April 27, 2012

விக்கிகள்.....

நான் பள்ளியில் சேர்ந்த நாள் முதலே , பாலர் வகுப்பு தொட்டு இன்று வரை பல விக்கிகள் என்னுடன் பயணித்திருக்கிறார்கள் . விக்கி என்பது பெரும்பாலும் விக்னேஷ் , விவேக் போன்ற பெயர்களின் சுருக்கமே . நான் இது வரை எத்தனை விக்னேஷ் , விவேக்கை ஞாபகம் வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லை ஆனால் விக்கிகளை மட்டும் ஞாபகம் வைத்திருக்கிறேன் . பலருடன் நட்பும் , சிலருடன் சண்டைகளும் . ஆறாம் வகுப்பின் தொடக்கம் தான் விக்கிகளுக்கு உரிய முக்கியதுவத்தை உணர வைத்தது . என் வகுப்பில் பல விக்கிகள் உண்டு . அதனால் அனைவரையும் இன்ஷியல் வைத்தே அழைப்போம் . அன்றிலிருந்து இன்று வரை நான் விக்கிகளை கடக்காமல் எந்த ஒரு வகுப்பையும் கடந்ததில்லை . என் அகராதியில் விக்கி என்றாலே அமைதி என்று இருக்கிறது . அதற்கு காரணம் நான் இதுவரை கடந்து வந்தவர்கள் சண்டை போட்டு நான் பார்த்ததில்லை . நான் மட்டுமல்ல வகுப்பில் எவருமே பார்த்ததில்லை .

 ஆனால் அந்த மரபை உடைக்க பிறந்தவன் போல் அறிமுகமானான் 10ஆம் வகுப்பில் ஒரு விக்கி . வகுப்பு தலைவன் அவனே . அவனுடன் நான் சண்டை போடாத நாளும் நட்பு பாராட்டாத நாளும் கிடையாது . வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் என்று ஒரு கோஷ்டி இருந்தால் அதில் அவனும் இருப்பான் , நானும் இருப்பேன் . நான் அவனை ஓரிரு பாடங்களில் முந்தினாலும் கடைசியில் அவனே முதலிடம் வகிப்பான் . அந்த முதலிடமே அவனுக்கும் எனக்கும் சண்டை வர ஒரு காரணமாயிருந்தது . அதே போல் வகுப்பு தலைவன் என்ற முறையில் அவன் செய்யும் அடாவடிக்கும் எல்லைகள் கிடையாது . 10ஆம் வகுப்பு முடிந்ததும் அவன் வேறு பள்ளிக்கு மாற்றபட்டான் . எங்கள் தொடர்பும் விட்டுபோனது .

 மறுபடியும் அவனை அண்ணா பல்கலைகழகம் கவுன்சிலிங் விண்ணப்பம் வாங்க போன போது பார்த்தேன் . அப்பொழுது அவனிடம் இருந்த அடாவடி மறைந்து அமைதியானவனாக காட்சியளித்து என் அகராதியின் அர்த்தம் மாறாமல் காப்பாற்றினான் . இப்பொழுது கல்லூரியிலும் ஒரு விக்கி வந்து சேர்ந்து அந்த பெயர் மறையாமல் இருக்க உதவி கொண்டிருக்கிறான் .

1 comment:

  1. இவ்ளோ விவரமா விக்கின உனக்கு விக்கி பீடியா சார்பா விக்கிமேனியா அவார்ட, விக்கலோட பரிந்துரை செய்யுறேன் # குட்டி புடுங்கல் தாங்கமல் கமெண்டும் விக்கிக்கிட்டே கட்டதொர. :))

    ReplyDelete