February 19, 2012

மின்சாரம் - மனைவி டூ காதலி

அடுத்த பதிவு என்னா எழுதுறதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப நேத்து சந்துலயும் கேட்டு வைப்போமேன்னு கேட்டன் !! அதுக்கு பெரும்பாலானவர்கள் சொன்ன பதில் “மின்சாரம்”.சரி நாம பதிவுக்கு போகலாம் !!!

இன்னைக்கு தமிழ்நாட்ட உலுக்கிகிட்டு இருக்குற பெரிய பிரச்சனை மின்சாரம் தான் (அப்ப இது சீரியஸ் பதிவா ?? அட அதெல்லாம் இல்லிங்க , ஓப்பனிங் மட்டும் ......)

தினமும் நம்ம தமிழ் மக்கள் காலைல எந்திரிக்கிறது 7 மணிக்கு மேல தானுங்க . ஆனா இந்த கரண்ட் கட்டாட்டி தினமும் 6 மணிக்கே எந்திரிச்சு புடுறாங்க . முக்கியமா பொண்ணுங்க தாங்க ஓவரா இதாட்டி அவஸ்தைபடுறது . பின்ன காலங்காத்தாலையே எந்திரிச்சா வாசல் பெருக்கனும் , கோலம் வேற போடனும்ல அதான் (பொண்ணுங்க எங்கய்யா இப்ப அதெல்லாம் செய்யுறாங்கன்னு நீங்க கேக்குறது புரியுது .....)

இந்த கரண்ட் கட்டாட்டி சில நன்மைகளும் இருக்குது:

1)கரண்ட் சரியா சீரியல் பாக்குற நேரமா பாத்து போகுது . சோ வீட்டுல சீரியல தொல்ல இருக்க மாட்டிங்குது

2)காலங்காத்தால சீக்கிரமா வேலைக்கு போறவங்க , இந்த கரண்ட் கட்டாட்டி தானாவே எந்திரிச்சுடுறாங்க
3)ட்விட்டர்ல மொக்கை போடுறவங்க எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சுருக்கு(ட்விட்டர்வாழ் மகாஜனங்களே !!! நான் என்னியும் சேத்து தான் சொல்லுறன் . சோ நோ டென்சன்)

4)10ம் கிளாஸ் , 12ம் கிளாஸ் படிக்குற புள்ளைங்களாம் இனிமே நான் தெரு விளக்குல தான் உக்காந்து படிச்சேன் , ஸ்டேட் பஸ்ட் வாங்குனன்னு நம்ம வயித்துல ஆசிட் ஊத்த முடியாது

5)தினம் தினம் பொண்டாட்டி மூஞ்ச பாத்து நொந்துபோனவங்க , நெம்ப நிம்மதியா இருக்குறாங்க.

6)வூட்டுல கரண்டு பில்லு ரொம்ப கம்மியா வருது (கரண்டும் ரொம்ப கம்மியா தான் வருதுப்பா)

7)இந்த இடத்துல ஈ.பி.காரங்க பங்சுவாலிட்டிய சொல்லியே தீரனும் . கரெக்டா 6 மணிக்கு போகும்னா 5.59க்கே நிறுத்திடுறாங்க . நம்ம அரசு ஊழியர்களோட கடமையுணர்ச்சி அதிகமாகுது

8)ஐ.டி.கம்பெனி காரங்க ரொம்ப சந்தோசமா இருக்குறாங்க . ஆமாம் கம்பெனிக்கு போனா ஜெனரேட்டர் போடுவாங்கன்னு இப்பலாம் யாரும் ஆபிஸ் போகாம இருக்குறது கிடையாது .

9)யூ.பி.எஸ் தயாரிக்கிரவங்க ரொம்ப ஹேப்பியா இருக்காங்க (வியாபாரம் பிச்சுகிட்டு போறதுலாம் இருக்கட்டும் , அத சார்ஜ் பண்ணுறதுக்கு கூட அவனுங்க கரண்ட விடுறது இல்ல)

10)டிவியில இப்பலாம் சொல்லுறது மெய் , யூவா ?? மீயா ?? போன்ற நிகழ்ச்சிங்களை பாக்காம மக்கள்லாம் மிகுந்த ஆரோக்கியத்தோட இருக்குறாங்க . 

11)இது ரொம்ப முக்கியம் . லவ்வர்ஸ்லாம் ரொம்ப சந்தோசமா இருக்குறாங்க . 
கரண்ட் இல்லன்னு சொல்லிட்டு இவிங்க பண்ணுற அடாவடி தாங்க முடியலப்பா

12)மொபைல் சார்ஜ் நிறைய நேரம் இருக்க மாட்டிங்குது. சோ காசு போட்டுட்டு பேசி தீர்க்க முடியாது

டிஸ்கி : 
இந்த பதிவுக்கு மின்சாரம் - மனைவி டூ காதலின்னு பேரு வைக்க காரணம் : முன்னாடி எல்லாம் சம்சாரம் அது மின்சாரம்னு தான் சொல்லுவாங்க , ஆனா இப்ப காதலி அது மின்சாரம்னு தான் சொல்லுறாங்க . அதுக்கு காரணம் , காதலி மாதிரி எப்ப கரண்ட் வரும் , போவும்னே சொல்ல முடியலப்பா

8 comments:

 1. கலக்கு ராசா...;-)

  ReplyDelete
 2. நீயும் ஏதோ எழுதிருக்க நாங்களும் படிச்சுருக்கோம் அம்புட்டுதான்

  ReplyDelete
 3. //கரண்ட் கட்டாட்டி//

  இம்ம்புட்டு விஷயம் இருக்கா

  ReplyDelete
 4. கரண்ட் கட்டாட்டி //

  அதே தானுங்க :)))

  ReplyDelete
 5. நல்ல காமெடி....நீங்க கண்டிப்பா ரொம்ப ட்வீட் பன்னி இருப்பேங்க போல.

  ReplyDelete