பஸ்கி : ஒவ்வொரு வாரமும் அரசியல்ல நடக்குற உட்சபட்ச காமெடி சீன்களின் தொகுப்பு தான் அதிரிபுதிரி . இனி வாராவாரம் கூத்தடிப்போம்
**********************************************************************************
இந்த வாரம் சங்கரன்கோவில் தான் ஹாட் மேட்டரு
நம்ம மாம்பழக்காரரு (அதாங்க ராமதாஸ்) போன வாரம் சும்மா தானுங்க இருந்தாரு , பட் அவரோட புள்ளையாண்டான் மிஸ்டர்.அன்புமணி தான் போன வாரத்து டாக் ஆப் தமிழ்நாடு . அப்படி என்னாத்தய்யா பேசுனாருன்னு கேக்குறீங்களா ??
"ராமதாஸ் தான் உண்மையான தமிழர் - மற்ற அனைவரும் தமிழர் இல்லை"
இது தான் அந்த பயபுள்ள விட்ட ஸ்டேட்மெண்ட்
இதுல ஆரம்பிச்சது தான் கும்மி . அதுக்கு அப்புறம் அவங்க அப்பாவ விட ஓவர் நைட்ல ஒபாமா ஆயிட்டாருங்க . கூடவே அவங்க சங்கட்தோட ட்ரேட்மார்க் டயலாக் “திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது” . இவங்க கூப்புட்டாலும் அவங்க வரமாட்டாங்கன்னு ஊருக்கே தெரியும் .
**********************************************************************************
நம்ம வடிவேலு திருப்பியும் புதுசா ஆரம்பிச்சுட்டாரு . அரசியல்ல குதிச்சே தீருவன்னு ஒத்த கால்ல நின்னுட்டு இருக்காப்பல புயல் . புயல் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி பல்பானது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் . இந்த வாட்டி அவரு ட்யூப்லைட்டு ஆவறது அவராட்டியே தடுக்க முடியாது . இதுல என்னைய யாராட்டியும் தடுக்க முடியாதுன்னு வேற பஞ்ச் !!!
**********************************************************************************
வழக்கம் போல நம்ம காங்கிரஸ் காரங்க நம்பிக்கைய வீணாக்கல , அறிக்கைலாம் விட்டாங்க . அதுல டாப் மோஸ்ட் டயலாக் - “விளம்பரம் இல்லாததால் விலாசம் இல்லாமல் போனோம்” , சொன்னது நம்ம ஞானதேசிகன் . என்னா இருந்தாலும் தங்கபாலு மாதிரி வராதுங்க . இது பத்தாதுன்னு நம்ம ஜி.கே.வாசன் , அதாங்க மத்திய மந்திரி அவரு வேற கான்பிடன்சா சொல்லுறாரு , திமுக ஜெயிக்கும்னு . அப்படியே ஜெயிச்சுட்டாலும் .
இது பத்தாதுன்னு காங்கிரஸ்க்கு இது போதாத காலம் . நம்ம உள்துறை மந்திரி ஏதோ சட்டம் கொண்டு வர்றதா பேச்சு , அதுல சில பல உரிமைகள் பறிபோகுதுன்னு எல்லா முதல்வர்களும் இப்ப அவருக்கு எதிரா திரும்பிருக்காங்க . இப்ப அவரு எல்லாருக்கும் கலைஞர் அளவுக்கு லெட்டர் எழுதிகிட்டு இருக்காரு . இன்னும் கொஞ்ச நாள்ல ப.சி யோட டவுசர் அவிழ்க்கபடும்னு எல்லாரும் ஆவலோட எதிர்பாக்குறாங்க . அவங்க ஆசை நிறைவேறட்டும் .................
**********************************************************************************
நெக்ஸ்ட் ஏரியா நம்ம கேப்டன் . அவரு அம்மாக்கிட்ட சவால் விட்டதுக்குன்னே தனியா வேற நிக்குறாரு . பிரச்சாரத்துக்கு போய்யான்னா குடும்பத்தோட ஏதோ பிக்னிக் போறா மாதிரியே போறாரு , கேட்டா கூட்டுறவே நாட்டுயர்வுன்னு ஒரு டயலாக்கு . சப்பா , இப்பவே கண்ண கட்ட ஆரம்பிக்குதே.............
நல்லா பாத்துக்கோங்க இதுல இருக்குற கேப்டன் பையன் அடுத்ததா சினிமால வேற நடிக்க போறாராம் . தமிழ்நாட்டு மக்களே உசார் . அடுத்த பஞ்ச் பரமசிவம் உருவாகிறார் ............
**********************************************************************************
அதிமுக இந்த வாட்டி இடைத்தேர்தல்ல ஜெயிச்சே ஆகனும்னு ஒத்த கால்ல நிக்குறது தெரியுது . அதுக்காக இருக்குற மந்திரி எல்லாம் அங்க இப்ப பிரசாரம் பண்ண ஆரம்பிச்சாச்சு . நம்ம கேப்டன் வேற இதுக்கு தடை கேட்டார்.
அம்மா வேற கரண்டு கட்டு , சமச்சீர் கல்வி , அண்ணா நூலகம்னு ஏகப்பட்ட மைனஸ் வச்சுக்கிட்டு இருக்காங்க . ஜெயிப்பாங்களான்னு தெரியாது , ஆனா அங்க பலத்த போட்டி இருக்குன்னு மட்டும் தெரியுது
**********************************************************************************
அது எப்படிங்க திமுகவ விட்டுட்டு எழுத முடியும் ??
திமுக வும் இடைத்தேர்தல்ல நிக்குது . ஆனா இன்னும் அங்க யாரு வேட்பாளர்ன்னு சந்தேகமா தாங்க இருக்கு . இதுல கலைஞர் வேற நாங்க தமிழ பாலிடாயில் ஊத்தி வளர்த்தோம்னு கொக்கரிச்சுக்கிட்டு இருக்காரு . இன்னும் மியூசிக்கல் சேர் நிக்கலங்க யார் வேட்பாளர்ன்னு .
**********************************************************************************
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் நம்ம பாஜக பெரிய காமெடிபீசாவாலாம்னு ட்ரை பண்ணுறாங்க . ஆமாம் அவங்க இந்த இடைத்தேர்தல்ல யார் ஆதரவும் இல்லாம தனியா நிக்குறாங்க . இவங்க டவுசர உறுவலாம்னு எல்லாரும் பாத்தா இவங்க ரொம்ப உசார் , டவுசரே போடல , ரொம்ப புத்திசாலிங்க போல....
**********************************************************************************
டிஸ்கி : மேல சொன்னா மாதிரி வாரம் ஒரு பதிவ விட்டுறுவங்க . ஞாயிறு இல்லன்னா திங்கள் ரெண்டு நாள்ல விட்டுருவன் . உங்கள் ஆதரவு தேவை .
Nallaa irukku
ReplyDeleteவெறும் கன்டென்ட் போதாது.இது எல்லாமே வெறும் நியூஸ் மட்டுமே.ரொம்ப நாளைக்கு தாங்காது.பொறுமையா நேரம் எடுத்துக்கிட்டு வரிவரியா வாசகனை கவர் பண்ண முயற்சி செய்யுங்க...
ReplyDelete