”ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது” . காலம் காலமாக தமிழர் இடையே புழக்கத்தில் இருக்கும் பழமொழி இது . பல முறைகள் இது நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது . இப்பொழுது புதிதாக இதை நிரூபிக்க வந்தவர் தான் அந்த பிரபலம் .
அந்த பிரபலம் படித்திருப்பதோ மன உளவியல்(சைக்காலஜி) . ஆனால் அந்த படிப்புக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போலவே பொதுவெளியில் நடந்து கொண்டிருக்கிறார் . மனஉளவியலில் கண்டிப்பாக எப்படி பொறுமையாக நடப்பது என்று சொல்லி கொடுத்திருப்பார்கள் . ஆனால் இவரை பார்த்தால் மனப்பாடம் செய்து தான் தேர்ச்சி பெற்றிருப்பார் போல தோன்றுகிறது . மேலும் தன்னை யாராவது எதிர்த்தால் அவரை தவறு என்று நிரூபிக்கும் வரையில் ஓய மாட்டார் . அவர் செய்தது சரியாகவே இருக்கும் பட்சத்தில் அவரின் மேல் பொய்யாகவாவது ஒரு குற்றசாட்டை பதியாமல் ஓயாது அவர்தம் கோபம் . இவ்வாறு அவர் செய்யும் போது தான் அவர் படித்தாரா அல்லது அங்கு சிகிச்சை பெற்றாரா என்ற எண்ணம் மேலோங்குகிறது . இவ்வளவுக்கு அவர் தன்னிடம் வம்பிழுத்த ஒருவரை மட்டும் குற்றம் சாட்டாமல் ஒட்டுமொத்த ஆண்கள் இனத்தையே குற்றம் சாட்டுகிறார் . பதிலுக்கு நாங்கள் இவர் செய்யும் குற்றத்துக்கு ஒட்டுமொத்த பெண்கள் இனத்தையும் குற்றம் கூறினால் யாரேனும் வாயை மூடிக்கொண்டு இருப்பார்களா ? ஆண்கள் இனத்தை குறை கூறுவது மட்டுமில்லாமல் தன்னை பற்றி கருத்து கூறுபவர் தன்னை இழிவுபடுத்தி விட்டதாக தனக்கு தானே கற்பனை செய்துகொண்டு அவர் சிறுவயதில் ஏதோ ஒரு சம்பவத்தால் பாதிக்கபட்டுள்ளார் என்றும் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறதோ ? இதெல்லாம் போதாது என்று ஒரு பத்திரிக்கையில் பெண்கள் தினத்திற்கு பேட்டி காணும் போது சமூக வலைத்தளங்களில் பெண்களை கிண்டல் செய்வது தான் ஆண்களின் பணியாக இருக்கிறது என்று வேறு கருத்து கூறியிருக்கிறார் . அவரிடம் இவ்விடத்தில் கேட்க விரும்புவது ஒரு கேள்வியே . “தாங்கள் மட்டும் தான் இணையத்தில் உலவும் ஒரே பெண் என்று முடிவு எடுத்து விட்டீர்களோ ? ”
சமூகவலை ஊடகம் என்பது தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பகிர்வதறகாகவும் , புது நண்பர்களை உருவாக்கவும் தான் கண்டறியப்பட்டது . அங்கு ஒவ்வொருவருக்கும்ம் தங்களது கருத்துகளை பதிய உரிமை இருக்கிறது . அவரை பற்றி கருத்து வரும் போது ஆட்சேபித்தால் பரவாயில்லை . பொத்தாம் பொதுவாக யாரை பற்றி கருத்து சொன்னாலும் அதை கண்டிப்பது எவ்வகையில் நியாயமோ ? மேலும் அவர் தன்னை கிண்டல் செய்பவரை தான் மட்டுமே கண்டிப்பதில்லை . ஒரு 5 வயது சிறுமி போல் எதற்கெடுத்தாலும் தன் அம்மா முந்தானையை பிடித்து கொண்டு அலைகிறார் . இதற்கு அவர் அம்மாவும் ஒத்துகொண்டு தட்டிகேட்பது இந்நூற்றாண்டின் மிகபெரிய வினோதம் . மேலும் தன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்து இவர் சாபம் வேறு விடுகிறார் . இந்த நகைச்சுவைக்கு எல்லாம் உச்சகட்டமாக நடந்த கூத்து தான் சைபர்கிரைமில் புகார் அளித்தது . இவருக்கு ஆதரவு தெரிவிக்கவென்றே சிலர் ஒரு ட்விட்டர் கணக்கு வைத்து கொண்டு அலைகின்றனர் . இதனால் நமக்கு புரிவது ஒன்றே ஒன்று தான் . அந்த பிரபலம் இணையம் தனக்கு மட்டுமே சொந்தம் , தனக்கு மட்டுமே உபயோகபடுத்த தெரியும் என்ற மனநோயில் இருக்கிறார். அவர் மனநோயில் இருந்து விடுபட நாம் பிரார்த்திப்போமாக......
பின்குறிப்பு :
நான் இங்கு யார் பெயரையும் குறிப்பிடவில்லை . எனவே இதை சைபர்கிரைமுக்கு கொண்டு சென்றால் செல்லாது.
விடுறா மாப்ள செத்த பாம்ப போய் நொச்சு நொச்சுன்னு அடிச்சுகிட்டு...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஊர்ல இருக்கிறவன் எல்லாம் ஏதோதே வந்து ஒழிஞ்சி போறானுங்க... இவன் ஒழிய மாட்றானே ... சும்மா ப்ளாக்க படி படின்னு இப்படி உயிர வாங்குறானே ! என்ன யாராவது சாகடிங்க ... சொக்கா
ReplyDeletehaha ROFL :-))
Deleteஇதுக்குபேர்தான் தெளிய வெச்சு அடிக்கிறதா...எங்க ஊருக்கு கொஞ்சம் அனுப்பிவையுங்க நாங்களும் பிரீ தான்.
ReplyDeleteஅந்த மேட்டர இன்னும் விடாம பிடிச்சுகிட்டே இருக்கீங்களேடா :-((
ReplyDelete