February 25, 2012

வாங்க சொதப்பலாம்.... - விமர்சனம்

எல்லாரும் விமர்சனம் போட்டாச்சு , நாம மட்டும் எதுக்கு விட்டு வைக்கனும்??
போட்டுட்டா போச்சு . நேத்து தான் படத்த பாத்தன் . அதனால லேட் விமர்சனத்துக்கு சாரிங்கோ ...........

முதல்ல படத்தோட கதைய சொல்லிடுறன் :

நெறைய பேரு படத்த பாத்து தொலச்சுருப்பீங்க . அவிங்க மட்டும் இந்த பேராவ ஸ்கிப் செஞ்சுடுங்க . அதாகப்பட்டது படத்தோட கதை என்னான்னா ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்றாங்க(ஆமாம் இது பெரிய ஒலக அதிசயம்) . அவங்க ரெண்டு பேரும் வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம எதுக்காகவாச்சும் சண்ட போட்டுக்கிட்டே இருக்குறாங்க . ஒரு கட்டத்துல(அதென்னா கட்டம் ?? சதுரம் ரவுண்டாலாம் இருக்காதா)  இதுக்கு நடுவுல ஈரோயினோட அப்பா அம்மா வேற அடிச்சுக்குறாங்க(ஏன்யா கன்னுக்குட்டிய பத்தி பேசுறப்ப பசு மாட்ட இழுக்குற) . ஈரோவும் ஈரோயினும் சேந்தாங்களா(அவங்க சேருவாங்கன்னு பச்ச புள்ளைக்குக் கூட தெரியும்) , ஈரோயினோட அப்பா அம்மா என்ன ஆனாங்கங்கறது தான் மீதிக்கதை.


இனிமே படத்த பத்தி என் அறிவுக்கு(?!?!?) எட்டுனத சொல்லுறன் :
 
படம் நிஜமாவே சூப்பரா தான் இருக்கு . என்ன ஹீரோ எப்ப பாத்தாலும் படத்த பத்தி கமெண்ட் குடுத்துக்கிட்டே இருக்காரு . நான் பிளாக்ல ப்ராக்கெட்ல கமெண்ட் சொல்லுவன்ல அந்த மாதிரி (பாரு ,இன்னும் ஒழுங்கா எழுதவே கத்துக்கல , அதுக்குள்ள படத்தோட கம்பேர் பண்ணுற ?? நீ நடத்து மவனே) . படத்தோட பெரிய ப்ளஸ்சே சித்தார்த்தோட பிரெண்ட்ஸ் , அப்புறம் ஈரோயினோட அப்பா அம்மா தாங்க . எப்பா பாரு சித்தார்த்தும் அமலாபாலும் சண்ட போடுறதுல அமலா பால் தாங்க ஜெயிக்குது . அதுக்கு அந்த புள்ள யூஸ் பண்ணுற வெப்பன் கண்ணீர் . அத சித்தார்த் சொல்லுற இடத்துல சிம்பாலிக்கா அருவிய காட்டிருப்பாங்க . 

படத்துல வெட்டுக்குத்து இல்லன்னாலும் அத விட மோசமான் மேட்டர்லாம் இருக்குங்க . படத்துல சித்தார்த்தோட பிரெண்டா வர்றவரு எப்ப பாரு பொண்ணுங்க கிட்ட அடி வாங்கிகிட்டே இருப்பாரு . இன்னொருத்தரு அண்ணான்னு சொல்லுற பொண்ணையும் லவ்விட்டே இருப்பாரு . இது பத்தாதுன்னு சித்தார்த் அப்பா அம்மா வேற ரொமான்ஸ் .... (முடியல) . ஒரு தடவ ரெண்டு தடவ சண்ட போட்டா பரவால்ல , இவங்க போடுற சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லப்பா . 

பாவம் எப்ப பாத்தாலும் சித்தார்த் ஏதாச்சும் செய்ய போய் அது அவருக்கே வினையா முடிஞ்சுடுது . உதாரணத்துக்கு அமலா பால் எத பத்தி யோசிக்கிறன்னு கேப்பாங்க . அதுக்கு இவரு முதல்ல எத பத்தியும் யோசிக்கலன்னு சொல்லிட்டு , அப்புறம் மழுப்பறதுக்காக உன் போன்ல ஏன் இத்தன பசங்க நம்பர் இருக்குன்னு கேப்பாரு . அப்புறம் ஆரம்பிக்கும் பாருங்க ரணகளம் , (சித்தார்த்த நினைச்சு தியேட்டர்லயே அழுக அழுகயா வந்துடுச்சு)

படத்தோட ஸ்வீட் எபிசோடுன்னா அது அமலா பால் அப்பா அம்மா எபிசோடு தான் , அதுவும் கோயில்ல ரெண்டு பேரும் பாத்துக்குறப்ப வளையோசை பாட்டு போடுறது செம்ம குறும்பு . அதுக்கு அப்புறம் அவரு ஈரோயின விட ஓவரா வெக்க படுறாருங்க . பொண்ணுக்கிட்டயே லவ் லெட்டர குடுத்து அம்மாகிட்ட குடுக்க சொல்லுறது ஓவர் ரவுசு .

சித்தார்த்தோட மொத்த குடும்பமுமே பேஸ்புக்குல கும்மியடிச்சுட்டு இருக்குது . சித்தார்த்தோட ப்ரொஃபைல்ல அமலா பால் போட்டோவ பாத்துட்டு அது யாருன்னு கேட்டு குடும்பமே ஓட்டுறது , அமலா பால் சித்தார்த்துக்கிட்ட உன் சின்ன வயசு போட்டோ அப்லோடு பண்ணதுக்கு பாட்டின்னு அவரு பதில் சொல்லுறதுன்னு எல்லாமே ஏதோ கனவுல நடக்குற மாதிரியே இருக்கு (நம்ம வீட்டுல எல்லாம் அப்படி பாத்தாங்கன்னா ஒரு பில்லி,சூனியமாச்சும் வச்சுருப்பாங்க)

படத்தோட இன்னொரு பிளஸ்சு சித்தார்த்தோட பிரெண்டா வர்ற அந்த குண்டு பையன் தாங்க . அவன் லவ்வர்ச சேத்து வைக்கிறன்னு சொல்லிட்டு செய்யுற அலப்பற தாங்கல . அமலா பாலும் , சித்தார்த்தும் சண்டைன்னு சமாதானத்துக்கு அவருகிட்ட போவாங்க . பட் கொடுமை என்னான்னா அவருகிட்ட போனதுக்கு அப்புறம் தான் சண்டை பெருசா ஆவும் . அதுல வர்ற டயலாக் “நம்ம பசங்க சொதப்பறதுக்கு காரணமே இந்த மாதிரி மொக்க பசங்களோட அட்வைஸாட்டி தான்”.

படத்தோட மைனஸ்னா அந்த பாண்டிச்சேரி எபிசோட வளவளான்னு இழுத்துறுக்குறது தான். மத்தபடி படம் யூத்துங்க(என்னைய மாதிரி) எல்லாருக்கும் புடிக்கும் .

டிஸ்கி 1 : மவனே , எவனாச்சும் டயலாக்க வச்சு ஒரு பதிவு போடு , அது இதுன்னு சொன்னீங்க தொலச்சுபுடுவேன் . அதுக்குன்னு என் தலைவர் இருக்காரு . அவரு ஏற்கனவே போட்டுட்டாரு
டிஸ்கி 2 : எவனும் என்கிட்ட எங்க பாத்தன்லாம் கேட்டுறாதீங்கப்பா

2 comments:

  1. நல்ல முயற்சி, படத்தை தியேட்டரில பார்த்து எழுதினால் இன்னும் கூர்ந்து சில விஷயங்களை டீடெயிலா எழுதலாம். ஒரு ஃபார்மட் வேண்டும் (நம்ம சிபி விமர்சனம் கவனிக்கவும்), அது இல்லை..ஆனால் நடையில் உள்ள நகைச்சுவை அதை மறைக்கிறது.
    தவிற அதிக பிராகெட்டுகளை தவிர்த்து அதையும் நடையோடு சேர்த்து எழுத முயலவும்..!

    வெல்டன்..கீப் இட் அப்..! கட்டதொர.!

    ReplyDelete
  2. @mani2many

    மாமு !!! டாங்ஸ்சு !!!

    நான் பிராக்கெட் போட்டு எழுதுறதால தான் கொஞ்சம் லெந்தா எழுத முடியுது . அப்புறம் தியேட்டர பத்தி பேசக்கூடாதுன்னு தான் டிஸ்கி போட்டன்ல அப்புறம் என்ன ??

    வாழ்த்துக்கு நன்றி..... :) - உன் சிஷ்யபுள்ள குட்டி

    ReplyDelete