May 15, 2012

பெண்கள் ட்விட்டப்பில் நடந்த சதி வேலைகள்.....

பஸ்கி
இந்த பதிவு கற்பனை என்று தெரிவித்துக்கொள்கிறேன் (அப்படி சொல்லலைனா என்னிய போட்டு கும்மிடுவாங்க)

ட்விட்டப் ஒரு அறிமுகம் :

ட்விட்டப் என்பது ட்விட்டரில் முகம் தெரியாமல் பழகும் நண்பர்கள் ஒரு பொதுவான இடத்தில் கூடுவது . ஆண்கள் ட்விட்டப் போடுவது எப்பொழுதும் வழ்க்கமான ஒன்று . பெண்கள் ட்விட்டப் எப்பொழுதாவது நடக்கும் ஒரு விபரீதம் . சென்னையில் இன்று நடந்த ட்விட்டப் , வெளிவராத உண்மைகள்

கேரக்டர்ஸ் அறிமுகம் :

அதெல்லாம் வேண்டாங்க , அப்புறம் என்னிய கொத்து பரோட்டா போட்டுருவாங்க (ரியலி பேட் கேர்ள்ஸ்) . ஒரு ரகசியம் , ட்விட்டப்ல கலந்துக்குற எல்லா பொண்ணுங்களுமே 50+ தான் , ஆனா எங்களுக்கு இன்னும் 20 கூட ஆவலன்னு பீலா விடுவாங்க . (மொத்தம் 5 பேரு)

சம்பவம் :

காலை 10 மணி :
ட்விட்டப்புக்கு ஏற்பாடு செய்தவர் மட்டும் பீச்சில் தனியாக நிற்கிறார்.(இவருக்கு 58) மைண்ட் வாய்சில் (என்ன இந்த பொண்ணுங்க யாரையும் காணும் ?? 9.30 மணிக்கே வரன்னு சொன்னாங்க ?? இவங்க வருவாங்கன்னு நான் வேற காலைல 12 இட்லி தான் சாப்புட்டன் , கையில் வெறும்(ஞேஞேஞே) 500ரூ தான் இருக்கு).

அப்போது தூரத்தில் ஒரு பெண்(52) வருகிறார் . இருவரும் இதற்கு முன் பார்த்ததில்லை . ஆனால் கோட் வேர்ட்ஸ் போன்ல சொல்லிருந்தாங்க (ஆமாம் இவிங்க பெரிய அமெரிக்க உளவாளி , கோட் வேர்டு யூஸ் பண்ணுறாங்க) . அவர் பொத்தாம்பொதுவாக வந்து பாபா பிளாக் ஷீப் என்று சொல்கிறார் . உடனே புரிந்து கொண்ட முதல் பெண் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்று சொல்கிறார் (கோட் வேர்ட்ஸ்ச பாரு , வூட்டுல பேரப்புள்ளைங்களுக்கு சொல்லி குடுத்து பழக்கம் போல) . பின் ஒவ்வொரு பெண்ணாக வருகிறார்கள் (எல்லாருமே ஒரு இத்து போன ரைம்ஸ தான் சொல்லுறாங்க . அத வேற சொல்லனுமாக்கும்).

காலை 10.30 மணி :
எல்லா பெண்களும் அங்குள்ள படகு நோக்கி நடக்கின்றனர் . படகு அருகில் அனைவரும் அமர்ந்து விட்டு தங்கள் வெட்டிக்கதைகளை ஆரம்பிக்கிறார்கள் .

பெண் 1 : (அனைவரையும் நோக்கி) எல்லாரும் காசு எடுத்துட்டு வந்தீங்களாடி ?? முதல்ல போய் சாப்புடுவோம்

அனைவரும் : (கோரசாக) ஆமாம்கா முதல்ல போய் சாப்புடுவோம் (அப்ப எல்லாம் பேசறதுக்கு வரல , சாப்புட தான் வந்துருக்கீங்க)

காலை 10.30 - 11.30 : எல்லோரும் தள்ளுவண்டியில் சாப்பிட்டு சாரி கடையை முடித்து விட்டு திருப்பி பழைய இடத்தில் கூடுகிறார்கள் .
(இனிமே யார் யார் பேசுனாங்கன்னு எல்லாம் டேக் போட முடியாது , பிகாஸ் நெம்ப கஷ்டம்) .

அக்கா , நீங்க உங்க சின்ன வயசு போட்டோ அப்லோடு பண்ணோன நானும் நீங்க சின்ன பொண்ணோன்னு நினைச்சுட்டன் . இங்க வந்து பாத்தா 60 வயசுன்னு சொல்லுறீங்க ??

நான் எப்படி அது என்னோட போட்டோன்னு சொன்னன் ? அது என்னோட பேத்தி போட்டோ . நம்ம போட்டோலாம் போட்டா ஒரு கழுதையாவது பாலோ பண்ணுமா ??(ஒலக உண்மைடா சாமி)

ஆமாம் அதுவும் சரி தான் . நானும் என்னோட பொண்ணு போட்டோ தான் அப்லோடு பண்ணிருக்கன் .(உன் பொண்ணுக்கு இது தெரியுமா)

அட நீங்கள்லாம் இப்படின்னா நான் பக்கத்து வீட்டுல காலேஜ் போற பொண்ணோட போட்டோல அப்லோடு பண்ணிருக்கன் ?(அடங்கொன்னியா)

அட ஆமாம்கா நாமலாம் நம்ம போட்டோ அப்லோடு பண்ணலன்னு இந்த பசங்களுக்குலாம் தெரியாது . அது தெரியாமயே கடல போட்டுக்கிட்டு இருக்கானுங்க . (பசங்க என்னைக்குமே நல்லவங்க தான்)

அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்டி இந்த பசங்க தொல்லை தாங்கல . எப்ப பாரு கிண்டல் பண்ணிகிட்டே இருக்காங்க . யாருக்கிட்டடி டெயில்கேர்ள்(இங்கிலிபீசுல சொல்றாங்களாம்) ஐடி இருக்குது

என்கிட்ட தான் இருக்குதுக்கா(ஆமாம் தாஜ்மகால எழுதி வச்சுருக்காங்க)

நீ மட்டும் வச்சுக்கிட்டு என்ன பண்ணுவ ?? தினம் எல்லாருக்கும் அனுப்பி விடு . அப்ப தான் பசங்க மத்தியில ஒரு பயம் வரும். (ரொம்ப நல்ல எண்ணம்)

அக்கா அது எப்படிக்கா சொல்லுறீங்க
ந்து பண்ணுனா பசங்க பயப்புடுவாங்கன்னு ??(அப்படியே தெரியாத மாதிரியே கேக்குறது)

உனக்கு விஷயமே தெரியாதாடி ??அந்த ஐடிலேந்து தான் நாங்க பசங்கள கண்டமேனிக்கு திட்டுவோம் . அதுல பயந்துகிட்டு
, அந்த ஐடிலேடு பல பசங்க எந்த பொண்ணுக்கிட்டயும் பேச மாட்டாங்க . (நாங்க பயந்தோம் ??)

ஓ , அப்படியாக்கா விசயம் ?? இது தெரியாம போச்சே இத்தன நாளா .... எனக்கும் அனுப்பி விடுங்க . நானும் கொஞ்ச நாள் திட்டுறன் , புருசனையே எத்தன நாள் தான் திட்டுறது ??(நைஸ்ல)

ஆமாண்டி நீ சொல்லுறதும் சரி தான் ஒரு ஆளையே எத்தன நாள் தான் திட்டுறது ? (அப்ப நீங்கள்லாம் புருசன அடிக்க மாட்டீங்க)

சரி அடுத்த டாபிக்குக்கு போவோம்டி , நீ கட்டிருக்குற சேலை சூப்பரு . எங்க வாங்குன ??

என்னைய போய் நீ இப்படி தப்பா நெனச்சுட்டியே ?? பக்கத்து வீட்டு கொடில இருந்துச்சு , சுட்டுட்டன்

என்னைய மாதிரியே நீயும் மானங்கெட்டவளா இருக்கடி

ஆமாம் உன் புள்ளைக்கு கல்யாணம் பேசுறன்னு சொன்னியே என்னாச்சு ??

அது சும்மா சொன்னன்கா , எனக்கு ஒரு பேர புள்ளையே இருக்கு .

இவிங்க விட்டா வளவளா கொழகொழான்னு பேசிக்கிட்டே இருப்பாங்க .நம்ம அடுத்த பதிவுல மீட் பண்ணுவோம்

டிஸ்கி
நீங்க கேக்குறது புரியுது , ட்விட்டப்ல என்ன சதிவேலை நடந்துச்சுன்னு , அப்படி ஏதாச்சும் நடக்கும்னு தான் போனன் . ஆனா இவிங்க இப்படி பேச ஆரம்பிச்சோன துண்ட காணும் , துணிய காணும்னு ஓடி வந்துட்டன் .

No comments:

Post a Comment