February 23, 2012

தமிழன் என்றொரு இனமுண்டு......

தமிழன் என்றாலே எவரும் மதிக்காத ஒரு நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது இந்த சீர் மிகுந்த உலகில்..........

 கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை சுட்டுகொன்றது இத்தாலி ராணுவம் . இதில் தமிழக மீனவர்கள் , கேரள மீனவர்களும் அடக்கம் . இதனால் நாடே கொந்தளித்தது . கேரளாவாசிகள் கொதித்து எழுந்தனர் , இந்தியாவை சேர்ந்த கேரள மீனவர்களை எப்படி சுட்டு கொல்லலாம் என்று . ஆமாம் கேரளா மட்டுமே இந்தியாவிற்குள் இருக்கிறது . தமிழகம் என்பதை இந்தியாவை விட்டு விலக்கி வைத்து பல வருடங்களாகின்றன் . கேரளா கொதித்ததை தொடர்ந்து நமது அண்டை நாடான இந்தியாவை சேர்ந்த அரசு கைது செய்தது . அப்பொழுது தமிழக மீனவர்களின் குடும்பங்களில் நிலை ?? தமிழகம் இப்பொழுது இந்தியாவின் கீழ் இருக்கும் ஒரு தீவே . யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் , மிதிக்கலாம் , கேட்க யாரும் கிடையாது . ஆனால் இன்னும் தமிழ்நாடு இந்தியாவிற்குள் தான் இருக்கிறது என பலர் சொல்வது விந்தையாய் இருக்கிறது . தன் தேசத்திற்குள் இருக்கும் ஒரு அப்பாவி மீனவனை கொன்றால் அந்த நாடு பார்த்து கொண்டு சும்மா இருக்குமா ?? ஆனால் இந்த பாரத திருநாடு இருக்கும் . இது ஒரு முன்மாதிரி தேசம் என்பதை மற்ற நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும் .

இது ஒரு சின்ன விஷயம் என்று சொல்லும் அறிஞர்களே , பல வருடங்களாக தொடரும் இலங்கை பிரச்சனை உங்கள் கண்களுக்கு தெரியாதா ?? மீனவர்கள் தினம் தங்கள் பிழைப்பை சாவிலேயே நடத்தி கொண்டு இருப்பது எவர் கண்ணுக்கும் தெரியாமல் போனது ஒரு விசித்திரம் . ஒரு பெண்ணின் சுயநலத்தால் ஒரு மாநிலமே இன்று கண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது . ஆனால் அந்த பெண்ணோ இன்னும் தமிழகம் என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டாரா ? அவருக்கு தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் தேவை . ஆனால் அந்த எம்.பி.க்களை உருவாக்கிய மக்கள் தேவை இல்லை . மேலும் இத்தாலி விஷயத்தில் நடந்த கொடுமை தமிழகத்தை சேர்ந்த மத்திய கப்பல்துறை அமைச்சரே தமிழகத்தை பற்றி வாய் திறவாதது தான் . சோனியா தமிழகத்தை சேர்ந்த மக்களை மட்டும் மறந்தாரா அல்லது தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்களை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்தாரோ தெரியாது . தமிழக ஆட்சியில் இருப்பவர்களும் மீனவர் என்று ஒரு இனம் இருப்பதை மறந்து விட்டதையே இந்த நிலை சுட்டி காட்டுகிறது .

தமிழக மீனவன் செய்த பாவம் முதலில் மீனவனாய் பிறந்தது , அதனினும் கொடிது தமிழினத்தில் பிறந்தது . வேறு எந்த நாட்டை சேர்ந்த மீனவனையும் இப்படி மாற்றாந்தாய் போக்குடன் நடத்தி பார்த்ததுண்டா ??? ஒரு மனிதனை கொன்றதற்கு ஒரு இனம் ஏற்கனவே அழித்து விட்டார்கள் . இப்போது மிஞ்சியிருப்பது தமிழன் என்று மார்தட்டி கொள்ளும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் . அவர்களையும் முற்றிலும் அழித்து விட்டால் இந்தியாவின் பெயர் உலக சரித்திரத்தில் எழுதப்படும் , பொன்னால் அல்ல , ரத்தத்தால் . அந்த பெருமையை சீக்கிரமே நிறைவேற்றும் நோக்குடன் இருக்கிறது மத்திய அரசு . தூங்கும் போது கால் ஆட்டவில்லையென்றால் பிணம் என்று நினைக்கும் இவ்வுலகிலே நடந்தால் கூட பிணம் என்று நினைப்பது இந்தியாவில் மட்டுமே நிகழும் கொடூரம் . இந்நிலை தொடருமேயானால் இவ்வுலகம் தமிழக மீனவனை அருங்காட்சியகத்தில் மட்டுமே பார்க்க நேரிடும் .

தமிழன் என்றொரு இனம் உண்டு . மானம் , வெட்கம் அதற்கு இல்லை என்று இப்பொழுதே எழுத ஆரம்பித்து விட்டார்கள் . கூடிய விரைவில் அது உலகத்திலேயே இல்லை என்று கூட எழுதுவார்கள் . அப்பொழுதும் நாம் பல்லிளித்து கொண்டே இருப்போம் .

நேற்று சிங்களவன் அடித்தான் , இன்று இத்தாலிகாரன் அடிக்கிறான் , நாளை ??? யாரும் அடிக்க மாட்டார்கள் , நாம் இதை போல் இருப்போமேயானால் நாளை நம்மை இருக்க விட மாட்டார்கள் . இருந்தால் தானே அடிப்பதற்கு ??

இன்னமும் இந்த மானம்கெட்ட நிலை தேவையா தமிழா ?? உன் மானத்தையும் , வீரத்தையும் காட்டிடும் நேரம் வெகு தூரத்தில் இல்லை . அதற்கு பிறகும் பயணமும் இல்லை .

7 comments:

  1. sorry...சொல்வதற்கு எதுவுமில்லை தமிழனின் பிரச்னை பேசப்படவேண்டியது.ஆனால் ஒவ்வொருமுறையும் அதோடு இலங்கைப் பிரச்னையையும் பேசி நீர்த்துப் போகச் செய்துவிடுவதில் உங்களைப் போல தமிழ்தேசிய (என்றழைக்கப்படுகிற) ஆட்கள் சொதப்பிவிடுகிறார்கள். இலங்கைப்பிரச்னைக்கு காரணம் பிரபாகரன். அதை வசதியாக மறைத்து மறைத்து பேச பேச மக்கள் அதை நினைவுபடுத்தி ஒதுக்குகிறார்கள்

    ReplyDelete
  2. @Anonymous

    நான் தமிழ்தேசிய ஆள் என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. இலங்கை பிரச்சனையை நான் பேசவில்லை , இந்த தமிழகத்தில் பிறந்தவனின் பிரச்சனையை தான் பேசுயுள்ளேன்

    ReplyDelete
  3. சாகசன் டைட்டில் லே அவுட் டிசைன் செம..

    எழுதப்பட்ட டாபிக் சீரியஸ் மேட்டர்.. வெல் ட்ரை

    பொதுவா சின்ன சின்ன பேராவா எழுதுங்க, படிக்க ஈசியா இருக்கும்..

    ReplyDelete
  4. @சி.பி.செந்தில்குமார்

    நன்றி தல . நான் இப்ப தான் முதல் முதல்ல சீரியஸ் டாபிக் எழுதுறேன் . அதான் இந்த தடுமாற்றம்.

    டைட்டில் லேஅவுட் MS-Paintல தான் எழுதுனன் !! வேணும்னா சொல்லுங்க அனுப்பி விடுறேன்....

    ReplyDelete
  5. அருமையான கட்டுரை! இதனை தமிழகத்தில் வாழும் உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும்! இந்திய அரசினால் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்ற உணர்வு ஒரு சிறு பொறியாகத் தொடங்கி காட்டுத் தீயாகத் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்! இதில் தமிழகம் முழுவதும் பற்றி எரிய வேண்டும்! இதன் மூலம் தமிழகத்தை தமிழர்கள் ஆளும் நிலை முதலில் உருவாக வேண்டும்!

    ReplyDelete
  6. அந்த என்ஜினியர் பையன் காலேஜில் அட்மிசன் வாங்கிகொடுக்கும் புரோக்கராம்.வடநாட்டு பசங்ககிட்ட கலக்சன் பண்ண பணமாகூட இருந்திருக்கலாம்.அவசரப்பட்டுட்டான்களே போலிசு

    ReplyDelete
  7. It works in Windows Inter net Explorer. but no Tamil. It is a problem for me. I had this problem with Minimeens Blog. He corrected it in Google. He may help you Best Wishes

    ReplyDelete