பஸ்கி : ஏய்ய்ய்ய்ய் !!! யாருடா அது விமர்சனம்னு நெனச்சுக்கிட்டு உள்ளார வர்றது ???
அப்படி நெனச்சுகிட்டு வர்றவங்க எல்லாம் அப்படியே டூ ஸ்டெப்ஸ் பேக் போயிக்கோ , மீதி எல்லாரும் மட்டும் உள்ளார வா !!!
நம்ம இப்ப காதல்ல எப்படி எப்படி எல்லாம் சொதப்புறதுன்னு பாப்போம் அதுக்கு முன்னாடி இந்த பதிவு எழுத காரணம் ........
நம்ம பசங்க பல பேரு லவ்வு பண்ண பிகர் கிடைக்காம அல்லாடுறாங்க , அப்படியும் சில பேரு ஒரு பிகர புடிச்சுக்கிட்டு அவஸ்தபடுறாங்க . அவங்க எப்படி அந்த பிகர கழட்டி விடுறதுன்னு தான் இந்த பதிவு (ரொம்ப நல்ல எண்ணம்டா)
முதல்ல நம்ம பிரண்டுங்க :
இந்த காதலுக்கு உதவுறதே நம்ம பிரண்டுங்க தாங்க . நம்ம காதல நம்ம லவ்வர்கிட்ட நாம சொல்லுறோமோ இல்லையோ , நம்ம பிரண்டுங்க கண்டிப்பா அவிங்ககிட்ட சொல்லிடுவாங்க . அப்படி பட்டவங்கள விட்டுறுங்க , இந்த பொண்ணே கிடைக்காத பிரண்டுங்ககிட்ட போய் எனக்கு அந்த பொண்ண புடிக்கலன்னு சொல்லி பாருங்க . அப்புறம் உங்க மேட்டர் நம்ம வீரபாகு பேக்கரி மாதிரி ஒபாமா வரைக்கும் தெரிஞ்சா கூட ஆச்சரியம் இல்லைங்க (இந்த விசயத்துல மட்டும் பசங்க வில்லாதி வில்லனுங்க)
அடுத்தது நம்மள பெத்தவங்க :
உங்க பெத்தவங்ககிட்ட போய் அம்மா , அப்பா நான் ஒரு பொண்ண லவ்வு பண்ணுறன்னு மட்டும் சொல்லுங்க . ஒடனே உங்க பெத்தவங்க காசு வெட்டி போட்டாச்சும் உங்க லவ்வ அத்து விட்டுறுவாங்க (இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க . உங்க பேரண்ட்ஸ் பசங்க படத்துல வர்ற மாதிரி நல்லவங்களா இருந்துட்டாங்கன்னா உங்க பாடு ஞேஞேஞேஞே தான்)
அடுத்தது பொண்ணோட அண்ணன் :
உடம்ப அர்னால்டு மாதிரி ஏத்தி வச்சுருக்கவங்க , எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோம்னு சொல்லுற தாராள மனசு படைச்சவங்க , இந்த ஐடியாவ செயல்படுத்தவும் . நேரா பொண்ணோட அண்ணன்கிட்ட போய் , குறிப்பா அவரு பிரெண்ட்ஸ் கூட இருக்கறப்ப போய் நான் உன் தங்கச்சிய லவ் பண்ணுறண்டான்னு சொல்லிபாருங்க , உங்க லவ்வு கிழிஞ்சிரும் . மே பி உங்க கன்னமும் கிழியலாம் , ஏன் நீங்களே கூட கிழியலாம் .. ஆனா லவ்வு கண்பார்மா அத்துக்கும் (இதுலயும் ஒரு பிரச்சன இருக்குது , உங்க ஆளுக்கு அண்ணன் இல்லன்னா உங்க பாடு திண்டாட்டம் தான்)
அடுத்தது அந்த பொண்ணோட பிரண்டு :
நம்ம பசங்க எல்லாம் கண்டிப்பா அவங்க ஆளோட பேசுறாங்களோ இல்லையோ , அந்த பொண்ணோட பிரண்ட காக்கா புடிச்சு வச்சுருப்பாங்க ரெண்டு பேத்துக்கும் நடுவுல மெசெஞ்சரா . அந்த புள்ளகிட்ட போய் உன் பிரண்ட லவ் பண்ணுறன்னு எல்லாம் சொல்ல வேணாம் , நீ அழகா இருக்கன்னு சொன்னாலே போதும் . அந்த பொண்ணு வெக்கபட்டுகிட்டே போய் அது பிரண்டு , அதாங்க உங்க லவ்வருக்கிட்ட சொல்லும் . அப்ப இருக்குது பாருங்க தீபாவளி , அந்த புள்ள உங்கள பிரியுதோ இல்லையோ , உங்கள நார் நாரா கிழிச்சுரும் . அப்புறம் அத காரணம் காட்டி நீங்க உங்க லவ்வ அத்துக்கலாம். (உங்க ஆளு கொஞ்சம் ஜாலி டைப்பா இருந்தா நான் பொறுப்பு இல்ல)
அடுத்தது அந்த பொண்ண பெத்தவங்க :
மேல உள்ளதும் சரிபட்டு வராதவங்க ஸ்ட்ரைட்டா போய் அந்த பொண்ண பெத்தவங்ககிட்டயே சொல்லிடுங்க . உங்க லவ்வு அத்துகிதோ இல்லையோ அந்த பொண்ணுக்கு அடுத்த மாசத்துல கல்யாணம் கண்டிப்பா ஆயிடும் . (உங்க பெத்தவங்க மாதிரி அவங்க அப்பா அம்மாவும் நல்லவங்களா இருந்தா ??? உனக்கு சங்கு தாண்டி)
தி லாஸ்ட் அண்டு பைனல் :
இம்புட்டு செஞ்சும் ஆவலயா ?? ரைட்டு நேரா போய் அந்த பொண்ணுக்கிட்டயே போய் உன் தங்கச்சி சூப்பரா இருக்குறான்னு சொல்லுங்க . தங்கச்சி இல்லன்னா பரவால்ல , இந்த டயலாக்க மட்டும் சொல்லி பாருங்க , ஒடனே அந்த பொண்ணு உங்கள செப்பலாட்டி அடிச்சு இனிமே வாழ்க்கைல நீங்க லவ்வே பண்ண கூடாதுன்னு சாபம் வுட்டுட்டு போய்டும் . அந்த டயலாக்கு
அந்த பொண்ணோட கால்ல விழுந்து ”அம்மா தாயே என்னைய விட்டுடுமா”
(அப்படி சொல்லியும் அந்த பொண்ணு உங்கள தான் லவ்வு பண்ணுவன்னு ஒத்த கால்ல நின்னா கம்பெனி பொறுப்பில்ல)
(என்னாங்க மேல உள்ள டயலாக் தெரியலயா ??? அந்த லைன மட்டும் செலெக்ட் பண்ணுங்க தெரியும் . இந்த மானங்கெட்ட ஐடியாவ அப்படி தான் வைக்கோனும்)
டிஸ்கி : கடைசியா அந்த பொண்ணு உங்க லவ்வ புட்டுகிட்டு போனா மறக்காம அந்த பொண்ணோட நம்பர எனக்கு அனுப்பி வச்சுடுங்க ......
இப்படிக்கு ,
லவ்வு பண்ண பொண்ணு கிடைக்கதோர் சங்கம்
முதல் சொதப்பல் ஹி ஹி
ReplyDelete>>கடைசியா அந்த பொண்ணு உங்க லவ்வ புட்டுகிட்டு போனா மறக்காம அந்த பொண்ணோட நம்பர எனக்கு அனுப்பி வச்சுடுங்க ...
ReplyDeleteஐடியா நல்லாருக்கு, எக்ஸேஞ்ச் ஆஃபர் வரவேற்கப்படுகிரது
ஐடியா நல்லாருக்கு, எக்ஸேஞ்ச் ஆஃபர் வரவேற்கப்படுகிரது //
ReplyDeleteஉங்க வூட்டுகாரம்மாவுக்கு இந்த கமெண்ட் அனுப்பிவைக்கப்படும் !!!
ரணகளம் :D
ReplyDeleteஅட்டகாச சொதப்பல். . . வான்ட் மோர் எமோசன். :)
ReplyDelete@Santhosh
ReplyDeleteநன்றி !!! :))
@jeganjeeva
வான்ட் மோர் எமோசன். :) //
கண்டிப்பா பண்ணுவோம் !! :))
nichchayaamaa puttukkaathu.. neengka muthalla no kotungka boss.. pulambal solluthu puttukittathai..
ReplyDeleteஅசிங்கப்பட்டார் நம்பர் ஒன்...
ReplyDelete@மதுரை சரவணன்
ReplyDeletenichchayaamaa puttukkaathu.. neengka muthalla no kotungka boss.. pulambal solluthu puttukittathai.. //
யாருப்பா அது இந்த கமெண்ட போட்டது ???
@Philosophy Prabhakaran
அவரு எனக்கு கெடாவெட்டு நடத்தோனம்னு முடிவு பண்ணிட்டீங்களொ ???
கமெண்டியதற்கு நன்றி !!! :)))
Good comedy:)) @shanthhi
ReplyDeleteஇதெல்லான் அஞ்சாரு பொண்ணு கரெக்ட் பண்ணிட்டு எத கழட்டி விடுறதுன்னு தெரியாம இருக்கான் பாரு அவனுக்கு தான் சரியா வரும் ஒண்ணே ஒண்ணு கூட கிடைக்காம சிங்கமா (எத்தன நாள் தான் நாய்ன்னே சொல்றது) அலையுற என்ன மாதிரி ஆளுக்கெல்லாம் ம்ம்ஹிம்
ReplyDeleteமச்சி உன் ஆளு நம்பர எனக்கு குடு நான் போய் அவகிட்ட உன்ன லவ்வு பண்ண வேணாமுன்னு சொல்லுறேன்..கலக்கல் பதிவு மச்சி கீப் இட் அப்
ReplyDeleteஇப்பல்லாம் இவ்ளோ மெனக்கெட அவசியமில்ல.2 மாசத்துல பையன் போர் அடிச்சு காரணமே இல்லாம பொண்ணுகளே கழட்டி விட்டுடறாங்க. Game Over :-))
ReplyDelete@இளஞ்சிங்கம் நவீன்
ReplyDeleteஅதுக்கு தானுங்க அந்த பொண்ணு நம்பர கடைசியா எனக்கு அனுப்ப சொன்னன்
@கண்ணீரின் காதலன்
அய் !!! இந்த டகால்டி வேல தான வேணாங்கிறது .....
@புத்தகப்புழு
அப்படி ஆவாதவங்களுக்கு தாங்க இந்த பதிவு (ரொம்ப எக்ஸ்பிரியன்சோ ???)
//ஐடியா நல்லாருக்கு, எக்ஸேஞ்ச் ஆஃபர் வரவேற்கப்படுகிரது //
ReplyDeleteஉங்க வூட்டுகாரம்மாவுக்கு இந்த கமெண்ட் அனுப்பிவைக்கப்படும் !!!//
சீக்கிரம் அனுப்புங்க. பூரிக்கட்டையால சிபி அடி வாங்குறதை பாக்கணும்.
எப்படி சொல்றது.. எப்போ சொல்றதுன்னு..அல்லாடிட்டு இருந்தேன்..தேங்க்ஸ் தலைவா..
ReplyDeleteடேய் நீ இந்த ப்ளாக் எழுதுற மேட்டர் உங்க வீட்டுக்கு தெரியுமா??? இல்லைன்ன அவங்ககிட்டயும் சொல்லி படிக்க சொல்லு....
ReplyDeleteபதிவு செம கலக்கல் மச்சிஸ் ... நம்பர் நிறைய வந்தா நமக்கும் ரெண்டு கொடுங்க. ஓட்டிப் பாத்துட்டு ஐடியா பாலோ பண்ணி கழட்டிவிடுவோம்.
ReplyDeleteஇன்னும் நிறைய எதிர்ப்பாக்குறோம் சீக்கிரமே.
/////
ReplyDelete//ஐடியா நல்லாருக்கு, எக்ஸேஞ்ச் ஆஃபர் வரவேற்கப்படுகிரது //
உங்க வூட்டுகாரம்மாவுக்கு இந்த கமெண்ட் அனுப்பிவைக்கப்படும் !!!//
சீக்கிரம் அனுப்புங்க. பூரிக்கட்டையால சிபி அடி வாங்குறதை பாக்கணும். //////
அவரு அதிலும் ஒரு பதிவு போட்டுருவாரு ... தலைப்பு “என் பூரிக்கட்டை அனுபவங்கள்” ... ஹி
கடைசியா அந்த பொண்ணு கிட்ட உங்க லவ்வை சொல்லுங்க. கண்டிப்பா காதல் சொதப்பிடும்...
ReplyDelete@! சிவகுமார் !
ReplyDeleteதலைவா !! உங்கள் ஆசை நிறைவேற்றி வைக்கபடும் !!
@ஹாலிவுட்ரசிகன்
அது என்னாது மச்சிஸ் ??? யெப்பா நம்புங்கையா , எக்சைல் விமர்சனம் தவிர மீதி எல்லாம் நான் தான் எழுதுனன் !!!
@ராஜ்
காதல்ல சொதப்புறது எப்படின்னு சொல்லுற எனக்கு தெரியாதாக்கும் பொண்ண எப்படி அத்து விடுறதுன்னு
@maalavan
நீ பேசுறத பாத்தா ஒரு பொண்ணுகிட்ட மாட்டிகிட்டு அவஸ்தபடுறது தெரியுதுப்பா !!!