January 16, 2012

ட்விட்டரை வாழ வைக்கும் தெய்வங்கள்

பிளாக்க ஆரம்பிச்சுட்டு என்ன எழுதுறதுன்னு மண்டைய பிச்சுக்கிட்டு இருந்தப்ப தான் 'நம்ம ஏன் ட்விட்டர பத்தி எழுத கூடாது' ன்னு தோணுச்சு. அங்க ஆரம்பிச்ச கற்பனை கழுதை(ஏன் குதிரன்னு மட்டும் தான் சொல்லனுமா என்ன) தறிகெட்டு மேஞ்சதுல கெடச்சது தான் கீழ இருக்குற பதிவு .

முதல்ல ட்விட்டர் பத்தி : ட்விட்டர் ஒரு சமூக வலைத்தளம் . பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள் . சிலர் பகிர்ந்து கொல்வார்கள் . அந்த ஒரு சிலர் தான் கீழே இந்த பதிவ அலங்கரிக்க போறது .

1."பவர்ஸ்டார்" : தெய்வம் , கல்யாணராமன் பார்ட் - 3 என பல அடைமொழிகளை கொண்டு அழைக்கப்படும் இவர் இல்லைன்னா ட்விட்டர் ல பாதி பேரு இருக்க மாட்டான் . ஆமாம் இவரு மேல அம்புட்டு பாசம் வச்சுருக்குங்க பயபுள்ளைங்க !!! போதாகுறைக்கு இவரு ட்விட்டர் ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு படுத்துற பாடு...... சப்பா அத பத்தி ஒரு பத்து பதினஞ்சு பதிவு போட்டாகனும் !!! இவரு நடிச்சு போன வருஷம் வெளியான(ங்கே...) லத்திகா படம் 200 நாள் சக்கபோடு போட்டுது(எந்த தியேட்டர்ல ஓடுனுச்சுன்னுலாம் கேக்கப்பிடாது). இது பத்தாதுன்னு இந்த பொங்கலுக்கு 'நண்பன்' , 'வேட்டை' படங்களுக்கு போட்டியா 'ஆனந்ததொல்லை' வேற ரிலீஸ் பண்ணிருக்காரு . இது பத்தாதா நம்ம பசங்களுக்கு ??? உங்களுக்கு பொங்கல் போனஸ் : http://pic.twitter.com/98uhQZJv

2.அணில் : அணில் யாருன்னு கேக்குறீங்களா ?? வேற யாரு "சுறா","வேட்டைக்காரன்" போன்ற பல அரிய படங்களை கொடுத்த டாக்டர்(வெவெவெ).விஜய் தான்.அவரு எப்படி ட்விட்டர வாழ வைக்குறாருன்னு கேக்குறீங்களா ?? இருக்கவே இருக்காரு அவரு நைனா SAC . அணில் சும்மா இருந்தாலும் அவரு சும்மா விட மாட்டாரு . இதுல கடைசியா அவரு வேலாயுதம் ன்னு ஒரு படம் குடுத்தாரு , அந்த படத்த எடுத்த தியேட்டர்ல எல்லாம் சிகரெட் வியாபாரம் நல்லா ஓடுனுச்சுன்னு ஒரு தகவல் சொல்லுது. இப்ப பொங்கலுக்கு "நண்பன்"ன்னு ஒரு படம் குடுத்தாரு , அதுல ஏதோ திருந்திருக்குற மாதிரி இருக்கு . பாப்போம் , எதுவும் நம்ம கைல இல்ல. அடுத்து வர்ற துப்பாக்கி படத்துல ட்விட்டர் பெருமக்கள வாழ வைப்பாருன்னு !!!

3.மருத்துவர் ராமதாஸ் : இவரு மெய்யாளுமே டாக்டர் தாங்க.பா.ம.க ன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சி ட்விட்டர் உள்ளங்களுக்கு நல்லா தீனி போடுறவரு !! இவரு லேட்டஸ்ட்டா பண்ண காமெடி 2016ல பா.ம.க ஆட்சிய பிடிக்கும்ன்னு சொன்னாரு பாருங்க , அன்னைக்கு ட்விட்டர் ஃபுல்லா கெடாவெட்டே நடந்துது !! இவருன்னா எல்லாருக்கும் அப்படி ஒரு பிரியம் . இவரு மக்கள் டிவின்னு ஒரு சேனல் நடத்துறாரு . அந்த சேனல பாக்குறவங்களுக்கு 24 மணி நேரத்துல பைத்தியம் பிடிக்குறது உறுதி . இவரையே சமாளிக்க முடியல , இப்ப இவரு கட்சிலேந்து பிரிஞ்ச வேல்முருகன் புதுசா கட்சி ஆரம்பிக்க போறன்னு அலப்பறைய வுட்டுக்கிட்டு இருக்காரு (கூடிய சீக்கிரமே ஒரு காமெடி படம் ட்விட்டர்ல ஓடும்)

13 comments:

 1. முதல் படைப்பு.. நன்றாக உள்ளது .. மேலும் வளர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. @RealBeenu
  ரொம்ப நன்றி அக்கா !! :))

  ReplyDelete
 3. நல்ல பதிவு.. ஹி.ஹி. என்ன தான் இருந்தாலும்... தங்கபாலு வே விட்டு டீங்க தெய்வகுத்தம் ஆகி போயிரும்.. சீக்கிரம் பரிகாரம் பண்ணிடுங்க...

  ReplyDelete
  Replies
  1. அவருக்கும் ஞானதேசிகனுக்கும் கூடிய விரைவில் அடுத்த பதிவு !!!

   Delete
 4. தானை தலைவர் தங்கபாலு எங்கபா?

  ReplyDelete
 5. அவருக்கும் ஞானதேசிகனுக்கும் கூடிய விரைவில் அடுத்த பதிவு !!! சத்தியமா வந்தே தீரும் !!!

  ReplyDelete
 6. பெருமையா இருக்குடே! உங்கள நெனைச்சு ரொம்பப் பெருமைப் படுறேன். சந்துலயே இருந்து நாங்க சீரழிஞ்ச மாதிரி நீங்களும் வீணாப் போகாம ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கீங்களே, ரொம்ப சந்தோசம்டே! அப்பப்போ பெருசுகள வந்து பாத்துட்டுப் போங்கடே! அவ்வ்வ்வ்வ்வ் இது ஆனந்தக் கண்ணீரு...

  ReplyDelete
  Replies
  1. அட !! நீங்களாம் குரு !! நான் இப்ப தான் ஆரம்பிச்சுருக்கன் !! ரொம்ப நன்றி தங்கள் பாராட்டுக்கு !! :))

   Delete
 7. பக்கிப் பசங்களா வேர்ட் வெரிஃபிகேசன மொதல்ல தூக்குங்கடே. பாராட்டுன வாயலயே திட்ட வைச்சிட்டீங்களேடே!

  ReplyDelete
  Replies
  1. நேத்தியே தூக்கிட்டங்க !!! :)))

   Delete
 8. அருமைய்யா. அருமை. அப்படியே நம்ம 'கேப்'புட்டன் பத்தியும் சொல்லுங்க.

  ReplyDelete
 9. ஹா ஹா ரொம்ப ரத்தின சுருக்கமா முடிச்சிட்டீங்க?!! குட் ட்ரை

  ReplyDelete
 10. செந்தாரப்பட்டி பெத்துசாமி , சி.பி.செந்தில்குமார்

  ஆதரவிற்கு நன்றி !!! :)))

  ReplyDelete