நம்ம பசங்களுக்கு பிப்ரவரி மாசம் மட்டும் எங்குட்டு இருந்து இம்புட்டு அறிவு வருதுன்னு தெரியல . நம்மளுக்கு பல்பு (குறிப்பா எனக்கு) கொடுக்குறதுக்குன்னே ஒரு கூட்டம் அலைஞ்சுக்கிட்டு இருக்குது . அப்படி என்னா தான் பல்பு குடுத்தாங்க , குடுக்கபோறாங்கன்னு ஒரு கற்பனை + உண்மை பதிவு .........
நேத்து காலைல 6 மணிக்கு (நம்புங்கப்பா காலைல 6 மணி தான்) நான் எந்திரிச்சப்ப ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு . அதுல பாத்தா என்னோட குளோஸ் பிரெண்டு திடீர்னு எனக்கு இந்த மாசம் 30ந்தேதி நிச்சயதார்த்தம் கண்டிப்பா வந்துருன்னு மெசேஜ் பண்ணிருந்தான் . சரி நண்பனுக்கு நல்லது நடக்குதேன்னு பார்ட்டி கேக்கலாம்னு (ஆகா நீ நல்லதுன்னு சொன்னப்பவே சுதாரிச்சுருக்கனும்) போன் பண்ணுனன் . போன் பண்ணுனா அவன் ஒரு வார்த்தை சொன்னான் . அத கேட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன் நானு . அது என்னான்னா “போடா லூசு , பிப்ரவரிக்கு ஏதுடா 30”ன்னு சொல்லுறான்(பயபுள்ள ஏமாத்திட்டான்) . சரி அப்படியே கொஞ்ச பில்டப் குடுத்து இது மார்ச் மாசம்னு நெனச்சுட்டன்னு சொல்லி நான் போன வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு சொல்லி தெரியாது........
அதுக்கு அப்புறம் இந்த மாதிரியே எல்லாரும் மெசேஜ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க . சரி நம்மளும் பண்ணுவோமேன்னு சொல்லிட்டு பண்ணுனா , அதுக்கு வந்த ஒரு ரிப்ளை “அந்த தியாகிக்கு என்னோட வாழ்த்துகள சொல்லிடு” . காலைலயாச்சும் ஒரு பல்பு மட்டும் தான் வாங்குனன் . இப்ப ஒரு ட்யூப்லைட்டையே வாங்கிருக்கன் .
அதோட விடல என்னோட கெரகம் . தெரியாத்தனமா என்னோட லவ்வருக்கு(அட நம்புங்கப்பா) வேற அனுப்பி தொலச்சுட்டன் இந்த மெசேஜ . வழக்கம் போல சாயங்காலம் காலேஜ் முடிச்சுட்டு(காலேஜ்லேந்து உன்னிய தொரத்தி வுட்டாங்கன்னு சொல்லு) வந்தா 7 மெசேஜ் . எல்லாம் லவ்வர்கிட்டேந்து தான் . எல்லா மெசேஜ்லயும் ”கால் மீ” தான் . அதான் பாத்தன் பாவி இப்பயாச்சும் நீ கால் பண்ணுவன்னு பாத்தா அப்பயும் கால் மீ . சரி போனா போகுதேன்னு (கால் பண்ணலன்னா பிரிஞ்சிருவாளோன்னு ஒரு பயம்) கால் பண்ணுனன் . கால் பண்ணுனா மம்மி ,டாடி பாவம்லாம் போய் ஒன்னு விட்ட அப்பத்தாவலாம் புடிச்சு திட்டுறா . ஒரே பேட் வேர்ட்ஸ் . திடீர்னு கல்யாணம்னு மெசேஜ் அனுப்புனோன பாசத்துல திட்டுறான்னு பாத்தா கடைசியா சொன்னா பாருங்க ஒரு வார்த்தை “உன் மூஞ்சுக்கு எல்லாம் எவண்டா பொண்ணு குடுப்பான் , நானே ஒனக்கு ஓவர் , இதுல இன்னொரு பொண்ணு வேறயா” .ஒடனே கட் பண்ணிட்டனே போன . மனசுக்குள்ள “பாவி மவளே , ஏதோ லவ்வுல போன் பண்ணுறியேன்னு பாத்தா என்னிய கலாய்க்கறதுக்கு போன் பண்ணிருக்கியேடி” . ஹூம் , இதுக்கு நான் அவளுக்கு போன் பண்ணாமையே இருந்துருக்கலாம் . நான் போன பிராக்கெட்டுல சொல்லிருந்த நல்ல விஷயமாச்சும் நடந்து தொலைச்சுருக்கும் .
ஆகவே மக்களே இனிமே மெசேஜ பாத்துட்டு உணர்ச்சிவசப்பட்டு கால் பண்ணுறதுக்கு முன்னாடி காலண்டரையும் கொஞ்சம் பாத்துருங்க . இல்லாட்டி எனக்கு கிடைச்சா மாதிரி உங்களுக்கும் தொடர்ச்சியா பல்பு கிடைக்கும்ங்குறதுல எந்த சந்தேகமும் இல்ல.
டிஸ்கி : இனிமே எந்த மெசேஜ் வந்தாலும் கால் பண்ண மாட்டண்டா (ஏன்னா என்கிட்ட பேலன்ஸ் இல்லடா)