January 18, 2012

விமர்சனம் by அணில் ரசிகர்கள்

நான் அணில் ரசிகன் இல்லை என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன் !!!

நண்பன் - விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் படம் !!!

நண்பன் படம் - விஜய் நடித்து வெளிவந்திருக்கும் உலகதரத்திலான(கொஞ்சம் ஓவரா தான் இருக்கோ) படம் . ஷங்கர் அவர்களுடன் விஜய் இணைந்திருக்கும் முதல் படம் . இந்த படத்தில் தளபதி தன் இமேஜை(அப்படி ஒன்னு இருக்கோ) பற்றி கவலைப்படாமல் பல பேரிடம் அடி வாங்கி மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார் .

மற்ற படங்களை போல் அல்லாமல் இந்த படத்தில் தளபதிக்கு இன்ட்ரோ சாங்க் வைக்காத ஷங்கரை கடுமையாக கண்டிக்கிறேன் (அப்படி வச்சிருந்தா தான் படம் தியேட்டர விட்டு ஓடிருக்குமே) . தளபதி இந்த படத்தில் அசரடிக்கிறார் (யார ??? படம் பாக்க வர்றவங்கள தான) . 3 இடியட்ஸ் படத்தின் சாயலே இல்லாமல் படத்தை எடுத்து இருக்கிறார்கள்(வேணாம்டா) . இந்தியில் அமீர்கான் நடித்ததை விட மிக சிறப்பாக தளபதி நடித்துள்ளார் . இந்த படத்தில் நடித்து தன்னை ஒரு உலக நடிகர் என்று நிரூபித்துள்ளார்(நடிப்பா ?? அப்படின்னா ) . படத்தில் குறைகள் என்று பார்த்தால் இரண்டாம் பாதியில் விஜய்யை நிறைய இடங்களில் காட்டவே இல்லை(காட்டிட்டா மட்டும்) !!! அப்படி காட்டியிருந்தால் படம் பிய்த்து கொண்டு ஓடியிருக்கும் (தியேட்டர விட்டு தான) . படத்தில் வரும் பல பேர் விஜயை அடிக்கிறார்கள் , இப்பொழுது சொல்லுங்கள் , வேறு யாராவது நடிகர்கள் இப்படி அடி வாங்குவார்களா ???(இத மங்காத்தாலயே தல பண்ணியாச்சு !!!)

விஜய் படம் என்றாலே எப்பொழுதும் படம் ஓடும் , இந்த படத்தில் ஷங்கர் அவர்கள் சேர்ந்து தன்னை பெருமைபடுத்தி கொண்டிருக்கிறார்(ம்க்கும்) . தளபதி பார்மில் இல்லை என்று சொன்னவர்களுக்கு இந்த படம் ஒரு சாட்டையடி(படம் பாத்தவைங்களுக்கு தான) !!

எப்படி ரஜினிக்கு தளபதியோ அது போல் இளைய தளபதிக்கு நண்பன் . (இந்த டகால்டி வேல தான வேணாங்கறது) . விஜய் தன்னை நிஜமாகவே மருத்துவர் என்று பிரசவம் பார்க்கும் காட்சியில் நிரூபித்துள்ளார்(ஆமாம் , படத்துல அவரு இஞ்சினியருக்கு தான படிக்கிறாரு??) . அவருடன் நடித்து ஜீவா , ஸ்ரீகாந்த் பெருமை சேர்த்துகொண்டுள்ளார்கள் (அய்யயயய) .

விஜய் ஒரு சகலகலாவல்லவருன்னு இந்த படத்துல நிரூபிச்சுருக்காரு !! விஜய் இதுல ஒரு புத்திசாலி மாணவரா(ஞேஞே) தன்ன வெளிக்காட்டியிருக்காரு !!! அதுவும் அவரு சத்யராஜ்கிட்ட ஏன் விண்வெளில பென்சில் யூஸ் பண்ண கூடாதுன்னு கேக்குற இடம் நச்ச்ச் !!! இந்த இடத்துல விஜயோட சொந்த திறமை நல்லாவே வெளிபட்டுருக்கு(ஆமாம் !! ஐன்ஸ்டீனே தோத்து போயிடுவாரு ) !!!

டிஸ்கி : இந்த படத்த இந்தில ரீமேக் பண்ண போறதா பேச்சு அடிபடுது !!! (நீங்க தெரிஞ்சு பேசுறீங்களா இல்ல தெரியாம பேசுறீங்களா ???)

டிஸ்கி 2 : இந்த மாதிரி தான் பல அணில் ஃபேன்ஸ் வெளில திரியுறாய்ங்க !!!

11 comments:

 1. அட என்ன குட்டி நீ இல்லாத(நடிப்பு திறமை நீங்க வேற எதாச்சும் நினசிக்கபோறேங்க) இலியானா பத்தி ஒரு வார்த்தை கூட இல்ல.. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. தளபதிக்கு கிஸ் எல்லாம் அடிச்சிருக்கா அதுக்காகவாது ஒரு ரெண்டு வார்த்தை போட்ருக்கலாம்..

  ReplyDelete
 2. @Ganesh Krish
  இது அணில் ரசிகர்களின் கருத்து பாஸ் !!! சோ நோ இலியானா !!!
  நன்றி !!!

  ReplyDelete
 3. இருக்கானா.. இடுப்பிருக்கானா.. இல்லையானா... இலியானா...
  என்ற பாடலை உங்களுக்கு டெடிகேட் செய்கிறோம்!

  ReplyDelete
 4. டைமிங் டச்சிங் கிளைமாக்ஸ் வரிகள் ,, இந்தில ரீமேக் .. மறுபடியும் முதல்ல இருந்தா

  ReplyDelete
 5. talapuli@twitter.comJanuary 18, 2012 at 10:32 PM

  விஜய் நண்பனில் கல்லூரி மாணவனாக நடிக்கும் போது.,ஸ்டாலின் இளைஞர் அணி தலைவராக இருப்பதில் ஒன்றும் தவறில்லையே ..!

  ReplyDelete
 6. நல்ல நக்கல் நடை..சில எள்ளல்கள் அருமை (3 இடியட்ஸ் படத்தின் சாயலே இல்லாமல் படத்தை எடுத்து இருக்கிறார்கள்(வேணாம்டா). ஆனந்த தொல்லையை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிரென்.

  சங்கத்தின் ப்லாகை பிரபலபடுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்,

  மொட்டமாடியிலிருந்து கட்டதொர

  ReplyDelete
 7. தல தளபதி , mani2many , நையாண்டி நைனா , ravi shankar j , talapuli@twitter.com
  நன்றிகள் கோடி !!! ;))

  ReplyDelete
 8. MuRiqa@twitter.comJanuary 19, 2012 at 1:11 AM

  //3 இடியட்ஸ் படத்தின் சாயலே இல்லாமல் படத்தை எடுத்து இருக்கிறார்கள்(வேணாம்டா) .//
  இந்த நக்கல் தானே வேணாங்கறது? காமெரா ஆங்கில்லயாவது மாற்றம் இருந்திருந்தா நான் இத சத்தியமா ஏத்துக்கிட்டிருப்பேன்.
  அப்டியே முடிஞ்சா "வாயால் வடை சுடும் விசய் பான்ஸ்" பண்ணுன உல்டாலக்கடி அம்பலமானதையும் பாருங்க நண்பா...
  http://goo.gl/8u4x2

  ReplyDelete
 9. MuRiqa@twitter.com
  நண்பா , நான் கடைசியா போட்டுருக்குற டிஸ்கி 2வ படிச்சி பாருங்க !!! விமர்சனத்தோட முதல் வரியவும் படிச்சு பாருங்க !!! ;)))
  கொமெண்டியதற்கு நன்றி !!!

  ReplyDelete