March 23, 2012

கடலதொரைக்கு கண்ணீர் கடிதம்.......

அன்புள்ள கட்டதொரைக்கு ,

லெட்டரோட ஆரம்பத்துல ஏதோ போனா போகுதேன்னு அன்புள்ளன்னு போட்டுருக்கன் . எப்பவும் போல இந்த வாட்டியும் பஞ்சாயத்துல உன் மேல தான் பிராது குடுத்துருக்காங்க . இந்த வாட்டியும் பிராது உன்னோட கடலை வறுக்குறது பத்தி தான்னு வருத்தத்தோடயும் , ஆத்திரத்தோடயும் சொல்லிக்குறன் .

உன்னோட எஸ்.டி.டீ எனக்கு நல்லாவே தெரியும் . நீ பொறந்தோன உனக்கு வைத்தியம் பாத்த டாக்டர் மெண்டல் ஆனாங்க . அதுக்கு அப்புறம் ஸ்கூல் , காலேஜ் படிச்சப்ப (ச்ச எட்டிபாத்தப்ப) அங்க இருந்தவங்க லூசு ஆனாங்க . அதனால உன் டார்ச்சர் தாங்காம உன்னைய துபாய்க்கு அனுப்புனாங்க . ஆனா நீ அங்கையும் எல்லாரையும் மெண்டலாக்கிட்டு இப்ப ஒட்டகத்த மெண்டல் ஆக்குற வேலைல இருக்கன்னு கேள்விபட்டேன்.

நீ கடல போடு வேணான்னு சொல்லல . ஏன்னா கடல போடுறது ஆண்களின் பிறப்புரிமை . ஆனா நீ மட்டுமே கடல போடாதன்னு தான் சொல்லுறோம் . ட்விட்டருக்கு வந்த ஆரம்பத்துல நான் உன்ன பாத்து தான் கடல போட கத்துக்கிட்டேன் . அப்ப நீ ஒரு பிரபல ட்விட்டரா 700 பாலோயர்சோட இருந்த . அதனால பல பொண்ணுங்கக்கிட்ட கடல போட்ட . அத பாத்து நானும் பிரபல ட்விட்டர் ஆகனும்னு சபதம் எடுத்தன் . அன்னைலேந்து இன்னைக்கு வரைக்கும் அதுக்கு போராடிக்கிட்டு இருக்கன் . இடைபட்ட காலத்துல நானும் ரெண்டு மூணு பொண்ணுக்கிட்ட கடல போட்டுக்கிட்டு இருந்தன் . ஆனா அத பாத்து பொறாமபட்ட நீ எனக்கு எதிரா சதி பண்ணி அந்த பொண்ணுங்ககிட்டயும் நீயே கடல போட்ட . பொறுத்துக்கிட்டேன் . ஏன் , உன் வயசுக்கு நீ அப்படி இருப்பன்னு நெனச்சா  ? இல்ல எனக்கு இன்னும் வயசு இருக்கு வேற பொண்ண உசார் பண்ணலாம்னு தான் . ஆனா அத தப்பா புரிஞ்சுக்கிட்ட நீ என்னை மட்டும் இல்லாம சக ட்விட்டர்கள் கடல போட்ட பொண்ணுங்க மனசயும் கலைச்சு உன்னோட கடல போட வச்ச . 

ஐயர் மாமிக்கிட்ட கடல போட்ட . கேட்டா சமையல் டிப்ஸ் வாங்குறன்னு சொல்லி எங்க வாய அடைச்சுட்ட . உன்னைய எதுக்கு விட்டோம் நீ சொன்ன காரணத்துக்காகவா இல்ல , உன் வயசுக்கு ஏத்த மாதிரி ஆளுங்க கூட பேசுறன்னு . அத நீ அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு சின்ன பொண்ணுங்க கூட எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட.

நீ ஆண்ட்ராயிட் போன் வாங்குன . நாங்க சந்தோசப்பட்டோம் . எங்க குரூப்லயும் ஒரு ஆளு ஆண்ட்ராயிட் போன் வாங்கிட்டாருன்னு . ஆனா நீ அந்த போன் வந்தோன எல்லாருக்கிட்டயும் அதுக்கு ஆப்ஸ் (Apps) எங்க டவுன்லோடனும்னு கேட்ட . அதுக்குன்னே எங்க ஷேக்ன்னு ஒரு ஆம்பள இருக்குறப்ப நீ அத விட்டுட்டு மத்த பொண்ணுங்கக்கிட்ட கேக்க ஆரம்பிச்சுட்ட . அந்த பொண்ணுங்ககிட்ட ஆப்ஸ் கேக்குறன்னு சொல்லி உன்னோட ஆண்ட்ராயிட் போன காட்டி சீன் போட்டு அவங்களையும் உன் பக்கம் இழுத்துக்கிட்ட . இது என்ன நியாயம் கட்டதொர அவர்களே ?

நீ தனியா உன் பேர்ல வெப்சைட் ஆரம்பிச்சப்ப சந்தோசப்பட்டோம் . நாங்களாம் பிலாக் வச்சு காலம் தள்ளிக்கிட்டு இருக்குறப்ப நீ தனியா பெரிய வெப்சைட் ஆரம்பிக்குறன்னு பெருமையா இருந்துச்சு . ஆனா அப்பயும் நீ அடங்கல . வெப்சைட்டுக்கு கோடிங் எழுதுறதுக்கு ஆளு தேடுன . ட்விட்டர்ல எத்தனையோ திறமையான ஆண் டிசைனர்ஸ் இருக்கும் போது நீ அவங்கள எல்லாம் குப்பைதொட்டில போட்டுட்டு , இன்னொரு பொண்ணோட உதவிய தான் தேடுன . அப்புறம் அந்த கோடிங் மேட்டர மறந்துட்டு கடல வறுக்க ஆரம்பிச்சுட்ட .

இம்புட்டு அதுப்பு பண்ணது பத்தாதுன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி 12ப்பு பெயில் ஆன ஒரு பொண்ணுக்கிட்ட பழக ஆரம்பிச்ச . சரி ஏதோ சின்ன பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணுறன்னு எட்டி பாத்தா அந்த பொண்ணுக்கிட்டயும் கடல தான் போட்டுக்கிட்டு இருக்க . அந்த புள்ள உன்னைய மானாவாரியா திட்டுச்சு . ஆனா நீ சண்டைல சட்டையே கிழியாத மாதிரி திருப்பி திருப்பி கடலை போடுற . உன்னைய திருத்தவே முடியாதான்னு நாங்க ஏங்கிகிட்டு இருந்தப்ப தான் உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்த இருக்குற மேட்டரு தெரிஞ்சுது . அத வச்சு உன் டெபாசிட்ட காலி பண்ணலாம்னு பாத்தா நீ ஏதோ பில்லி , சூனியம் வைச்சு எல்லாரையும் அந்த மேட்டர மறக்க வைச்சுட்ட .

அதுக்கு அப்புறம் அண்ணியோட பேஸ்புக் காண்டாக்ட் கிடைச்சு அவங்கக்கிட்ட உன்னைய பத்தி சொன்னன் . அதுக்கு அப்புறம் அண்ணி உன்னைய ரூம்ல கட்டி வைச்சு அடிச்சதுல ரெண்டு நாள் சும்மா இருந்த . அதுக்கு அப்புறம் அவங்களுக்கு நீ செஞ்ச மீன் குழம்ப குடுத்து அவங்கள மட்டையாக்கிட்டு திருப்பி உன் கடல யாவாரத்த ஆரம்பிச்ச.

அண்ணிய தான் கவுத்துட்டன்னு உன் தங்கச்சிக்கிட்ட சொன்னா அவங்கக்கிட்டயும் ஏதோ பேமிலி சாங்கு பாடி உனக்கு ஆதரவா திருப்பிக்கிட்ட . 

சரி உன் தொல்லைய எப்படி ஒழிக்குறதுன்னு உன்கிட்ட பேசி சுமூகமா முடிவுக்கு வரலாம்னு பேசுனதுல , ஒரு ஓட்டெடுப்பு நடத்தி அதுல மெஜாரிட்டி ஆளுங்க சொல்லுறத கேக்குறன்னு சொன்ன . சரி பெரிய மனுசனாச்சேன்னு நானும் ஓட்டெடுப்புக்கு தயார் பண்ணன் . அங்கையும் உன் சித்து வேலைய காட்டி கள்ள ஓட்டு போட்டுருக்க .

இம்புட்டு நாள் எதுக்கு உன் தொல்லைய பொறுத்துக்கிட்டன்னா நீ துபாய்லேந்து வர்றப்ப பேரீச்சம்பழமும் , டிரவுசரும் வாங்கிட்டு வருவன்னு ஒரு நம்பிக்கைல தான் . ஆனா நீ என்னோட அட்ரஸ் தெரியாதுன்னு சொல்லி அனுப்ப முடியாதுன்னு மறுத்துட்ட . அதனால தான் இப்ப நான் பொங்கி எழுந்துட்டன் .

இன்னைக்கு சாயங்காலம் கூடுற பஞ்சாயத்துல உன்னோட வேட்டி உருவப்படும் . அதுக்கு முன்னாடி நீ நல்ல டிரவுசரா உள்ளார போட்டுட்டு வந்துரு .......

இப்படிக்கு , 
கண்ணீருடன் உன் சிஷ்யன் “குட்டி

13 comments:

  1. அடுத்தது யாருக்கு என ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ’ம்’ன்னு ஒரு வார்த்த சொல்லுங்க சித்தப்பு . உங்களுக்கு எதிரா ஒரு பதிவு போட்டுருவோம் . :)))

      Delete
  2. ஹா ஹா - நான் கட்டதொர அவர்களின் கமென்டை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் ... @ஸ்வீட்சுதா1

    ReplyDelete
    Replies
    1. ஆளு இந்நேரம் எத்தன பாலிடாயில் பாட்டில் குடிச்சாரோ தெரியலையே.....

      Delete
  3. ஹா ஹா செம கட்ட பஞ்சாயத்து காத்து இருக்குடி..:)

    ReplyDelete
  4. ம்ம்க்கும்.. இத பிச்சாத்து கடுதாசிகேல்லாம் பயப்படமாட்டான் எங்க கடலை கட்டதுரை.. ஒரு பதிலடி ட்விட்டர் லோங்கேர் வரும் பாரு இப்போ.. (இப்படி உசுப்பேத்தி தான்தான் நமக்கு ஒரு நல்ல சண்டைய வேடிக்க பாக்க முடியும்..)

    ReplyDelete
  5. மச்சி நீ கலக்கு டா.. நமக்கு இல்லைனா யாருக்கும் கூடாது.. தட்டி தூக்கிடலாமா மச்சிய. ..

    ReplyDelete
  6. மச்சி தூக்கிடலாமா.. கட்டதொரைக்கு கட்டம் சரியில்லைனு நினைக்கிறேன்...

    ReplyDelete
  7. இன்று முதல் "கட்டதொரை" "கடலதொரை" என்று அழைக்கபடுவார்
    ஹி ஹி ஹி....

    ReplyDelete
    Replies
    1. அதான் நான் டைட்டில்லயே சொல்லிட்டனே தல ???

      Delete
  8. ஹா ஹா! யாருப்பா அந்த +2 பொண்ணு! ஏம்பா நம்மள மாதிரி இளங்காளைங்களுக்கு மதிப்பு இருக்கா இல்லியா? :))

    ReplyDelete
    Replies
    1. அதுல எல்லா பொண்ணையும் பத்தி சொன்னா மனச பாரு பிளஸ் டூ பொண்ணாம்ல ??? அப்புறமா சொல்லுறன்

      Delete
  9. சட்டம் தன் கடமைய செஞ்சே ஆகணும்

    ReplyDelete