January 18, 2012

விமர்சனம் by அணில் ரசிகர்கள்

நான் அணில் ரசிகன் இல்லை என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன் !!!

நண்பன் - விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் படம் !!!

நண்பன் படம் - விஜய் நடித்து வெளிவந்திருக்கும் உலகதரத்திலான(கொஞ்சம் ஓவரா தான் இருக்கோ) படம் . ஷங்கர் அவர்களுடன் விஜய் இணைந்திருக்கும் முதல் படம் . இந்த படத்தில் தளபதி தன் இமேஜை(அப்படி ஒன்னு இருக்கோ) பற்றி கவலைப்படாமல் பல பேரிடம் அடி வாங்கி மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார் .

மற்ற படங்களை போல் அல்லாமல் இந்த படத்தில் தளபதிக்கு இன்ட்ரோ சாங்க் வைக்காத ஷங்கரை கடுமையாக கண்டிக்கிறேன் (அப்படி வச்சிருந்தா தான் படம் தியேட்டர விட்டு ஓடிருக்குமே) . தளபதி இந்த படத்தில் அசரடிக்கிறார் (யார ??? படம் பாக்க வர்றவங்கள தான) . 3 இடியட்ஸ் படத்தின் சாயலே இல்லாமல் படத்தை எடுத்து இருக்கிறார்கள்(வேணாம்டா) . இந்தியில் அமீர்கான் நடித்ததை விட மிக சிறப்பாக தளபதி நடித்துள்ளார் . இந்த படத்தில் நடித்து தன்னை ஒரு உலக நடிகர் என்று நிரூபித்துள்ளார்(நடிப்பா ?? அப்படின்னா ) . படத்தில் குறைகள் என்று பார்த்தால் இரண்டாம் பாதியில் விஜய்யை நிறைய இடங்களில் காட்டவே இல்லை(காட்டிட்டா மட்டும்) !!! அப்படி காட்டியிருந்தால் படம் பிய்த்து கொண்டு ஓடியிருக்கும் (தியேட்டர விட்டு தான) . படத்தில் வரும் பல பேர் விஜயை அடிக்கிறார்கள் , இப்பொழுது சொல்லுங்கள் , வேறு யாராவது நடிகர்கள் இப்படி அடி வாங்குவார்களா ???(இத மங்காத்தாலயே தல பண்ணியாச்சு !!!)

விஜய் படம் என்றாலே எப்பொழுதும் படம் ஓடும் , இந்த படத்தில் ஷங்கர் அவர்கள் சேர்ந்து தன்னை பெருமைபடுத்தி கொண்டிருக்கிறார்(ம்க்கும்) . தளபதி பார்மில் இல்லை என்று சொன்னவர்களுக்கு இந்த படம் ஒரு சாட்டையடி(படம் பாத்தவைங்களுக்கு தான) !!

எப்படி ரஜினிக்கு தளபதியோ அது போல் இளைய தளபதிக்கு நண்பன் . (இந்த டகால்டி வேல தான வேணாங்கறது) . விஜய் தன்னை நிஜமாகவே மருத்துவர் என்று பிரசவம் பார்க்கும் காட்சியில் நிரூபித்துள்ளார்(ஆமாம் , படத்துல அவரு இஞ்சினியருக்கு தான படிக்கிறாரு??) . அவருடன் நடித்து ஜீவா , ஸ்ரீகாந்த் பெருமை சேர்த்துகொண்டுள்ளார்கள் (அய்யயயய) .

விஜய் ஒரு சகலகலாவல்லவருன்னு இந்த படத்துல நிரூபிச்சுருக்காரு !! விஜய் இதுல ஒரு புத்திசாலி மாணவரா(ஞேஞே) தன்ன வெளிக்காட்டியிருக்காரு !!! அதுவும் அவரு சத்யராஜ்கிட்ட ஏன் விண்வெளில பென்சில் யூஸ் பண்ண கூடாதுன்னு கேக்குற இடம் நச்ச்ச் !!! இந்த இடத்துல விஜயோட சொந்த திறமை நல்லாவே வெளிபட்டுருக்கு(ஆமாம் !! ஐன்ஸ்டீனே தோத்து போயிடுவாரு ) !!!

டிஸ்கி : இந்த படத்த இந்தில ரீமேக் பண்ண போறதா பேச்சு அடிபடுது !!! (நீங்க தெரிஞ்சு பேசுறீங்களா இல்ல தெரியாம பேசுறீங்களா ???)

டிஸ்கி 2 : இந்த மாதிரி தான் பல அணில் ஃபேன்ஸ் வெளில திரியுறாய்ங்க !!!

January 17, 2012

வேண்டுகோள் !!!

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் , வாசகர்ளுக்கும் ,

தற்பொழுது பதிவுலகில் திருட்டு அதிகமாகி கொண்டு இருக்கிறது !!! தயவு செய்து அதை யார் எழுதினாரோ அவருக்கு உரிய மரியாதையை கொடுங்கள் !!!
அவர் தன் சொந்த மூளையை உபயோகப்படுத்தி தான் எழுதியிருக்கிறார் . உங்கள் பதிவு பிரபலமாக அன்றன்றைக்கு பரபரப்பாக இருக்கும் தலைப்புகளில் பதிவு எழுதுங்கள் !! இப்படி பதிவை திருடி போடுவதால் உங்களுக்கு கிடைக்க போவது ஒன்றும் இல்லை , மாறாக உங்கள் மீது சட்டவாரியான நடவடிக்கை எடுக்க அது வழிதோன்றலாக அமையும் .

மேலும் அந்த பதிவை உபயோகப்படுத்தும் முன்பு அந்த ஆசிரியரிடம் மின்னஞ்சல் மூலமாவது அனுமதி வாங்குங்கள் !! இந்த பதிவை நான் எழுத காரணம் , என் நண்பர் ஒருவரின் பதிவு பல வலைத்தளங்களில் அவரது அனுமதியன்றி போடப்பட்டது !! மேலும் அது அவரது படைப்பு என்று மறைக்கப்பட்டது !! சில கடுமையான நடவடிக்கைகளுக்கு பிறகு அது அந்த பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டது !!!

நீங்கள் ஒரு பதிவிலிருந்து திருடி இருந்தால் தங்கள் மீது DMCA பிரகாரம் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க படலாம் . எனவே தயவு செய்து திருடாதீர்கள் !!

இது போன்று தங்கள் பதிவு களவாட பட்டிருந்தால் இந்த உரலியில் உள்ள வழிமுறைகளை பின்பற்றவும் http://support.google.com/bin/request.py?hl=en&product=blogger&contact_type=lr_dmca  .

இது சிலருக்கு வேண்டுகோள் !! சிலருக்கு எச்சரிக்கையாகவும் அமையலாம் !!

மேலும் தகவல்களுக்கு இன்னொரு பதிவை கூடிய விரைவில் போடுகிறேன் !!

January 16, 2012

ட்விட்டரை வாழ வைத்த தெய்வம்

என்னாடா இவன் இறந்த காலத்த போட்டுருக்கான்னு பாக்குறீங்களா ??
அட ஆமாங்க , இவர ஒரு காலத்துல ட்விட்டரே கொண்டாடுனுச்சு !! இப்ப என்ன ஆனாருன்னு கேக்குறீங்களா ?? இவர கட்சி தலைவர் பதவிலேந்து தூக்கிட்டாங்க !!! சரி நம்ம பதிவுக்கு போவோம் !!!

தங்கபாலு - ஒரு காலத்துல இவரு அறிக்கை விட்டார்ன்னா போதும் , அன்னைக்கு பூரா ட்விட்டர்ல பொங்கலோ பொங்கல் தான். இவரு தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவரா இருந்தாரு . தி.மு.க ஆட்சியில இருக்குறப்ப இவரு பண்ண அலும்பு இருக்கே , அய்யய்யயோ !! இவரு கட்சி எந்த கட்சியோட கூட்டணில இருக்குனு அண்ணாத்துக்கு தெரியாது !! அப்படி என்ன இவருக்கு ஆணி புடுங்குற வேலன்னு கேக்குறீங்களா ?? வேற என்ன , கட்சியில புதுசா சேர்ற தொண்டர் பெருமக்களோட வேட்டிய உருவுறது தான்.

இவரு தலைவரா இருந்தப்ப காங்கிரஸ் ஆபிஸ் பக்கத்துல ஒரு வேட்டி கடையே ஓப்பன் பண்ணுனாங்க !! அந்த கடையோட லாபத்துல ஒரு பங்கு இவருக்கு போகுதுன்னு கூட ஒரு செய்தி இருந்துச்சு , ஆனா இவரு அத பத்தி எல்லாம் கவலப்படாம வேட்டிய கிழிச்சுக்கிட்டே இருந்தாரு . இவரு தலைவரா இருந்தப்ப தினம் தினம் காங்கிரஸ் ஆபிஸ் பக்கம் போர்க்களம் தான் . தமிழ்நாட்டுல பல நெசவாளர்கள் இவருக்கு கடமைபட்டுறுக்காங்க !!!

இவரு தேர்தல் அப்ப அடிச்ச கூத்து தான் உச்சகட்ட காமெடி !! இவரு அவரோட பொஞ்சாதிக்கு MLA சீட்டு வாங்கி குடுத்தாரு !! ஆனா இவரோட உயிர்தொண்டர்கள் இவரு தான் தேர்தல்ல நிக்கனும்னு போராடி நிக்க வெச்சாங்க !! அப்படியும் இவரு ஜெயிச்சாரா ??? ம்ஹூம் , இவரு சொந்த தொகுதி மக்களே இவர அநியாயமா தோக்கடிச்சிட்டாங்க !!! இவரு தலைமைல நின்ன 63 பேர்ல 5 பேரு தான் ஜெயிச்சாங்க !!!

அதுக்கு அப்புறமும் இவரு தலைவரா இருந்தது வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் !! அப்படி தலைவரா இருந்தப்பயாச்சும் சும்மா இருந்தாரா ??? திரும்பியும் பழைய உத்தியோகத்த (வேட்டி கிழிக்கறது தான்) ஆரம்பிச்சுட்டாரு . இவருக்கு பயந்துக்கிட்டு பல பேரு காங்கிரஸ விட்டு ஓடிட்டாய்ங்க !!

இவரு தலைமையில நடந்த கடைசி தேர்தல் உள்ளாட்சி தேர்தல் தான் . அதுலயும் மண்ண கவ்வுனதால இவர கட்சி தலைவர் பதவிய விட்டு தூக்கிட்டாங்க !!

இவரு இப்ப டம்மி பீசானத தெரிஞ்சிகிட்டு EVKS இவர ஓட்டுற ஓட்டு இருக்கே !!! இவரு கட்சியில சாதாரண தொண்டன் தான்னு இவர ஓட்டுறாரு !!

இப்ப இவருக்கு பதிலா ஞானதேசிகன தலைவரா ஆக்கி இருக்காங்க !!! ஆனா இவரு வந்த அப்புறம் காங்கிரஸ்ல எவனுமே இல்லன்னு ஒரு நியூஸ் வருது !!! இருந்தாலும் இவராட்டி தங்கபாலு அளவுக்கு வர முடியாது


தலைவா !! சீக்கிரம் திரும்பி வா தலைவா , நீ இல்லாம ட்விட்டர்ல என்னவோ மாதிரி இருக்கு !!! முடிஞ்சா புதுசா ஒரு கட்சி ஓப்பன் பண்ணு !!!

ட்விட்டரை வாழ வைக்கும் தெய்வங்கள்

பிளாக்க ஆரம்பிச்சுட்டு என்ன எழுதுறதுன்னு மண்டைய பிச்சுக்கிட்டு இருந்தப்ப தான் 'நம்ம ஏன் ட்விட்டர பத்தி எழுத கூடாது' ன்னு தோணுச்சு. அங்க ஆரம்பிச்ச கற்பனை கழுதை(ஏன் குதிரன்னு மட்டும் தான் சொல்லனுமா என்ன) தறிகெட்டு மேஞ்சதுல கெடச்சது தான் கீழ இருக்குற பதிவு .

முதல்ல ட்விட்டர் பத்தி : ட்விட்டர் ஒரு சமூக வலைத்தளம் . பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள் . சிலர் பகிர்ந்து கொல்வார்கள் . அந்த ஒரு சிலர் தான் கீழே இந்த பதிவ அலங்கரிக்க போறது .

1."பவர்ஸ்டார்" : தெய்வம் , கல்யாணராமன் பார்ட் - 3 என பல அடைமொழிகளை கொண்டு அழைக்கப்படும் இவர் இல்லைன்னா ட்விட்டர் ல பாதி பேரு இருக்க மாட்டான் . ஆமாம் இவரு மேல அம்புட்டு பாசம் வச்சுருக்குங்க பயபுள்ளைங்க !!! போதாகுறைக்கு இவரு ட்விட்டர் ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு படுத்துற பாடு...... சப்பா அத பத்தி ஒரு பத்து பதினஞ்சு பதிவு போட்டாகனும் !!! இவரு நடிச்சு போன வருஷம் வெளியான(ங்கே...) லத்திகா படம் 200 நாள் சக்கபோடு போட்டுது(எந்த தியேட்டர்ல ஓடுனுச்சுன்னுலாம் கேக்கப்பிடாது). இது பத்தாதுன்னு இந்த பொங்கலுக்கு 'நண்பன்' , 'வேட்டை' படங்களுக்கு போட்டியா 'ஆனந்ததொல்லை' வேற ரிலீஸ் பண்ணிருக்காரு . இது பத்தாதா நம்ம பசங்களுக்கு ??? உங்களுக்கு பொங்கல் போனஸ் : http://pic.twitter.com/98uhQZJv

2.அணில் : அணில் யாருன்னு கேக்குறீங்களா ?? வேற யாரு "சுறா","வேட்டைக்காரன்" போன்ற பல அரிய படங்களை கொடுத்த டாக்டர்(வெவெவெ).விஜய் தான்.அவரு எப்படி ட்விட்டர வாழ வைக்குறாருன்னு கேக்குறீங்களா ?? இருக்கவே இருக்காரு அவரு நைனா SAC . அணில் சும்மா இருந்தாலும் அவரு சும்மா விட மாட்டாரு . இதுல கடைசியா அவரு வேலாயுதம் ன்னு ஒரு படம் குடுத்தாரு , அந்த படத்த எடுத்த தியேட்டர்ல எல்லாம் சிகரெட் வியாபாரம் நல்லா ஓடுனுச்சுன்னு ஒரு தகவல் சொல்லுது. இப்ப பொங்கலுக்கு "நண்பன்"ன்னு ஒரு படம் குடுத்தாரு , அதுல ஏதோ திருந்திருக்குற மாதிரி இருக்கு . பாப்போம் , எதுவும் நம்ம கைல இல்ல. அடுத்து வர்ற துப்பாக்கி படத்துல ட்விட்டர் பெருமக்கள வாழ வைப்பாருன்னு !!!

3.மருத்துவர் ராமதாஸ் : இவரு மெய்யாளுமே டாக்டர் தாங்க.பா.ம.க ன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சி ட்விட்டர் உள்ளங்களுக்கு நல்லா தீனி போடுறவரு !! இவரு லேட்டஸ்ட்டா பண்ண காமெடி 2016ல பா.ம.க ஆட்சிய பிடிக்கும்ன்னு சொன்னாரு பாருங்க , அன்னைக்கு ட்விட்டர் ஃபுல்லா கெடாவெட்டே நடந்துது !! இவருன்னா எல்லாருக்கும் அப்படி ஒரு பிரியம் . இவரு மக்கள் டிவின்னு ஒரு சேனல் நடத்துறாரு . அந்த சேனல பாக்குறவங்களுக்கு 24 மணி நேரத்துல பைத்தியம் பிடிக்குறது உறுதி . இவரையே சமாளிக்க முடியல , இப்ப இவரு கட்சிலேந்து பிரிஞ்ச வேல்முருகன் புதுசா கட்சி ஆரம்பிக்க போறன்னு அலப்பறைய வுட்டுக்கிட்டு இருக்காரு (கூடிய சீக்கிரமே ஒரு காமெடி படம் ட்விட்டர்ல ஓடும்)

வணக்கமுங்கோ !!!

எல்லா மக்களுக்கும் வணக்கம் !!! இது எங்க சங்கத்து சார்பா ஆரம்பிக்குற முதல் பிளாக் !!! உங்களோட அன்பும் ,  ஆதரவும் , நக்கலும் , கிண்டலும் வேணும் நாங்க வளர !!! சங்கத்து டீடெய்ல்ஸ் அப்பாலிக்கா போஸ்ட் பண்ணுறன் !!!