March 4, 2012

அரவான் - எளிவனின் விதி


பழைய தமிழகத்தில் பலி கொடுக்கும் பழக்கம் என்று ஒன்று இருந்தது . அதன்படி இரு ஊர்களுக்கு நடுவே அமைதி நிலவ , குற்றங்கள் குறைய ஒருவரை பலி கொடுப்பது வழக்கம் .18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசு பலி முறையை ஒழித்தது . அந்த பலி முறையை சார்ந்து எடுக்கபட்ட படமே அரவான்.கதை :
கொம்பூதி(பசுபதி)யும் , அவர் கூட்டாளிகளும் களவாட செல்லுவது போல் ஆரம்பிக்கிறது படம் .அங்கு வெற்றிகரமாக களவாடி விட்டு வந்த பின்பு அவர்கள் ஊர் பெயரை சொல்லி வரிப்புலி(ஆதி) களவாடுவது தெரிய வருகிறது . அவன் யாரென்று கண்டுபிடித்து அவனிடன் இருந்து அந்த திருட்டுபொருளை மீட்டு எடுக்கிறார் பசுபதி . பின்பு ஆதியின் திறம் கண்டு தங்கள் களவுகூட்டத்தில் சேர்த்துகொள்கிறார் . ஆதியிடம் அவன் யாரென்று கேட்டதற்கு தான் ஒரு அனாதை என்று பதிலளிக்கிறார் . ஒரு கட்டத்தில் பசுபதியின் தங்கை ஆதியின் மீது காதல்வயப்பட பசுபதி ஆதியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்கிறார் . அப்பொழுது ஆதி தனக்கு திருமணம் ஆகிவிட்டது என அதிர்ச்சியான தகவலை கூறுகிறார் . அந்த நேரத்தில் ஒரு ஜல்லிக்கட்டில் பசுபதியின் ஊர் பெயரை சொல்லி ஒருவன் சவாலுக்கு இழுக்கிறான் . அப்பொழுது ஆதி தானும் பசுபதியின் ஊரை சேர்ந்தவனே என்று உண்மையை உடைக்கிறார் . ஜல்லிக்கட்டில் ஆதி ஜெயிக்கும் பொழுது ஒரு கும்பல் அவரை இழுத்து கொண்டு செல்கிறது . அப்பொழுது ஆதி ஒரு ஊரின் பலி ஆடு என்பது தெரியவருகிறது . அதற்கு பின்பு விரிவதே இரண்டாம் பாதியும் , படத்தின் இன்னொரு கதையும் .

ஆதியின் மாஸ்டர்பீசாக இந்த படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை . ஈரம் படத்திற்கு பின்பு ஆதியின் விஸ்வரூபம் இந்த படத்தில் தெரிகிறது . அவருக்கு போட்டி பசுபதியே . படத்தின் இரண்டாம் கதாநாயகனா இல்லை அவர் தான் கதாநாயகனா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது அவரது நடிப்பு .
ஆதி திருடிவிடக்கூடாது என்பதற்காக பசுபதி மரத்தை வெட்ட சொல்வதும் , அதை தனக்கு சாதகம் என்று ஆதி சொல்வதும் செம்ம ரிவீட் . படத்தின் ஆங்காங்கே நகைச்சுவையை தூவிவிட்டு படத்தை அலுக்காமல் கொண்டு சென்றிக்கிறார் இயக்குனர் . கருங்காலியாக வரும் நபர் கிரேட் செலக்‌ஷன் . தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும் இடங்கள் என்றால் சிங்கம்புலி வரும் கொளுந்தியாள் பாகம் தான் . படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் போய் விட்டு இரண்டாம் பாதியை இந்த இழு இழுத்திருப்பது ஏனோ ? .

படத்தில் கதாநாயகிகளுக்கு மிக பெரிய ஸ்கோப் இருக்கும் என்று பார்த்தால் அவர்கள் இடத்தையும் சேர்த்து மற்ற நடிகர்களே ஆக்கிரமித்து கொள்கின்றனர் . முதல் பாதியில் வரும் அர்ச்சனாகவியை(சிமிட்டி) மறந்தும் கூட இரண்டாம் பாதியில் காட்டவில்லை . தன்ஷிகா(பேச்சி) சும்மாக்காச்சுக்கும் வந்து போகிறார் . அஞ்சலி படத்தில் உண்டு என்று நம்பி போனால் அவர் அழுவதை தவிர வேறு ஒரு வேலையும் செய்யவில்லை . பரத் ஏனோ மனதில் ஒட்ட மறுக்கிறார் . ராஜாவாக வருபவர் சில நிமிடம் வந்தாலும் வில்லத்தனத்தை பார்வையிலேயே விதைத்து விட்டு செல்கிறார் . தாசியாக வருபவர் வெள்ளி அரைஞான் கொடியை வைத்து கண்டுபிடிப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தில் ஒன்று .

படத்தில் ஒரு எளியவன் வலியவனால் எப்படி தன் வாழ்க்கையை இழக்கிறான் என்பதை மிகச்சரியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் . தான் செய்யாத ஒரு குற்றத்திற்கு ஒரு மனிதன் பலியாகும் போது என்ன என்ன நிகழும் என்பதற்கு இந்த படம் ஒரு அத்தாட்சி . படத்தின் கருத்து என்று இயக்குனர் கூறுவது ”மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்பதே . பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு மனதில் ஒட்டவில்லை .

படத்தின் பலங்கள் :

பழந்தமிழகம் எப்படி இருக்குமென்று அப்படியே கண் முன் நிறுத்தியதும் , பழந்தமிழரின் வாழ்க்கை எப்படி இருக்குமென்று துல்லிமாக காட்டியது .

களவாடும் முறையை இதுவரை தமிழில் காட்டியிடாதவாறு தெளிவாக காட்டியது .

பசுபதியும் அவர் கூட்டாளிகளும் சேர்ந்து திருடும் காட்சிகள் .

மகாராஜா என்றால் பெரிய அரண்மனை என்று காட்டாமல் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார் என காட்டியது .

சிங்கம்புலியை நகைச்சுவைக்கு மட்டும் உபயோகப்படுத்தாமல் படத்தின் திருப்புமுனைக்கும் பயன்படுத்தியது .

பழந்தமிழர் என்றால் செந்தமிழில் தான் பேசுவார்கள் என்று காட்டாமல் வழக்குமொழியில் பேச வைத்திருப்பது .

அசாதாரணமாக உழைத்த படத்தின் நடிகர்கள் அனைவரும் .

ஈட்டி போன்ற வசனங்கள் (வசந்தபாலன் - வெங்கடேசன்)

எதற்காக பலி கொடுக்கிறார்கள் , பலி தோன்றியதன் வரலாறை சுருக்கமாக ராஜா சொல்லும் காட்சி .

கார்த்திக்கின் இசை (அறிமுகம்)

அசாதாரணமான கோணங்களில் காட்டிய கேமராமேன் சித்தார்த்

அடிசறுக்கும் இடங்கள் :

படத்தின் போஸ்டரில் நிஜமாட்டை காட்டிவிட்டு அந்த காட்சி முழுக்க கிராபிக்ஸ் உபயோகபடுத்தியிருப்பது .

பல இடங்களில் கிராபிக்ஸ் கேவலமாக இருப்பது .

அந்த தேவையில்லாத உன்ன கொல்ல போறேன் பாடல் .

அவசர அவசரமாக முடிக்கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ் .

கருத்து சொல்லி தான் படத்தை முடிக்க வேண்டும் என்று வலிய ஒரு கருத்தை திணித்திருப்பது .

படத்தில் நச் என்று பதிந்த வசனங்கள் :

ஊர்மக்கள் : களவாணிப்பயல கட்டுங்கடா
வரிப்புலி : நான் களவாணின்னா நீங்களாம் யாருடா ?

சிமிட்டி : வாக்கு ஜக்கம்மாதுன்னாலும் நாக்கு சிமிட்டியிது

ஜமீந்தாரின் மனைவி : இந்த கிழவி வெத்தல இடிக்கிறாளா இல்ல வீட்டையே இடிக்கிறாளா ? ஊருக்கு எல்லாம் இவ சத்தம் கேக்குது அந்த எமனுக்கு கேக்காதா ??

அஞ்சலி (இது நச் வசனம் இல்லை இந்த படத்தில் அவர் பேசிய ஒரே வசனம்) : அப்பா இனிமே இவர பாக்க மாட்டன்பா

வரிப்புலி : களவுலேந்து தான் காவல் பொறக்கும்

சிங்கம்புலி : என் பொண்டாட்டிய பாத்துருந்தா கூட விட்டுருப்பன் , ஆனா என் கொழுந்தியாள பாக்குறான்பா

சிமிட்டி : அரவட்ட கல்ல நான் கூட தூக்கிகிட்டு ஓடுவன் 

கூத்து கட்டுபவர் : நான் வாக்கு தவற மாட்டன் . எனக்கு வாக்கு தான் நாக்கு

சிங்கம்புலி : இன்னும் ஒரு வருசம் கழிச்சு வந்துருக்கலாம்ல ?
ஆதி : விதிடா

பசுபதி : தூக்கம் வர்றவன் களவுக்கு வரக்கூடாதுடா

சிங்கம்புலி : யெப்பா கிட்டக்க போவாதப்பா , மாத்தூரான் சின்ன புள்ளைய வச்சு நம்மள புடிக்க பாக்குறான் . கத்திய எடுத்து சொருவிட போறா

டிஸ்கி : தயவுசெய்து மசாலா பட விரும்பிகள் இந்த படத்திற்கு செல்ல வேண்டாம் . பார்த்து விட்டு என்னை திட்டினால் நான் பொறுப்பல்ல .

4 comments:

  1. machi pinra ur written style is very much improvement

    ReplyDelete
  2. நல்லா எழுதி இருக்கடா குட்டி....கடைசியா ஒன்னு சொல்லி இருக்கியே சூப்பருடா "தயவுசெய்து மசாலா பட விரும்பிகள் இந்த படத்திற்கு செல்ல வேண்டாம் . பார்த்து விட்டு என்னை திட்டினால் நான் பொறுப்பல்ல"

    ReplyDelete
  3. நன்றாய் இருக்கிறது இந்த பாணி.ஆழ்ந்து,அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.படத்தில் நச் என்று பதிந்த வசனங்கள் வரை சொல்லியிருப்பது அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete