணைக்கு அழைச்சுக்கிட்டு போவன் மாமா :)

   Delete
 3. அப்படியே டி.ஆர் பேட்டிய சீரியஸா பாத்த மாதிரி இருக்கு

  ReplyDelete